ஒதுக்கப்பட்ட பேரமைதி.. கனலாய் மாறிய அம்மா.. தாத்தா கொடுத்த கேமரா.. தலைகீழாக மாறிய வாழ்க்கை - பி.சி.ஸ்ரீராம்
Nov 24, 2024, 07:21 AM IST
என்னுடைய அம்மா நான் படிக்க மறுக்கிறேனே என்று கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார். தாத்தா கொடுத்த கேமராதான் என்னுடைய வாழ்க்கையை மொத்தமாக மாற்றியது. - பி.சி.ஸ்ரீராம்
பிசி ஸ்ரீராம் மேடை நிகழ்வு ஒன்றில் தன்னுடைய குழந்தை பருவம் குறித்து பேசி இருந்தார். அந்த பேச்சை பார்க்கலாம்.
தாத்தா கொடுத்த கேமரா
அப்போது பேசிய அவர், “என் தாத்தா எனக்கு கொடுத்த கேமராதான் என் வாழ்க்கையை மாற்றியது. என்னுடைய குழந்தை பருவத்தில் நான் வேறு மாதிரியாக இருந்தேன். என்னை கையாள்வது மிகவும் கடினமாக இருந்தது. என்னுடைய அம்மாவிற்கு நான் எதிர்காலத்தில் என்ன ஆவேனோ என்ற கவலையும், பயமும் இருந்து கொண்டே இருந்தது.
அவர் என்னை எப்படி கையாண்டார் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும், என்னைச் சுற்றியுள்ள படைப்பாளிகள், என் மீது நம்பிக்கை வைத்து, அவன் நன்றாக வந்து விடுவான்; அவன் சாதனையாளராக மாறிவிடுவான் என்று சொல்லி அம்மாவிற்கு தைரியம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்பா, அம்மாவிற்கு நான் படிக்க மறுக்கிறேனே... பிற குழந்தைகள் எல்லோரும் நன்றாக படிக்கிறார்களே என்பதுதான் ஒரே கவலை.
எனக்கு படிப்பு வரவில்லை. பின்னர் நான் எப்படி படிக்க முடியும். அந்த விஷயத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை அப்போதுதான் என்னுடைய தாத்தா என் கையில் அந்த கேமாரவை கொடுத்தார். அது என் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. கேமரா வழியாக நான் இந்த உலகத்தை பார்க்கும் போது, எனக்குள் ஒரு வித அமைதி நிலவியது.
அந்த கேமராவை வைத்து நான் எடுக்கும் புகைப்படங்களை பத்திரிகைகளுக்கு அனுப்பி 5 ரூ, 10 ரூ என்று பணம் பெற்றுக்கொள்வேன். பள்ளி கல்லூரிகளில் நான் படித்ததே கிடையாது. ஆனால், திரைப்பட கல்லூரியில் சேர்ந்த பின்னர் நான் பயங்கரமாக படிக்க ஆரம்பித்தேன்.
எல்லோரும் ஒதுக்கினார்கள்
என்னை எல்லோரும் அப்படி ஒதுக்கினார்கள்; ஆனால் அது குறித்து நான் ஒரு நாளுமே கவலைப்பட்டது கிடையாது; ஏனென்றால் எனக்கென்று ஒரு அடையாளம் வரும் என்று நான் என்னுடைய வழியை பார்த்து சென்று கொண்டே இருந்தேன். என்னிடம் அழகு என்றால் எல்லோருமே அழகுதான் என்று கூறுவேன். காரணம் அழகு என்பது நாம் பார்க்கும் கோணத்தில் தான் இருக்கிறது. எல்லோரும் ஐஸ்வர்யா ராய் அழகு என்று கூறுவார்கள். என்னைப்பொருத்தவரை அவர் அழகு கிடையாது. அந்த அழகு என்னை ஒரு மாதிரி தொந்தரவு செய்யும்.” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்