மூட்டு வலி பாதிப்பு ஏற்படுவதை தடுக்க என்னென்ன வழிகள் என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Nov 15, 2024

Hindustan Times
Tamil

காயம், வைட்டமின் மற்றும் தாதுக்கள் குறைபாடு காரணமாக மூட்டு வலி ஏற்படுகிறது

மூட்டு வலி பாதிப்பு ஏற்படுவதை சில வாழ்க்கை முறை பழக்ககங்களை பின்பற்றுவதன் மூலம் தடுக்கலாம்

வழக்கமான உடற்பயிற்சிகளை தவறாமல் மேற்கொள்வதன் மூலம் மூட்டு பகுதியில் உள்ள தசைகளை வலுபெறும். இதன் நெகிழ்வு தன்மை கிடைப்பதுடன், உடல் ஆரோக்கியமும் பராமரிக்கப்படும்

சிறிய காயங்கள் ஏற்பட்டார் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் வீக்கம் ஏற்படுவது தடுக்கப்படுவதுடன் விரைவாக காயத்தை ஆற்றுப்படுத்த உதவுகிறது

அன்றாட நடவடிக்கை மேற்கொள்வதற்கு உகந்தவாறு மூட்டு பகுதிக்கு அழுத்தம் கொடுக்காத வகையில் காலணி அல்லது ஷூக்களை அணிய வேண்டும். நன்கு குஷன் உள்ளதாக இவை இருக்க வேண்டும்

சீரான உடல் எடையை பராமரிக்க வேண்டும். இதன் மூலம் மூட்டு பகுதிக்கு அழுத்தம் ஏற்படுவது குறையும்

மூட்டுக்கு அதிக அழுத்தம் தரும் எந்த வேலையும் செய்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஓட்டம், குதித்தல் போன்றவற்றை தேவையில்லாமல் செய்ய கூடாது 

மீல் மேக்கர் தரும் நன்மைகள்