Vindhya: ‘அம்மாவுக்கு ஃபில்டர் காஃபின்னா உசுரு.. ரசம்னா உருளைக்கிழங்கு பொரியல் வேணும்’ -ஜெயலலிதா குறித்து விந்தியா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vindhya: ‘அம்மாவுக்கு ஃபில்டர் காஃபின்னா உசுரு.. ரசம்னா உருளைக்கிழங்கு பொரியல் வேணும்’ -ஜெயலலிதா குறித்து விந்தியா!

Vindhya: ‘அம்மாவுக்கு ஃபில்டர் காஃபின்னா உசுரு.. ரசம்னா உருளைக்கிழங்கு பொரியல் வேணும்’ -ஜெயலலிதா குறித்து விந்தியா!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 10, 2024 12:47 PM IST

Vindhya: அவர்கள் சொன்ன விஷயத்தை செய்யாமல், சொந்தமாக யோசித்து ஏதோ செய்கிறேன் என்று செய்தாலும் கோபப்படுவார்கள். உண்மையில் ஜெயலலிதா அம்மாவிற்கு நகைச்சுவை உணர்வு அதிகம். - ஜெயலலிதா குறித்து விந்தியா!

Vindhya: ‘அம்மாவுக்கு ஃபில்டர் காஃபின்னா உசுரு.. ரசம்னா உருளைக்கிழங்கு பொரியல் வேணும்’ -ஜெயலலிதா குறித்து விந்தியா!
Vindhya: ‘அம்மாவுக்கு ஃபில்டர் காஃபின்னா உசுரு.. ரசம்னா உருளைக்கிழங்கு பொரியல் வேணும்’ -ஜெயலலிதா குறித்து விந்தியா!

இது குறித்து பிஹைண்வுட்ஸ் சேனலுக்கு பேசிய அவர், “ ஜெயலலிதா அம்மாவிற்கு பொய் சொன்னால் பிடிக்கவே பிடிக்காது. சடாரென்று அவர்களுக்கு கோபம் வந்துவிடும். அதேபோல அவர்கள் சொன்ன விஷயத்தை செய்யாமல், சொந்தமாக யோசித்து ஏதோ செய்கிறேன் என்று செய்தாலும் கோபப்படுவார்கள். உண்மையில் ஜெயலலிதா அம்மாவிற்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

அவர்களுக்கு உணவு என்றால் அவ்வளவு இஷ்டம். அவர்கள் போல நம்மால் ருசித்து ரசித்தெல்லாம் சாப்பிடவே முடியாது. நீங்கள் எங்கே எது நன்றாக இருக்கும் சொன்னாலும், அதனுடைய முழு விவரமும் அவருக்குத் தெரியும். இன்றைய தினம் அவருக்கு என்ன வேண்டும் என்பதை அவரே எழுதிய கொடுத்து விடுவார் என்று சொல்வார்கள்.

உணவு சாப்பிடும் ஜெயலலிதா
உணவு சாப்பிடும் ஜெயலலிதா

ரசம் இருந்தால் அவருக்கு உருளைக்கிழங்கு பொரியல் இருக்க வேண்டும். இதே போல ஒவ்வொரு உணவுக்கும், அதற்கு ஏற்ற உணவை வாங்கி சாப்பிடுவார். ஃபில்டர் காஃபி என்றால் அவ்வளவு பிடிக்கும். எத்தனை முறை கொடுத்தாலும் குடித்துக் கொண்டே இருப்பார்.” என்று பேசினார்.

மேலும் பேசிய அவர், “2008 ஆம் ஆண்டு என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவு வந்தது. என் வாழ்க்கையின் மிகவும் கருப்பான பக்கம் என்று நான் அதனைச் சொல்வேன். காரணம் என்னவென்றால், எனக்கு அப்போது சினிமா வாய்ப்புகள் இல்லை. நான் மிகவும் குண்டாகி விட்டேன். நானும் கதாநாயகி தவிர்த்து வேறு கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று இருந்த காரணத்தால், யாரும் என்னை வந்து அணுக வில்லை படிப்பும் பெரிதாக இல்லை. அப்படி இருக்கும் பொழுது இனிமேல் நான் என்ன செய்யப் போகிறேன் என்ற ரீதியில் எனக்குள்ளே கேள்விகள் என ஆரம்பித்தன. 2006 ஆம் ஆண்டு நான் அரசியலில் வந்திருந்தாலும் நான் பெரிதாக பிரபலமாகவில்லை.

விநோதினி
விநோதினி

2009-ல் நாடாளுமன்ற தேர்தலுக்காக, ஜெயலலிதா அம்மா இன்னைக்கு பிரச்சாரம் செய்ய போகச் சொன்னார். ஆனால் நான் அப்போது மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததால், நான் செல்லவில்லை என்று கூறினேன். அதற்கு அவர் மக்களைப் பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும், செல்லுங்கள் என்றார். இதனையடுத்து நான் பிரச்சாரத்திற்கு சென்றேன்.

அந்த பிரச்சாரம் முடிந்து திரும்பி வந்த பிறகு திமுக தரப்பிலிருந்து மிரட்டல்கள், தேவையில்லாத வார்த்தைகளெல்லாம் வந்தன. அதற்காகவே நான் தமிழை இன்னும் தெளிவாக கற்றுக் கொள்ள பயிற்சி செய்தேன். அதிமுகவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை விட, திமுகவை பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே படித்தேன்.

2011 ஆம் ஆண்டு ஊர் ஊராகச் சென்று நான் பிரச்சாரம் செய்தேன் அந்த காலகட்டத்தில் நான் செல்லாத மாவட்டமே இல்லை என்ற ரீதியில், அம்மா என்னை எல்லா இடத்திற்கும் அனுப்பினார் என்னை அவரின் மகளாகவே அவர் பாவித்தார். நான் பிரச்சாரத்திற்கு செல்லும் பொழுது, எனக்காக போலீஸ் பாதுகாப்பு நியமித்தார். பிரச்சாரத்தின் போது இந்த இடத்தில் ஸ்டாலினுக்கு கவுண்டர் தர வேண்டும், இன்னொரு இடத்தில் கனிமொழிக்கு கவுண்டர் கொடுக்க வேண்டும் என்று அவரை நேரடியாக என்னிடம் சொல்வார்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.