தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நடிக்கும்போது எதையும் மனதில் நினைக்கமாட்டேன்.. பிரிவு பற்றி வெளியில் உலாவும் வதந்தி.. உடைந்து பேசிய ஜெயம் ரவி

நடிக்கும்போது எதையும் மனதில் நினைக்கமாட்டேன்.. பிரிவு பற்றி வெளியில் உலாவும் வதந்தி.. உடைந்து பேசிய ஜெயம் ரவி

Marimuthu M HT Tamil

Dec 07, 2024, 09:22 AM IST

google News
நடிக்கும்போது எதையும் மனதில் நினைக்கமாட்டேன் என்றும், பிரிவு பற்றி வெளியில் உலாவும் வதந்தி குறித்தும் உடைந்து பேசிய ஜெயம் ரவியின் பேட்டியினைக் காணலாம்.
நடிக்கும்போது எதையும் மனதில் நினைக்கமாட்டேன் என்றும், பிரிவு பற்றி வெளியில் உலாவும் வதந்தி குறித்தும் உடைந்து பேசிய ஜெயம் ரவியின் பேட்டியினைக் காணலாம்.

நடிக்கும்போது எதையும் மனதில் நினைக்கமாட்டேன் என்றும், பிரிவு பற்றி வெளியில் உலாவும் வதந்தி குறித்தும் உடைந்து பேசிய ஜெயம் ரவியின் பேட்டியினைக் காணலாம்.

நடிக்கும்போது எதையும் மனதில் நினைக்கமாட்டேன் எனவும், பிரிவு பற்றி வெளியில் உலாவும் வதந்தி குறித்தும் உடைந்து பேசிய ஜெயம் ரவியின் பேட்டியைக் காணலாம்.

சமீபத்தில் இதுதொடர்பாக ஜெயம் ரவி கலாட்டா பிளஸ்-க்கு பத்திரிகையாளர் பரத்வாஜ் ரங்கன் அவர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

‘படத்தின் ரிலீஸின்போது பேட்டியெல்லாம் கொடுக்கவேண்டுமா என சலித்தது உண்டா?'

பதில்: எல்லா திரைப்படங்களுக்கும் ரிலீஸ் தேதி இருக்கிறது. அதனால், அந்தப் படத்தை வெளியில் கொண்டுவர அனைவரும் உழைக்க வேண்டும். அதற்காக ஆடியோ லாஞ்ச், பேட்டி என அந்தப் படம் குறித்துப் பேச உங்களுடைய நூறு விழுக்காடு உழைப்பைத் தரவேண்டும். சினிமா என்பது ஃபிளைட் ஓட்டுறது மாதிரி தான். உங்களது கவலைகளை வெளியில் வைத்துவிட்டு உள்ளே போகணும். ஒரு சினிமா என்பது பல பேருடைய வாழ்க்கை. அதனால் தான், நான் நடிக்கும்போது எதையும் மனதில் நினைக்கமாட்டேன். அதனால், படத்தின் புரொமோஷனில் பங்கு எடுப்பதற்கு நான் மகிழ்ச்சியாகவே இருப்பேன்.

நிறைய நடிகர்கள் அந்த மாதிரி ஒவ்வொரு படத்துக்கும் பேட்டி கொடுப்பதில்லையே. அது பற்றி உங்கள் நினைப்பு?

பதில்: கண்டிப்பாக ஒரு நடிகர் பேட்டி கொடுப்பதும் பேட்டி கொடுக்காமல் இருப்பதும் அவரது தனிப்பட்ட விஷயம். என்னைப் பொறுத்தவரை, அந்தப் பேட்டிகளில் எங்களைப் பற்றிப் பேசுகிறோம். படத்துக்காக நாங்கள் பட்ட கஷ்டங்கள், அதில் இருந்த சந்தோஷங்கள் எல்லாத்தையும் மக்களிடம் ஷேர் செய்வது நல்ல விஷயமாகத் தான் இருக்கிறது. நானும் அதை அவ்வாறே பார்க்கிறேன். மீண்டும் திரும்பிப்பேசுவதற்கு நம்மிடம் நிறைய விஷயங்கள் இருக்கும். முதலில் நாம் பேசியதை மீண்டும் திரும்பப் பேசுவதில்லை. பாலிவுட்டில் ஒவ்வொரு நடிகர்களும் படத்தின் புரொமோஷனுக்காக ஒரு மாதத்தை ஒதுக்குகின்றனர். கல்லூரி நிகழ்வுகளில் இருந்து எல்லாத்துக்கும் அவர்கள் போவார்கள்.

பிரிந்து இருக்கிறது பற்றி நீங்கள் சொல்லும்போது ‘எனது தனிப்பட்ட விஷயத்தை’ எனக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கீங்க. ஏன் அதை சொல்லாமல் இருந்திருக்கலாமே. அது எல்லாருக்கும் தெரியும்போது தெரிந்திருக்கலாம் தானே?.

பதில்: அது பண்ணி இருக்கத் தேவையில்லை தான். வதந்திகளாக நிறைய வெளியில் வந்துகொண்டு இருந்தது. இவருக்கு என்னாச்சு அப்படின்னு பேசிட்டு இருந்தாங்க. என்னுடைய புரோமோஷனும் அடுத்தடுத்து வருகிறது. அதனால், தான் நீங்க இந்த மாதிரியெல்லாம் கேட்கக்கூடாதுன்னு தான், நானே சொல்லிட்டேன். இந்த மாதிரி எல்லாம் சில விஷயங்கள் இருக்குது.

நான் என்னுடைய பெர்ஷனலை எனது படத்துக்கான புரொமோஷனில் சொல்லக்கூடாது என்று நினைக்கிறேன். அதனால் தான் முன்பே சொல்லிவிட்டேன்.

இந்த நேர்காணல் பேட்டி என்பது பதிவுசெய்யக்கூடியது தான். அப்படியிருக்கும்போது, இந்த கேள்விகளை எல்லாம் தவிர்க்கலாம் என முன்பே நேர்காணல் செய்பவர்களிடம் சொல்லிவிடலாம் தானே?

பதில் - அதை ஒவ்வொரு இன்டர்வியூவிலும் சொல்ல வேண்டி வரும். புரியுதா உங்களுக்கு. அதற்குப் பதில் சொல்லவேண்டாம் என்பதால் தான், என் பிரிவு பற்றி வெளிப்படையாக அறிவித்தேன். வேறு ஒன்றுமில்லை.

இப்போது விவகாரத்து என்பது ஒரு சாதாரணம் ஆகிவிட்டது. அப்படியிருக்கும்போது சினிமாக்காரங்களுக்கு நடக்கும்போது மட்டும் ரொம்பப் பெரிதாகப் பார்க்கப்படுதே?

பதில்: இதுமட்டுமில்லை எது நடந்தாலும் சினிமாக்காரங்க பண்ணும்போது ரொம்ப பெரிதாகத் தான் தெரியும். ஏனென்றால், பொது ஊடகத்தின் முன் நாம் பணிசெய்கிறோம். அதனால் பெரிதாகத் தான் பார்ப்பார்கள். நாம் ஒரு டீக்கடையில் போய் டீ குடித்தால் கூட, ஜெயம் ரவி பத்தி நியூஸ் போடுவாங்க. சினிமா என்பது மாஸ் மீடியம். அதனால், மாஸாகத் தான் தெரியும். நல்லது கெட்டது எது நடந்தாலும் ஹைலைட்டாகத் தான் தெரியும். மக்கள் சினிமாவை விரும்புகிறார்கள். அதனால், அதை நடிகர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் நல்லது'’ என நடிகர் ஜெயம் ரவி பேசினார்.

நன்றி: கலாட்டா பிளஸ்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி