தேவர்மகனில் திட்டித்தீர்த்த பிசி ஸ்ரீராம்..‘கேமராவ இப்படி வைங்க’.. வளர்ந்து வன்மத்தை தீர்த்த வடிவேலு! - தக் லைஃப்!
Oct 26, 2024, 07:51 AM IST
தேவர் மகன் படத்தில் தன்னைத் திட்டித்தீர்த்த பிசி ஸ்ரீராமுக்கு பின்னாளில் தான் நடித்த படத்தில் கேமராவை எப்படி வைக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார் வடிவேலு
பிரபல பத்திரிகையாளரான ராஜகம்பீரன் வடிவேலு குறித்து மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டிக்கொடுத்தார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ராஜ்கிரண் அலுவலகத்தில் கிட்டத்தட்ட 3 வருடங்கள் உதவியாளராக இருந்தவர்தான் நடிகர் வடிவேலு. இதனையடுத்துதான் ராஜ்கிரண் வடிவேலுவை தன்னுடைய திரைப்படங்களில் நடிக்க வைத்து, அவருக்கு அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்தார். ராஜ்கிரணுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து. அப்படித்தான் சிங்கமுத்து வடிவேலுவுக்கு அறிமுகமானார். வடிவேலு தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டிருக்க, அவருக்கு வெளிப்படங்களில் இருந்து வாய்ப்புகள் வந்தன. அப்படி வந்த வாய்ப்புகள் தான் சின்னக் கவுண்டர், தேவர் மகன் உள்ளிட்ட திரைப்படங்கள்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தவுடன் வடிவேலு தனக்கென ஒரு குழுவை செட் செய்தார். அந்தக் குழு தான் அவருக்கு சினிமாவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எப்படி சம்பளம் பேச வேண்டும் என்று எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொடுத்தார்கள் தேவர்மகன் படத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. அது முழுக்க, முழுக்க கிராமம் சார்ந்த திரைப்படம். அந்த திரைப்படத்தில் நிறைய வைடு ஷாட்கள் இருக்கும். வைடு ஷாட் எனும் பொழுது அத்தனை பேரையும் ஒழுங்காக செட் செய்த பின்னால்தான் கேமராவை வைக்க முடியும். அப்படி ஒவ்வொரு முறை வைத்து எடுக்கும் பொழுது. ஒருவர் அங்கும் இங்கும் குறுக்கே சென்று கொண்டே இருந்தார். யாரென்று பார்த்தால், அது வடிவேலு.
இதைப்பார்த்த பிசிஸ்ரீ ராம், கடுப்பில் பயங்கரமாக அவரை திட்டுனார். அப்பொழுது வடிவேலுவால் எதுவும் பேச முடியாது. ஏனென்றால் அது அவர் வளர்ந்து வந்த காலம். ஆனால் பின்னாளில் வடிவேலு மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்தார். படங்களில், காமெடி சார்ந்த காட்சிகளை அவரே இயக்கும் அளவிற்கு அவருக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. அப்படி ஒரு படத்தில் அவர் காமெடியனாக நடிக்க, அந்த படத்திற்கு பி சி ஸ்ரீராம் கேமராமேனாக வந்தார்.
அப்போது வடிவேலு பிசி ராமிடம் நான் எப்படி காட்சியை சொல்கிறேனோ, அதற்கேற்றபடி கேமராவை வையுங்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் பி சி ஸ்ரீராம் அதைப்பற்றி எல்லாம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை ஏனென்றால் பி சி சி ராம் எப்பொழுதுமே மற்றவர்களின் வளர்ச்சியை வாஞ்சையோடு பார்ப்பவர். அந்த அளவு மிகப்பெரிய வளர்ச்சியை கண்ட வடிவேலு, தன்னுடைய குழுவிற்கு ஒரு விஷயத்தை செய்ய மறந்து விட்டார்.
அது என்னவென்றால் ஆரம்பத்தில் வடிவேலுவுடன் இருந்து வந்த அந்த குழுவிற்கு 10,000 சம்பளம் பேசப்பட்டது. ஆனால் பின்னாளில் வடிவேலு மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு, ஒரு நாளைக்கு 10 லட்சம் வரை சம்பளம் வாங்கினார். ஆனால் அந்த குழுவுக்கு கடைசி வரை சம்பளத்தை உயர்த்தி கொடுக்கவே இல்லை. அந்த கடுப்பில் தான் தற்போது ஒவ்வொருவரும் வடிவேலுவை பற்றி சேனல் சேனலாக அவர் செய்த அட்டூழியங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வடிவேலு படிக்காதவர். ஆனால் சிங்கமுத்து அவருக்கு ஒரு புறம்போக்கு நிலத்தை முறையான ஆவணம் இல்லாமல் வாங்கி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அந்த ஏமாற்றத்தில் விரக்தி அடைந்த வடிவேலு, அவர் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் பின்னணியில்தான் அவர்கள் இருவருக்கும் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்தது. அந்த மோதலின் காரணம்தான் சிங்கமுத்து ஒவ்வொரு பேட்டிகளிலும் வடிவேலுவை சரமரியாக தாக்குவதற்கான காரணம்” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்