“முதல் ½ வொர்க் அவுட் ஆகல; வெற்றி கேமரா வேற லெவல்; அந்த ஆக்‌ஷன் காட்சி இருக்கே” - கங்குவா விமர்சனத்திற்கு ஜோதிகா பதில்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “முதல் ½ வொர்க் அவுட் ஆகல; வெற்றி கேமரா வேற லெவல்; அந்த ஆக்‌ஷன் காட்சி இருக்கே” - கங்குவா விமர்சனத்திற்கு ஜோதிகா பதில்

“முதல் ½ வொர்க் அவுட் ஆகல; வெற்றி கேமரா வேற லெவல்; அந்த ஆக்‌ஷன் காட்சி இருக்கே” - கங்குவா விமர்சனத்திற்கு ஜோதிகா பதில்

Kalyani Pandiyan S HT Tamil
Nov 18, 2024 10:19 PM IST

கங்குவாவிடம் சிறுவன் செலுத்தும் அன்பு மற்றும் இழைக்கும் துரோகம் உள்ளிட்டவற்றை விமர்சனத்தில் சொல்ல மறந்து விட்டார்கள். - கொடுத்திருக்கிறார்.

“முதல் ½ வொர்க் அவுட் ஆகல; வெற்றி கேமரா வேற லெவல்; அந்த ஆக்‌ஷன் காட்சி இருக்கே”
“முதல் ½ வொர்க் அவுட் ஆகல; வெற்றி கேமரா வேற லெவல்; அந்த ஆக்‌ஷன் காட்சி இருக்கே”

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் பேனர்களில் கே.இ.ஞானவேல் ராஜா, வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் கூட்டாக கங்குவா திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் நவம்பர் 14-ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 35 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் ஜோதிகா பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “இந்தப்பதிவை நான் சூர்யாவின் மனைவியாக எழுத வில்லை. மாறாக ஜோதிகாவாகவும், சினிமா காதலிப்பவளாகவும் எழுதுகிறேன். கங்குவா திரைப்படம் ஒரு சிறந்த சினிமா. சூர்யாவை நினைத்து பெருமை படுகிறேன். சினிமாவை முன்னோக்கி கொண்டு செல்லும் நடிகராக நீங்கள் இருக்கிறீர்கள். உண்மையாகச் சொல்கிறேன். படத்தின் முதல் அரைமணிநேரம் வொர்க் அவுட் ஆகவில்லைதான். சவுண்டும் அதிகமாக இருந்தது.

இந்திய திரைப்படங்களில் தவறுகள்

பெரும்பான்மையான இந்திய திரைப்படங்களில் தவறுகள் நடப்பது என்பது ஒரு அங்கமாக இருக்கிறது. ஆக, இதுதான் உண்மை. ஆனால் இது 3 மணி நேர திரைப்படத்தில் வெறும் 1/2 மணி நேரம் மட்டுமே.. ஆனால் உண்மையாக இந்தத்திரைப்படம் ஒரு மிகச்சிறந்த அனுபவம். படத்தின் ஒளிப்பதிவும், அதனை மெருகேற்றிய விதமும், இதுவரை தமிழ் சினிமா பார்க்காத ஒன்று. ஆனால், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் எதிர்மறையான விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளன. காரணம், இதற்கு முன்னதாக ஒரு பெண்ணை பின் தொடர்ந்து தொந்தரவு செய்தல், இரட்டை அர்த்த வசனங்களில் பேசுதல், அளவுக்கு அதிகமான ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெறச்செய்தல் உள்ளிட்டவை இடம் பெற்ற அறிவற்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு இந்த அளவிலான நெகட்டிவ் விமர்சனங்கள் வரவில்லை.

 

 

2ம் பாதியில்

கங்குவாவின் பாசிட்டிவான விஷயங்களை பார்க்கும் போது, 2 ஆம் பாதியில் இடம் பெற்ற பெண்களின் ஆக்‌ஷன் காட்சி, கங்குவாவிடம் சிறுவன் செலுத்தும் அன்பு மற்றும் இழைக்கும் துரோகம் உள்ளிட்டவற்றை விமர்சனத்தில் சொல்ல மறந்து விட்டார்கள். விமர்சனங்களை பார்க்கும் போது, இனி இதையெல்லாம் பார்க்க வேண்டுமா? படிக்க வேண்டுமா? நம்ப வேண்டுமா என்று தோன்றுகிறது.

 

முதல் நாளிலேயே கங்குவா திரைப்படத்திற்கு இப்படியான நெகட்டிவிட்டியை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இன்னும் ஒரு படி மேலே சென்று சொல்லப்போனால், முதல் காட்சி முடிவதற்குள்ளாகவே சில குழுக்கள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு படக்குழு எடுத்திருக்கும் முயற்சி ஆச்சரியப்பட வைக்கிறது. கங்குவாவை உருவாக்கிய நீங்கள் பெருமிதத்தோடு இருங்கள். எதிர்மறையான கருத்துக்களை வெளியிடுபவர்கள் சினிமாவிற்காக வேறு எதனையும் செய்யவில்லை” என்று பதிவிட்டு இருக்கிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.