தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அதிகரிக்கும் பாசிடிவ் ரிவ்யூ கை கொடுக்கிறதா கங்குவாவிற்கு? 6ம் நாள் வசூல் என்ன?

அதிகரிக்கும் பாசிடிவ் ரிவ்யூ கை கொடுக்கிறதா கங்குவாவிற்கு? 6ம் நாள் வசூல் என்ன?

Nov 20, 2024, 12:02 PM IST

google News
கங்குவா திரைப்படத்திற்கு கடந்த 2 நாட்களாக பல இடங்களில் இருந்தும் பாசிட்டிவ் விமர்சனம் வந்த நிலையில் ஹிந்தி மற்றும் தெலுங்கில் படத்தின் வசூல் அதிகரித்துள்ளது.
கங்குவா திரைப்படத்திற்கு கடந்த 2 நாட்களாக பல இடங்களில் இருந்தும் பாசிட்டிவ் விமர்சனம் வந்த நிலையில் ஹிந்தி மற்றும் தெலுங்கில் படத்தின் வசூல் அதிகரித்துள்ளது.

கங்குவா திரைப்படத்திற்கு கடந்த 2 நாட்களாக பல இடங்களில் இருந்தும் பாசிட்டிவ் விமர்சனம் வந்த நிலையில் ஹிந்தி மற்றும் தெலுங்கில் படத்தின் வசூல் அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவில் உருவான பிரம்மாண்ட படமாக கங்குவா இருக்கும் என படக்குழு கொடுத்த பில்டப்களை நம்பி படத்திற்கு போன பலருக்கும் கங்குவா திருப்திகரமாக இல்லாமல் போனது.

இதனால் படம் முடித்து வெளியே வந்தவர்கள் படத்தை மட்டுமின்றி, படக்குழுவையும் மிக மோசமாக விமர்சித்து வந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜோதிகா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.

விமர்சனங்கள்

இதையடுத்து, கொஞ்சமாவது வந்து கொண்டிருந்த வசூலும் தற்போது நின்றுள்ளது. தமிழ்நாட்டில் தினமும் 6 முதல் 5 கோடி ரூபாய் வசூலைப் பெற்று வந்த கங்குவா நேற்று வெறும் 1 கோடிக்கும் சற்று அதிகமான வசூலைத் தான் பெற்றுள்ளது. ஆனால், கடந்த 2 நாட்களாக படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

கங்குவா

நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி முதன்முறையாக ஜோடிபோட்டு நடித்திருந்தார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், நடராஜன் சுப்ரமணியம், கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்நிலையில் இப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் 11,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.

கங்குவா வசூல்

இந்நிலையில், கங்குவா படத்தின் வசூல் நிலவரம் குறித்து sancnilk.com எனும் வலைதளம் வெளியிட்ட தகவல்களைப் பார்ப்போம்.

இந்தத் தளம் அளித்த தகவலின் படி பார்த்தால், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் படத்தின் வசூல் அதிகரித்துள்ளது தெரிகிறது.

கங்குவா திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 14.9 கோடி ரூபாயை வசூலித்தது. இந்நிலையில் படம் வெளியான 6ம் நாளான நேற்று முதல் நாள் வசூலில் பாதி கூட இல்லாமல் வெறும் 1.33 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. 6 நாட்களில் மொத்தமாக படம் 39.98 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்திருந்தது.

அதேபோல இந்திய அளவில் படம் வெளியான 6 நாட்களில் மொத்தம் 67 கோடி ரூபாயும் உலக அளவில் படம் 89 கோடி ரூபாயும் வசூலித்ததாகத் தெரிகிறது.

சூர்யா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா படம் வெளியான முதல் காட்சியில் இருந்தே எதிர்மறை விமர்சனங்கள் அதிகளவில் இருந்ததால், படம் பார்க்க செல்வோரின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.

கங்குவா ரெக்கார்டு

ரூ.350 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் ஒன்று, கங்குவா. ஏழுக்கும் மேற்பட்ட நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 35 மொழிகளில் வெளியாகியுள்ளது. கங்குவா திரைப்படத்தில் இந்திய சினிமாவின் மிகப்பெரிய போர்க் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் 10,000-க்கும் மேற்பட்டோர் போர் புரிவதுபோல் நடித்துள்ளனர்.

கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவா, எண்ணூர் துறைமுகம், பிஜி தீவுகள், கொடைக்கானல், ஆந்திர மாநிலத்தின் ராஜமுந்திரி மற்றும் பல்வேறு வெளிநாடு பகுதிகளில் நடைபெற்றது.

ஆராய்ச்சியில் இறங்கிய சிறுத்தை சிவா

முன்னதாக படம் குறித்து பேசிய இயக்குநர் சிறுத்தை சிவா, “உண்மையில் கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்டெழுத்து என்று அழைக்கப்படும் பழங்காலத் தமிழ் ஆகும்.

இது 3ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வழக்கத்தில் இருந்தது. கங்கு என்றால் ’நெருப்பு’ என்று பொருள். கங்குவா என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள்படும்” என்று பேசியிருக்கிறார், சிறுத்தை சிவா.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை