துணிந்து இறங்கிய விஜய்.. மனசு முழுக்க திமுகவினருக்கு வக்கிரம்.. இன்றைய தலைமுறையினரின் நம்பிக்கை விஜய்.. சவுக்கு சங்கர்
Oct 31, 2024, 06:48 PM IST
துணிந்து இறங்கிய விஜய்.. மனசு முழுக்க திமுகவினருக்கு வக்கிரம்.. இன்றைய தலைமுறையினரின் நம்பிக்கை விஜய் என பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் பேட்டியளித்துள்ளார்.
அரசியிலில் துணிந்து இறங்கிய விஜய் பற்றியும், மனசு முழுக்க திமுகவினருக்கு வக்கிரம் இருப்பது பற்றியும், இன்றைய தலைமுறையினரின் நம்பிக்கை விஜய் குறித்தும் சவுக்கு சங்கர் பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ரெட் பிக்ஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’ விஜய்யின் மாநாடு வெற்றிகரமாக நடந்துமுடிந்திருக்கிறது. அதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். சரி, 1990-களின் முற்பகுதியில் கலைஞர் தன் மகன் ஸ்டாலினைவிட வைகோ முதன்மையாக வருகிறார் என்பதை உணர்ந்து, வைகோ மீது கொலைப்பழி சுமத்தி திமுகவை விட்டு வெளியேற்றுகிறார். அப்போது வைகோவுக்கு ஆதரவாக நடந்த பேரணியில், காசு கொடுத்துக்கூப்பிடாமல் கூடிய கூட்டம் என்பது திமுகவினர், அதிமுகவினர் இதுவரைக் கூட்டாதது. அப்போது வைகோ, திமுகவை விட்டு வெளியில் வந்து மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தார்.
தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது - சவுக்கு சங்கர்:
இப்போது தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது. இருபெரும் அரசியல் தலைவர்கள் இல்லை. நம் காலத்தோடு ஒப்பிடும்போது, இப்போது இருக்கும் இளம் தலைமுறையினர் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். உங்களுக்கும் நமக்கும் பேப்பர் தான் வழி. இன்றைய சோசியல் மீடியாவில் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் டீன்ஸ்-களுக்கு அரசியல்சார்ந்த செய்திகள் போய்ச்சேரத்தான் செய்கின்றன. பெரும்நம்பிக்கையான அரசியல் தலைவர்கள் இல்லாதபோது, இப்போது இருக்கும் டீன்ஸ் விஜய்யால் ஈர்க்கப்படத்தான் செய்வார்கள்.
விஜய் சினிமாவில் இன்றைக்கு நம்பர் ஒன் குதிரை. அவர் கீழே போக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆகும். அவரைக் கீழே தள்ள கண்ணுக்கெட்டிய தூரம்வரை புதியவர்கள் வரப்போவதில்லை. ஏனென்றால், ரூ.1000 கோடி வரை அவரது படங்கள் வசூல்செய்கின்றன.
அப்படிப்பட்ட இடத்தில் இருந்து ஒருவர் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் வருகிறேன் என்கிறார். அது நடக்குதா என்பதை காலம் முடிவு செய்யும். ஆனால், அவ்வளவு உச்ச இடத்தில் இருந்து மக்களுக்காக ஒருவர் வருகிறார் என்பதால் தான், அவருக்கு இவ்வளவு வரவேற்பு.
உச்ச நடிகர்கள் முன்பு செய்த அட்ராசிட்டிகள்:
உச்ச நடிகராக இருந்தவர்கள் கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது அவர்களுக்கு ஆதரவாக ஒரு பேச்சு, ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது அவர்களை வீரமங்கை எனப் பேசுவது. இவங்க ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால்கூட, தமிழ்நாட்டைக் காப்பாத்த முடியாது அப்படின்னு சொல்வது. கடைசியில் ஓட்டுப்போட்டுட்டு இரட்டை இலையைத்தூக்கி காட்டிட்டுப்போறது. இன்னொரு நடிகர் டார்ச்சை லைட்டைத் தூக்கி எரியுறது. நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்காமாட்டேன் என்பது. பின், அந்த டீமுடம் சென்று, இணைந்துகொள்வது. இது எல்லாவற்றையும் மக்கள் பார்க்கிறார்கள்.
இன்றைக்கு விஜய் நினைத்து இருந்தால் மயில் இறகால் பாஜக மட்டும், திமுகவை வருடியிருக்கலாம். இன்று அவர் சந்தித்துக்கொண்டு இருக்கும் ஆபாச அர்ச்சனைகளைச் சந்திக்காமல் போயிருக்கலாம். ட்ரோல் பண்றது, கலர் பூச நினைப்பது எல்லாத்தையும் அறிந்து துணிந்து இறங்குகிறார், விஜய்.
திமுகவை எதிர்க்க வேண்டிய கட்சியாக விஜய் உணர்வதால், அதை நிறுவ விஜய் முயற்சிக்கிறார். உதயநிதியிடம் விஜய் பற்றி கேட்கும்போது, ஆர்.எஸ். பாரதி பேசிவிட்டார் எனச் சொல்கிறீர்கள். உதயநிதிக்கு, இதற்குப் பதில் சொல்வதைவிட என்ன இருக்கப்போகிறது. இப்போதைய தலைமுறை மாற்றம் என்பது பிறக்கும்போதே ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் தலைமுறையாக இருக்கிறது. விஜய்யிடம் தனிநபர் தாக்குதல் நடத்தலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள்.
முன்பெல்லாம், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அம்மையாரும் திமுகவினரை தீயசக்தி என்று சொல்லும்போது வருத்தமாக இருக்கும். ஆனால், அது இப்போது தான் புரிகிறது. மனசு முழுக்க திமுகவினருக்கு வக்கிரம். அசிங்கமாக பேசுறதுக்கு என்றே சில பேச்சாளர்களை வைத்திருக்கும் கட்சி, திமுக. இவ்வளவு பெரிய கேரியரை தூக்கிப்போட்டு வருகிறவர்களுக்குப் பயம் இருக்குமா?.
விஜய்யை எதிர்ப்பதற்கு திமுக அஜித்தை கையில் எடுக்கிறது. இவ்வளவு நாட்கள் இல்லாமல், அன்பில் மகேஷ் அஜித் ரேஸ் விடுவதற்கு வாழ்த்துகள் சொல்வதும், உதயநிதி வாழ்த்துகள் சொல்வதும் எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது பார்த்திருக்கீங்களா?’’ எனப் பேசுகிறார், சவுக்கு சங்கர்.
நன்றி: ரெட் பிக்ஸ் 24*7
பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!
டாபிக்ஸ்