அப்பாவின் இழப்பு..அம்மாவை துளைத்தெடுத்த வயிற்றுவலி; தர்காவில் கிடைத்த விமோசனம்; ஓவர் நைட்டில் உலகபுகழ் -ரஹ்மானின் கதை!
Nov 24, 2024, 08:09 AM IST
அப்பாவின் இழப்பு..அம்மாவை துளைத்தெடுத்த வயிற்றுவலி; தர்காவில் கிடைத்த விமோசனம்; ஓவர் நைட்டில் உலகபுகழ் என ரஹ்மான் தன்னுடைய வாழ்க்கையில் பார்த்த துன்ப இன்பங்களை இங்கே பார்க்கலாம்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இளமை காலம் குறித்து பத்திரிகையாளர் பாண்டியன் ரியல் ஒன் மீடியா சேனலுக்கு பேசி இருக்கிறார்.
ஏ ஆர் ரஹ்மான் வன்னியர் சமூகத்தைச் சார்ந்த ஒரு இந்து. அவரது அப்பா சேகர் ஒரு இசையமைப்பாளர். ஏ ஆர் ரஹ்மான் சிறு வயதாக இருக்கும் பொழுதே அவர் இறந்து விட்டார். இதனால், குடும்ப பாரம் முழுவதும் ஏ ஆர் ரஹ்மானின் தலையில் இறங்கியது. அவரது அப்பா இருக்கும் பொழுது ரஹ்மானுக்கு பள்ளிப்படிப்பு சொல்லிக் கொடுப்பதை விட, இசைக்கல்வியை சொல்லிக் கொடுக்கலாம் என்று, ஆரம்பம் முதலே அதனை அவருக்கு பயிற்றுவித்துக் கொண்டு வந்தார்.
அவரது அப்பா இளையராஜா குரூப்பில் இசைக்கலைஞராக பணியாற்றி வந்தவர். இதனையடுத்து அவர் இறந்த உடன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அங்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இளையராஜாவின் குழுவில் கீபோர்டு வாசிக்கும் இளைஞராக பணியாற்றிய அவர், அதன் பின்னர் அங்கிருந்து பல்வேறு இசையமைப்பாளர்களிடம் கீபோர்டு வாசிக்கும் கலைஞராக வேலை பார்த்தார். தொடர்ந்து கல்லூரியில் சேர்ந்து கிளாசிக் மியூசிக் பட்டத்தையும் வாங்கினார். இதுதான் அவருக்கான அடித்தளம்.
தீராத வயிற்று வலி ஏற்படுகிறது
இந்த காலகட்டத்தில்தான் அவரின் அம்மாவிற்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. எங்கெங்கோ சென்று, ஏதேதோ வைத்தியங்கள் செய்கிறார்கள். எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் முஸ்லீம் பெரியவர் ஒருவர், கோவளத்தில் இருக்கும் தர்காவிற்கு சென்று வழி பட்டு வாருங்கள். உங்களது நோய் தீரும் என்று கூற, மொத்தம் குடும்பமும் அங்கு செல்கிறது.
அங்கு அவருக்கு அந்த வயிற்று வலி சரியாகிறது; அதில் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக, மொத்த குடும்பமும் இஸ்லாமிய மதத்திற்கு மாறியது. வாழ்க்கை அப்படியே சென்று கொண்டிருக்க, பாலச்சந்தர், மணிரத்னம், இளையராஜாவிற்கு இடையே ஏற்பட்ட சண்டை, ஏ ஆர் ரஹ்மானின் பக்கம் திரும்பியது. இளையராஜாவிற்கு மாற்றாக ஒரு இளைஞனை இந்தத்திரை துறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்த அவர்கள், ஏ ஆர் ரஹ்மானை தேர்வு செய்து ரோஜா படத்தில் இசையமைக்க வைத்தார்கள்.
13 வயதில் அப்பா இறக்கிறார். அதன் பின்னர் முழுக்க, முழுக்க இசை… இதனால் ரஹ்மானுக்கு வெளி உலக பழக்கமே இல்லாமல் இருந்தது. இதற்கிடையே, ரோஜா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி புகழின் உச்சத்திற்கே சென்று விட்டார் ரஹ்மான். அதைப் பார்த்த பல தமிழ் நடிகைகள் ஏ ஆர் ரஹ்மானை அணுகி கல்யாண ஆசையை வெளிப்படுத்துகிறார்கள். இந்த நிலையில் தான் ரஹ்மான் அம்மாவிடம் சென்று தனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறுகிறார். இந்த நிலையில்தான் வயிற்று வலிக்கு சென்று வந்த தர்காவிற்கு, அடிக்கடி வந்து செல்லும் குடும்பமான சாய்ரா பானுவின் குடும்பத்தை அணுகி, சாய்ரா பானுவை ரஹ்மானுக்கு மணமுடித்து வைத்தார் அவரது அம்மா” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்