'நான் ஏன் அவரை வீட்டை விட்டு வெளியேற்றப் போகிறேன்’.. மனைவி மீது ஜெயம் ரவி புகார்.. போலீசாரிடம் ஆர்த்தி சொன்ன தகவல்!
Jayam Ravi : நடிகர் ஜெயம் ரவி அளித்துள்ள புகாரின் அடிப்படையில் காவல்துறை ஆர்த்தியிடம் சென்று விசாரணை நடத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் சமீபத்தில் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்த பிரிவதாக அறிவித்தார். ஆனால் ஆர்த்தியோ தான் ஜெயம் ரவியை விவாகரத்து செய்யவில்லை எனவும் என்னிடம் கலந்தாலோசனை செய்யாமலேயே ரவி இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார் எனவும் கூறியிருந்தார்.
ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனிடையே நடிகர் ஜெயம் ரவி தான் எதனால் மனைவியை பிரிந்தேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முதல் முறையாக பேசி உள்ளார்.
ஆர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தேன்
அதில்,“என் மனைவி விவாகரத்து தொடர்பாக சொல்லி இருக்கும் கருத்து தவறானது. அவருக்குத் தெரியாமல் இது நடக்கவில்லை. நான், சமூக வலைத்தளத்தில் அறிவிப்பதற்கு முன்பே இரண்டு முறை ஆர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தேன்.
அதற்கு பிறகு தான் சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை முறைப்படி வெளியிட்டேன். எந்த முடிவு எடுத்தாலும் நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே எனது பெற்றோர்களின் ஆசை. இந்த விஷயத்திலும் அவர்கள் அப்படி தான் நினைக்கிறார்கள். எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
என்றைக்கும் கைவிடும் எண்ணம் இல்லை
அதில் முதல் மகன் சற்று வளர்ந்து இருப்பதால் நான் ஏற்கனவே அவனிடம் விவாகரத்து குறித்து சொல்லி இருக்கிறேன். இருப்பினும் தன் தாய் ஆர்த்தியை நான் பிரிவது அவர்களுக்கு விருப்பம் இல்லை. ஆனால் ஒன்றும் செய்ய முடியது. கால சூழல் காரணமாக நான் ஆர்த்தியை பிரிய முடிவு செய்து உள்ளேன்.
இதனால் நான் எனது மகன்களை பார்க்க மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. அவர்களை என்றைக்கும் கைவிடும் எண்ணம் இல்லை. சமீபத்தில் கூட எனது மகனின் பிறந்தநாளை குடும்பத்துடன் சேர்ந்தே கொண்டாடினோம். அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை நீதிமன்றம் பார்த்து கொள்ளும், அப்போது பல உண்மைகளும் தெரியவரும். வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு செய்து என்னை பேசுவதை ஏற்று கொள்ள முடியவில்லை. ” என்றார்.
மனைவி ஆர்த்தி மீது போலீசில் பரபரப்பு புகார்
ஆனால் ஆர்த்தியோ தான் ஜெயம் ரவியை விவாகரத்து செய்யவில்லை எனவும் என்னிடம் கலந்தாலோசனை செய்யாமலேயே ரவி இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தி மீது போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று (செப்டம்பர் 24) புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், சென்னை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத்தர வேண்டும் ஜெயம் ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.
உடைமைகளை மீட்டுத்தர வேண்டும்
அதாவது தன்னை வீட்டை விட்டு ஆர்த்தி வெளியேற்றி விட்டதாக ஜெயம் ரவி புகார் தெரிவித்துள்ளார். ஆனால் ஆர்த்தி இது உங்கள் வீடு. எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இந்த வீட்டுக்கு வரலாம் என்று ஜெயம் ரவியிடம் கூறியதாக ஆர்த்தி போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஜெயம் ரவி ஆர்த்தி தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் அவரிடமிருந்து உடமையை மீட்டுக் கொடுக்கும் படியும் கேட்டுள்ளார்.
காவல்துறை ஆர்த்தியிடம் விசாரணை
இதையடுத்து நடிகர் ஜெயம் ரவி அளித்துள்ள புகாரின் அடிப்படையில் காவல்துறையும் ஆர்த்தியிடம் சென்று விசாரணை நடத்தியுள்ளது. அப்பொழுது ஆர்த்தி அவர்கள் காவல்துறையிடம் "ஏன் சார் நீங்க எங்க வீட்டுக்கு வரும் பொழுது நாங்கள் வீட்டை பூட்டி வைத்திருந்தோமா? என்னுடைய வீட்டின் வாசலில் கூட ஆர்த்தி ரவி என்று தான் இருக்கின்றது.
நான் ஏன் அவரை வீட்டை விட்டு வெளியேற்றப் போகிறேன். இது அவருடைய வீடு. அவர் எப்பொழுது வேண்டுமானாலும் இங்கு தாராளமாக வரலாம் போகலாம்" என்று கூறியுள்ளார்.
டாபிக்ஸ்