தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Janhvi Kapoor: சென்னையில் இருந்து மும்பை திரும்பிய ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதி! ஃபுட்பாய்சன் காரணமாக சிகிச்சை

Janhvi Kapoor: சென்னையில் இருந்து மும்பை திரும்பிய ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதி! ஃபுட்பாய்சன் காரணமாக சிகிச்சை

Jul 19, 2024, 05:59 PM IST

google News
சென்னையில் இருந்து மும்பை திரும்பிய ஜான்வி கபூர் ஃபுட்பாய்சன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் இருந்து மும்பை திரும்பிய ஜான்வி கபூர் ஃபுட்பாய்சன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் இருந்து மும்பை திரும்பிய ஜான்வி கபூர் ஃபுட்பாய்சன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக இருப்பவர் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது உலாஜ் என்ற இந்தி படத்தில் நடித்து வரும் நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜான்வி கபூருக்கு ஃபுட்பாய்சன்

ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருப்பதை அவரது தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர் உறுதிபடுத்தியுள்ளார். தற்போது சிகிச்சை பெற்று வரும் அவரை இன்னும் ஓரிரு நாள்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார்.

தெற்கு மும்பை பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஃபுட் பாய்சன் காரணமாக ஜான்வி கபூர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை காரணமாக தனது வேலைகள் அனைத்தையும் ரத்து தள்ளி வைத்துள்ளார்.

தற்போது அவர் மெல்ல குணமடைந்து வருவதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலம் பாதிப்பு

சென்னை வந்திருந்த நடிகை ஜான்வி கபூர், படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மும்பை திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தனது கமிட்மெண்ட்களை ரத்து செய்துவிட்டு வெளியே செல்லாமல் இருந்துள்ளார்.

பின்னர் உடல்நலம் மோசமாடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஃபுட்பாய்சன் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

உலாஜ் புரொமோஷனில் ஜான்வி கபூர்

ஜான்வி தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில்ரீதியான வாழ்க்கையிலும் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அதன் பிறகு தனது புதிய படமான உலாஜ் படத்தின் புரொமோஷன் பணிகளிலும் ஈடுபட தொடங்கியுள்ளார்.

உலாஜ் படத்தில் சூஹானா பாட்டியா, சூழ்ச்சி மற்றும் சதி வலையில் சிக்கிய இளம் தூதர் கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்துள்லார். சுதன்ஷு சரியா இயக்கிய இப்படம் சர்வதேச ராஜதந்திரத்தின் பின்னணியை கொண்ட கதையாக உள்ளது.

படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆகஸ்ட் 2ஆம் தேதி திரைக்கு வருகிறது.

முதல் தென் இந்திய படம்

பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி சில படங்களில் நடித்துள்ள ஜான்வி கபூர் முதல் தென் இந்திய படமாக தெலுங்கில் ஜூனயர் என்டிஆர் ஜோடியாக தேவாரா என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரட்லா சிவா இயக்கத்தில் இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வருகிறது. படத்தில் பாலிவுட் நடிகர் சயீப் அலிகானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தேவரா படத்தை தொடர்ந்து ராம்சரண் ஜோடியாக புதிய படமொன்றிலும் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார். தமிழில் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூரை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தென்னிந்திய நடிகையாக திகழ்ந்த ஜான்வி கபூர் தாயார் ஸ்ரீதேவி, இந்தி சினிமாக்களிலும் நடித்து பாலிவுட் மருமகள் ஆனார். ஸ்ரீதேவி மகளான ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தென் இந்திய சினிமாக்களிலும் தலை காட்ட தொடங்கியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி