அடேங்கப்பா.. பட்ஜெட்டே 350 கோடியாம்… கங்குவா படத்திற்கு சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அடேங்கப்பா.. பட்ஜெட்டே 350 கோடியாம்… கங்குவா படத்திற்கு சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அடேங்கப்பா.. பட்ஜெட்டே 350 கோடியாம்… கங்குவா படத்திற்கு சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Nov 13, 2024 04:11 PM IST

கங்குவா படத்திற்கு நடிகர் சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? - மொத்த விபரங்கள் இங்கே!

அடேங்கப்பா.. பட்ஜெட் 350 கோடியாம்… கங்குவா படத்திற்கு சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அடேங்கப்பா.. பட்ஜெட் 350 கோடியாம்… கங்குவா படத்திற்கு சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்காக 39 கோடி சம்பளமாக பெற்று இருக்கிறாராம். அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் பாபி தியோல் இந்தப்படத்திலும் வில்லனாக நடித்து இருக்கிறார். அவருக்கு 5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை திஷா பதானிக்கு 3 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

நாளை வெளியாக இருக்கும் இந்தப்படம் 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார்.

படையெடுக்கும் ரசிகர்கள்

கங்குவா படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அண்டை மாநிலங்களான கேரள, ஆந்திரா, கர்நாடகாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தை முன்னரே பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் ரசிகர்கள் பலரும் அண்டை மாநிலத்துக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்

கங்குவா படத்துக்கு பக்கத்து மாநிலங்களில் அதிகாலை காட்சி திரையிடப்பட இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அனுமதி அளிக்காததற்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஏன் அதிகாலை காட்சி தமிழ்நாட்டில் நிறுத்தப்பட்டது?

பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் நாளில் மிட்நைட் ஷோ, அதிகாலை காட்சிகள் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டு வந்தன. இந்த காட்சியை காண குறிப்பிட்ட நடிகரின் ரசிகர் என்றில்லாமல், பொதுமக்களும் திரையரங்குக்கு சென்று கொண்டாட்டத்துடன் பார்த்து வந்தனர்.

கடந்த ஆண்டு பொங்கல் வெளியீட்டின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக அதிகாலை காட்சிகளை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த முடிவு விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், அந்த சம்பவத்துக்கு பிறகு எந்த பெரிய நடிகராக இருந்தாலும், எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் காலை முதல் காட்சியானது 9 மணி என கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மற்ற மாநிலங்களில் தமிழ் திரைப்படங்கள், தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே வெளியிடப்படுவதால், ரசிகர்கள் பலரும் முண்டியடித்துக்கொண்டு அங்கு சென்று படங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் இதனால் முதல் நாள் வசூலில் பாதிப்பை சந்தித்து வருவதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டாலும், அரசு தனது முடிவில் தற்போது வரை உறுதியாக உள்ளது.

கங்குவன் என்பது ஒரு மொழி.

இந்த திரைப்படம் தொடர்பாக இயக்குநர் சிவா பேசும் போது, " உண்மையில் கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்டெழுத்து என்று அழைக்கப்படும் பழங்காலத் தமிழ் ஆகும். இது 3 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு வழக்கத்தில் இருந்தது. கங்கு என்றால் நெருப்பு என்று பொருள். கங்குவன் என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள்படும்” என்று பேசினார்.

மேலும் பேசிய அவர், “கங்குவன் திரைப்படத்தை நாங்கள் 10 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். படத்தில் சூர்யா சார் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் கவர்ச்சியாகவும், சக்திவாய்ந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் ஃபேண்டஸி கலந்த திரைப்படமாக இருக்கும்.

அருமையான அனுபவம்.

இதில் பீரியாடிக் சம்பந்தப்பட்ட காலமும், சமகாலம் என இரண்டும் கலந்து இருக்கும். நாங்கள் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்க விரும்புகிறோம். ஒரு கம்பீரமான மற்றும் மறக்கமுடியாத திரைப்படம் கொடுக்கும் அனுபவம் அனைவரையும் கவர்ந்து இழுக்கும்.” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர்," சூர்யா சாருடன் பணிபுரிந்தது அருமையான அனுபவம். அவர் ஒரு சிறந்த நடிகர்; ஒரு சிறந்த மனிதர்; அவருடன் வேலை பார்த்தது வசதியாக இருக்கிறது. அவர் எங்களின் வேலையில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். மொத்த குழுவும் இந்த வாய்ப்பை எப்படியான ஒரு வாய்ப்பு என்பதை உணர்ந்து இருக்கிறது. தயாரிப்பாளர்களும் இந்த கதையை நம்பி என்னுடைய விஷனை பெரிய திரையில் கொண்டு வர விரும்பி இருக்கிறார்கள்.” என்றார்.

இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கால் பதித்து இருக்கும் திஷா பதானி சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். மேலும் அவர் தனக்கு இது தனித்துவமான அனுபவமாக இருந்தது என்றும் கூறினார். போஸ்டரில் காண்பிக்கப்பட்டு இருக்கும் கழுகு, டைட்டில் அறிவிப்பு வீடியோவில் வந்த நாய் மற்றும் குதிரை ஆகியவற்றுக்கு படத்தின் கதையில் சம்பந்தம் இருக்கிறது” என்றார்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.