தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தனுஷின் உண்மை முகத்தை தோலுரித்த நயன்தாரா.. நிஜத்தில் நயன்தாரா எப்படி.. புட்டு புட்டு வைத்த செய்யாறு பாலு

தனுஷின் உண்மை முகத்தை தோலுரித்த நயன்தாரா.. நிஜத்தில் நயன்தாரா எப்படி.. புட்டு புட்டு வைத்த செய்யாறு பாலு

Marimuthu M HT Tamil

Nov 16, 2024, 09:03 PM IST

google News
தனுஷின் உண்மை முகத்தை தோலுரித்த நயன்தாரா.. நிஜத்தில் நயன்தாரா எப்படி.. புட்டு புட்டு வைத்த செய்யாறு பாலு பேட்டியைக் காணலாம்.
தனுஷின் உண்மை முகத்தை தோலுரித்த நயன்தாரா.. நிஜத்தில் நயன்தாரா எப்படி.. புட்டு புட்டு வைத்த செய்யாறு பாலு பேட்டியைக் காணலாம்.

தனுஷின் உண்மை முகத்தை தோலுரித்த நயன்தாரா.. நிஜத்தில் நயன்தாரா எப்படி.. புட்டு புட்டு வைத்த செய்யாறு பாலு பேட்டியைக் காணலாம்.

நானும் ரெளடி தான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை, தன் திருமண ஆவணப்படத்தில் சேர்க்க அனுமதி தராத படத்தின் தயாரிப்பாளர் தனுஷை, நடிகை நயன்தாரா கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது யூட்யூப் சேனலில் பேசியிருப்பதாவது, ‘’நயன்தாராவின் பெர்ஷனல் வாழ்க்கை ஒருவரை நம்பி நம்பி ஏமாந்து ஏமாந்து கடைசியில் ஒரு நம்பிக்கையான நபரை கணவராகத் தேர்ந்தெடுத்தது வரை கடும்போராட்டமானது தான். இப்போது உயிர், உலகு என்ற இரு குழந்தைகள் இருக்கின்றனர். நயன்தாரா ஆடம்பரமாக இருக்கிறார் என்பதையெல்லாம் விடுங்க, தற்போதுவிட்ட அறிக்கையில், நயன்தாரா மேடையில் பேசியதில் பாதியாவது நடந்துகொள்ளுங்கள் என தனுஷை கிழித்திருக்கிறார்.

இதுக்கு முன்னாடி நடந்ததைச் சொல்கிறேன். வுண்டர்பார் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எதிர்நீச்சல்’என்கிற ஒரு படம். அப்போது தனுஷ் இந்தப் படத்தை தயாரித்துவிட்டார். அந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு, ஆட, தனுஷ் நயன்தாராவிடம் கேட்டிருக்கிறார். அப்போது பயங்கர பீக் நடிகையாக இருந்தவர், நயன்தாரா. நயன்தாரா நினைத்து இருந்தால், எதிர் நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு நடிக்காமல் இருந்திருக்கலாம்.

எதிர் நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு பணம் வாங்காமல் நடித்துக்கொடுத்த நயன்தாரா:

மற்ற யாராவது கேட்டிருந்தால், நயன்தாரா அந்தப் பாடலுக்கு நடிக்காமல் மறுத்து இருப்பார்கள். இல்லையென்றால், மிக அதிக சம்பளத்தைக் கோரியிருப்பார்கள். ஆனால், எதிர் நீச்சலில் ஒரு பாடலில் ஆட, தனுஷ் கேட்டுக்கொண்டதற்காக நயன்தாரா, 10 பைசா கூட வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அந்தப் பாட்டும், அந்தப் படமும் மிகப்பெரிய ஹிட். சிவகார்த்திகேயன் மிகப்பெரிய லெவலுக்கு வந்துவிட்டார். தனுஷும் பொறாமையாகிவிட்டார். சிவகார்த்திகேயனும் தனுஷ் ஆபிஸுக்கு எதிரில், எஸ்.கே. புரொடக்சன்ஸ் வைச்சது எல்லாம் நமக்குத் தெரியும்.

சிம்பு, பிரபுதேவா போன்ற ஆண்களிடம் ஏமாந்து, ஒரு கட்டத்தில் நயன்தாரா யாரையும் நம்பவே இல்லை. நம்பக்கூடிய சூழலும் இல்லை. பாஸ் என்கிற பாஸ்கிரன் திரைப்படத்தின் பிரஸ்மீட்டில் நயன்தாரா கலந்துகொண்டாங்க. அப்போது நேராக வந்து ஒரு மூத்த சினிமா பத்திரிகையாளர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குனாங்க.

பத்திரிகையாளரின் காலில் விழுந்த நயன்தாரா:

யார் யாரோ என்னைப் பற்றி எழுதுறாங்க சார். நீங்கள் தான் சார் ஐயா பட சூட்டிங்கின்போது தென்காசிக்கு வந்து, முதன்முதலாக என்னைப் பேட்டி எடுத்து பெரிய கட்டுரையாக எழுதுனீங்க. அதை என்னால் மறக்கவே முடியாது அப்படின்னு சொல்லி கண்கலங்குறாங்க. அதுதான் உண்மையான நயன்தாரா.

அடுத்து காலங்கள் கடந்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையில் திருமணம் நடக்கப்போகிறது. அதை பத்திரிகையாளர்கள் அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்துட்டு, கல்யாணப் பத்திரிகையைக் கொடுத்திட்டு, திருமணத்துக்கு யாரும் வாராதீங்க. இது மிக பெர்ஷனலாக நடக்கப்போகுது, அதுமட்டுமின்றி, அந்த கல்யாண வீடியோ ஒரு ஓடிடி தளத்துக்கு விற்கப்போகிறோம்ன்னு சொல்றாங்க.

அந்த கல்யாணம் முடிந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆயிற்று. எப்போது அந்த வீடியோ வரும் என பலரும் கேட்டு வந்ததின் வெளிப்பாடாக இந்த மூன்று பக்க அறிக்கை வெளியாகியிருக்கு.

அதில் தனுஷின் வன்மத்தை வெளிப்படையாக குற்றம்சாட்டிட்டாங்க. நயன்தாராவை விக்னேஷ் சிவன் கல்யாணம் பண்ணுனதற்கு, தனுஷ் காண்டு ஆனது தான் தெரியுது.

நானும் ரெளடிதான் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாத தனுஷ்:

ஒரு 25 வருடங்களுக்கு முன் ஒரு நடிகை, ஒரு இயக்குநரை ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. கணவர் உருவத்தில் சரியாக இருக்கமாட்டாங்க. அப்போது அவர்கள் நயன்தாரா மாதிரி பீக்கில் இருக்காங்க. அந்த நேரத்தில் ஹீரோக்கள் எல்லாம் கூடி கூடிப் பேசி, அந்த நடிகையின் கணவரை கலாய்ச்சிருக்காங்க.

இந்நிலையில் நயன்தாரா சொன்னது என்னவென்றால், இந்தப் படத்தின் வெற்றி உங்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை, அதனுடைய வெளிப்பாடைத்தான் 2016 ஃபிலிம்பேர் விருதின்போது நேரடியாகப் பார்த்தேன் நான். அங்கு தான் தனுஷின் உண்மைமுகத்தைப் பற்றி நயன் பேசியிருக்காங்க.

இந்த வெற்றியை அவரால் பொறுத்துக்கொள்ளமுடியலை. இப்படியெல்லாம் இருக்காதீங்க தனுஷ் அப்படின்னு சொல்லியிருக்காங்க.

ஒரு நடிகையே இந்த அளவுக்கு கொந்தளிக்கிறாங்க என்றால், சூப்பர் ஸ்டார் கொந்தளிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும். கடைசியில் நான் வெளியிட்டுக்கிறேன் அப்படின்னு சொல்லி, ஓம் நமச்சிவாய எனச் சொல்லி, எல்லாம் அந்த இறைவன் பார்த்துக்குவாங்க சொல்லி முடிச்சிருக்காங்க. நானும் ரவுடிதான் போர்ஷன் சேர்க்கைல்லையென்றாலும்,அவருக்குண்டான ரசிகர்கள் பார்க்கத்தான் செய்வார்கள்'' என பத்திரிகையாளர் செய்யாறு பாலு சொல்லி முடித்தார்.

நன்றி: செய்யாறு பாலு ஆஃபிசியல் யூட்யூப் சேனல்

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை