தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மெல்ல மெல்ல பிக்கப் ஆகும் கங்குவா.. ஆறுநாட்களில் இந்தியாவில் வசூல் நிலவரம் என்ன.. எங்கு அதிகம் பேர் பார்க்கின்றனர்?

மெல்ல மெல்ல பிக்கப் ஆகும் கங்குவா.. ஆறுநாட்களில் இந்தியாவில் வசூல் நிலவரம் என்ன.. எங்கு அதிகம் பேர் பார்க்கின்றனர்?

Marimuthu M HT Tamil

Nov 21, 2024, 12:35 PM IST

google News
மெல்ல மெல்ல பிக்கப் ஆகும் கங்குவா.. ஆறுநாட்களில் இந்தியாவில் வசூல் நிலவரம் என்ன.. எங்கு அதிகம் பேர் பார்க்கின்றனர்? என்பது குறித்து அறிவோம்.
மெல்ல மெல்ல பிக்கப் ஆகும் கங்குவா.. ஆறுநாட்களில் இந்தியாவில் வசூல் நிலவரம் என்ன.. எங்கு அதிகம் பேர் பார்க்கின்றனர்? என்பது குறித்து அறிவோம்.

மெல்ல மெல்ல பிக்கப் ஆகும் கங்குவா.. ஆறுநாட்களில் இந்தியாவில் வசூல் நிலவரம் என்ன.. எங்கு அதிகம் பேர் பார்க்கின்றனர்? என்பது குறித்து அறிவோம்.

மெல்ல மெல்ல பிக்கப் ஆகும் கங்குவா மற்றும் ஆறுநாட்களில் இந்தியாவில் வசூல் நிலவரம் என்ன என்பது பற்றியும், பிறநாடுகளில் எவ்வளவு கலெக்‌ஷன் என்பது பற்றியும் அறிவோம். 

நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி முதன்முறையாக ஜோடிபோட்டு நடித்திருந்தார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், நடராஜன் சுப்ரமணியம், கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்நிலையில் இப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் 11,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானதாகக் கூறப்படுகிறது.

கங்குவா படம் எத்தகையது?

ரூ.350 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் ஒன்று, கங்குவா. ஏழுக்கும் மேற்பட்ட நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 35 மொழிகளில் வெளியாகியுள்ளது. கங்குவா திரைப்படத்தில் இந்திய சினிமாவின் மிகப்பெரிய போர்க் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் 10,000-க்கும் மேற்பட்டோர் போர் புரிவதுபோல் நடித்துள்ளனர்.

கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவா, எண்ணூர் துறைமுகம், பிஜி தீவுகள், கொடைக்கானல், ஆந்திர மாநிலத்தின் ராஜமுந்திரி மற்றும் பல்வேறு வெளிநாடு பகுதிகளில் நடைபெற்றது.

முன்னதாக படம் குறித்து பேசிய இயக்குநர் சிறுத்தை சிவா, “உண்மையில் கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்டெழுத்து என்று அழைக்கப்படும் பழங்காலத் தமிழ் ஆகும். இது 3ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வழக்கத்தில் இருந்தது. கங்கு என்றால் ’நெருப்பு’ என்று பொருள். கங்குவா என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள்படும்” என்று பேசியிருக்கிறார், சிறுத்தை சிவா.

கங்குவா எத்தனை கோடி வசூலிக்கும்?:

கங்குவா திரைப்படத்தைப் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ஓடிடி தளம் 80 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.ஜி.எஃப் 2 மற்றும் இந்தி, தெலுங்கு மொழிப் படங்கள் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்துள்ளன. இதுவரை எந்த தமிழ்ப் படமும் அந்த சாதனையை எட்டியதில்லை.

கங்குவாவால் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்ட முடியுமா என்று படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜாவிடம் செய்தியாளர்கல் கேட்டபோது, "நான் ரூ.2000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எதிர்பார்க்கிறேன். அதை ஏன் ரூ.1000 கோடி என்று குறைத்து மதிப்பிடுகிறீர்கள்" என்று நம்பிக்கையுடன் பதிலளித்தார்.

கங்குவா படத்தின் கதை என்ன?

நிகழ்காலத்தில் இருக்கும் பிரான்சிஸிக்கு ஜூடா மூலம் தான் யார் என்பது தெரிய வருகிறது. அங்கே ஆரம்பிக்கிறது கங்குவாவின் கதை. ஐந்து தீவுகளில், பெருமாச்சி தீவின் ஆதர்ச நாயகனாக வலம் வரும் கங்குவாவுக்கும் அவனது குழுவுக்கும், போர் தான் குலத்தொழில் ஆகும்.

வீரமும், இயற்கையும் விளைந்த அந்த மண்ணை தன் வசப்படுத்த நினைக்கிறது ரோமானிய அரசு. அவர்கள் அதற்காக கொடுவனுக்கு பணத்தாசைக் காட்டி அவனை தங்களது வலைக்குள் கொண்டு வருகின்றனர். அவனும் ஆசைகொண்டு, பெருமாச்சி இன மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கிறான்.

உதிரன் என்பவர் பெருமாச்சி மீது போர் தொடுக்க காரணம் என்ன? அப்பாவை கொன்ற கங்குவாவை கொல்லத்துடிக்கும் கொடுவாவின் மகனின் கதை என்ன ஆனது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே படத்தின் கதை ஆகும்.

விமர்சனங்களும் கங்குவா வசூல் நிலவரமும்:

இந்நிலையில் படத்தில் நடிகர் சூர்யா கத்திக்கொண்டே இருப்பதாகவும் பெரும்பாலான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் கங்குவா திரையரங்கு உரிமையாளர்களிடம் வால்யூமை இரண்டு புள்ளிகள் குறைக்கச் சொல்லி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் சொல்லியிருக்கின்றனர்.

இத்தகைய கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் கங்குவா திரைப்படம் வெளியாகி முதல் ஆறு நாட்களில் இந்தியாவில் 60 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இன்று இப்படம் 2.40 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த நவ.19ஆம் தேதிப்படி, உலகம் முழுக்க ரூ.93 கோடி வசூலித்துள்ளதாகவும், வெளிநாடுகளில் ரூ.22.2 கோடி வசூலித்துள்ளதாகவும், sacnilk இணையதளம் தெரிவித்துள்ளது.

இப்படத்தை சென்னையில் 19.25 விழுக்காடு பேரும், பெங்களூருவில் 9.75 விழுக்காடு பேரும், மும்பையில் 27 விழுக்காடு பேரும் கொச்சினில் 31 விழுக்காடு பேரும் நேற்றைய நிலவரப்படி பார்த்துள்ளனர்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை