விவாகரத்து பஞ்சாயத்து..என் வீட்டுக்குள்ள என்ன நடந்தா உங்களுக்கு.. "பிரச்சினையோட ஆழம் தெரியாம” - ஓப்பனாக பேசிய ஜெயம் ரவி
Oct 25, 2024, 06:32 PM IST
ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவு குறித்து பொதுவெளியில் பேசப்படுவதை ஜெயம் ரவி காட்டமாக பேசி இருக்கிறார்.
ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து தற்போது கோலிவுட்டின் பரபரப்பு பேச்சுகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்த மறுநாளே என்னுடைய அனுமதி இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. ரவியை எத்தனையோ முறை தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்த பின்னர் கூட, அவர் அதற்கு உடன்படவில்லை என்றும் ரவி மனைவி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டார். ஆனாலும், ஆர்த்தி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இதனையடுத்து மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்ட அவர் என்னுடைய அமைதி பலவீனம் ஆகாது என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில், ஜெயம்ரவி தன்னுடைய பர்சனல் விவகாரம் பொதுவெளியில் பேசப்படுவது குறித்து கலாட்டா ப்ளஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசினார்.
அவர் பேசும் போது, “ என்னுடைய பர்சனல் சார்ந்த விஷயங்களை பொதுவெளியில் பேசும் நபர்களை என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் எது செய்தாலும் அது பேசுபொருளாகும். மக்கள் சினிமாவைப் பற்றியும், நடிகர்கள் பற்றியும் பேசுவதற்கு மிகவும் விரும்புகிறார்கள்.
ஆகவே, அவர்களை குறை சொல்வதில் அர்த்தமில்லை. ஒவ்வொருவரிடம் சென்று நீங்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பாக இருங்கள் என்று என்னால் கூற முடியாது. புரிதல் கொண்ட சில பேர் அதனைச் செய்வதில்லை. ஆனால் சிலர் பிரச்சினையின் ஆழம் தெரியாமல், என்னுடைய பர்சனல் விஷயங்களை பேசுகிறார்கள். என்னைப் பற்றி எனக்குத் தெரிந்த பிறகு, மற்றவர்கள் சொல்வதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?" என்று பேசினார்.
முன்னதாக, ஆர்த்தி ஜெயம் ரவியை மரியாதையாக நடத்தவில்லை என்றும் தனிப்பட்ட வங்கிப்பரிவர்த்தனைக்கு கூட ரவியை அனுமதிக்காத அவர் சின்ன சின்ன செலவுகளுக்கு கூட, அவரை கையேந்த வைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ரவியின் மாமியார் ரவி நடித்த சில திரைப்படங்களை தயாரித்த நிலையில், அந்தப்படங்கள் பெரிதான வெற்றியைப் பெறவில்லை. இதனைக்கொண்டும் ரவி அவமதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், ரவியின் மீது சந்தேகப்பட்டுக்கொண்டே இருந்த ஆர்த்தி ரவி அவரின் வாட்ஸ் அப்பில் ஒரு மெசெஜ் வந்தால் கூட, அது குறித்து கேட்டு துன்புறுத்தியதாகவும், அதனால் ரவி வாட்ஸ் பயன்படுத்துவதையே விட்டுவிட்டார் என்றும் கோலிவுட்டில் பேசப்பட்டது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்