Actress Jyothika: காதலை கட்டமைத்த 4 குணங்கள்; சூரியனாய் ஜொலித்த சூர்யா; ஜோதிகா கழுத்தை நீட்ட காரணம் தெரியுமா?
Mar 31, 2024, 05:00 AM IST
என்னுடைய இந்த பயணத்தில் நான் எடுத்த முடிவுகளுக்கு சூர்யா உறுதுணையாக இருந்திருக்கிறார். என்னைப் பொறுத்தவரை, ரிலேஷன்ஷிப்பில் ஒருவருக்கொருவர் கொடுக்கக்கூடிய மரியாதை, பாராட்டுதல், ஸ்பேஸ் ஆகியவையே, அந்த காதலை மிகவும் நீண்ட தூரம் எடுத்துச் செல்லும் - சூர்யா!
பிரபல நடிகையான ஜோதிகா தன்னுடைய காதலரும், கணவருமான சூர்யா தன்னை நடத்தும் விதம் குறித்து அண்மையில் கலாட்டா சேனலுக்கு பேசினார்.
இது குறித்து அவர் பேசும் போது, “நீங்கள் தம்பதியாக இருக்கும் பட்சத்தில், ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்ள வேண்டும். அதேபோல ஒருவருக்கொருவர் அவரவருக்கான ஸ்பேசை கொடுக்க வேண்டும்.
இது மட்டுமல்லாமல், உங்களுக்கு இடையே ஒரு விதமான நட்பு இருக்க வேண்டும். இந்த 4 விஷயங்கள் உங்கள் உறவில் இருக்குமானால், இன்ன பிற விஷயங்களை இதுவே சமன்படுத்தி விடும்.எங்களுக்கு இடையேயான காதல் இந்த நான்கு விஷயங்களால்தான் நடந்தது.
நானும்,சூர்யாவும் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வோம். மரியாதை கொடுப்போம். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், எங்களுடைய ரிலேஷன்ஷிப்பில் ஆண் (சூர்யா) தரப்பிலிருந்து அதிகமான மரியாதையும், அதிகமான பாராட்டுதலும் வருகிறது. இது உண்மையில் பெரிய விஷயம். கிட்டத்தட்ட ஒரு 80 சதவீத பெண்கள் கணவன்மார்களிடம் மிகவும் மரியாதையுடனேயே நடந்து கொள்கிறார்கள்.
ஆனால் அது ஒரு ஆண் தரப்பில் இருந்து அதிகமாக வரும் பொழுது அது பெரிய விஷயமாக இருக்கிறது. என்னுடைய திரைபயணத்தில், நான்தான் திரைப்படங்களிலிருந்து விலக வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி நடந்தேன்.
அதன் பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்;மீண்டும் நடித்தேன். குழந்தைகளோடு மும்பைக்கு ஷிஃப்ட்டாக வேண்டும் என்று நினைத்தேன். தற்போது மாறி இருக்கிறேன்.
என்னுடைய இந்த பயணத்தில் நான் எடுத்த முடிவுகளுக்கு சூர்யா உறுதுணையாக இருந்திருக்கிறார். என்னைப் பொறுத்தவரை, ரிலேஷன்ஷிப்பில் ஒருவருக்கொருவர் கொடுக்கக்கூடிய மரியாதை, பாராட்டுதல், ஸ்பேஸ் ஆகியவையே, அந்த காதலை மிகவும் நீண்ட தூரம் எடுத்துச் செல்லும்” என்று பேசினார்.
முன்னதாக, ஜோதிகா பிஹைண்ட் வுட்ஸ் மற்றும் கலாட்டா ஆகிய சேனல்களில், தனக்கும் கணவர் சூர்யாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது எப்படி? கணவராக சூர்யா எப்படி தன்னை நடத்துகிறார் உள்ளிட்ட விபரங்களை பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து அவர் பேசும் போது, “நான் எனக்கு சூர்யா தான் வேண்டும் என்று முடிவெடுத்ததற்கான காரணம், அவர் எனக்கு கொடுத்த மரியாதை. ‘பூவெல்லாம் கேட்டு பார்’ திரைப்படத்தில்தான் நானும் அவரும் முதன்முறையாக ஒன்றாக இணைந்தோம். அவர் என்னிடம் மிகவும் கம்மியாகத்தான் பேசினார். அதுவே எனக்கு மிகவும் பிடித்து விட்டது.
அதனை தொடர்ந்து நாங்கள் கிட்டத்தட்ட ஏழு படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்தோம். டைரக்டர் ஒரு சீனில் கதாநாயகியை தொட வேண்டும் என்பது மாதிரியான காட்சிகளை விவரிக்கும் போது, டைரக்டர் எந்த அளவு அந்த சீனில் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறாரோ, அந்த அளவில் மட்டுமே சூர்யா செயல்படுவார். அட்வான்டேஜ் எடுத்துக் கொள்ள மாட்டார்.
இது மட்டுமல்ல, அதை சுற்றி இருக்கக்கூடிய நிறைய விஷயங்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு மட்டுமல்ல, அவர் பொதுவாகவே பெண்களுக்கு மரியாதை கொடுப்பார். அந்த மரியாதையானது என்னை ஈர்த்துவிட்டது என்று சொல்லலாம்.
இதைத் தவிர்த்து ஒரு ஆண் மகனாக அவரிடம் எனக்கு பல விஷயங்கள் பிடிக்கும். கல்யாணத்திற்கு முன்னதாக நான் மிகவும் தயாராக இருந்தேன். ஷூட்டிங் செல்வதே எனக்கு பிடிக்காமல் ஆகி விட்டது. காரணம் 10 வருடங்களாக 9 மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை ஷூட்டிங்கில் நேரத்தை செலவழித்து விட்டு சென்று, எனக்கு ஒரு வித களைப்பு உருவாகிவிட்டது. நான் அப்போதே எனக்கு தேவையான பணத்தை சம்பாதித்து விட்டேன். இந்த நிலையில் தான் சூர்யா என்னிடம் வந்து காதலைச் சொன்னார். வீட்டிலும் ஓகே என்று சொன்னார்கள். உடனே அடுத்த மாதமே யோசிக்காமல் கல்யாணம் செய்து கொண்டேன்.
நான் இதை சும்மா சொல்லவில்லை. அவர் ஒரு தந்தையாக மிக மிக நேர்த்தியாக இருக்கிறார். தந்தையாக மட்டும் அல்ல, ஒரு கணவனாகவும் அவர் மிக மிக நேர்த்தியாக இருக்கிறார். சூர்யா எங்களிடம் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து, அருகில் உள்ள கணவன்மார்கள், உங்களைப் பார்த்து எங்களுடைய மனைவிகள் சண்டை இடுவதாக சொல்வார்கள். அவர் இதுவரை எந்த ஒரு நல்ல நாட்களையும் மறந்ததில்லை. எல்லாவற்றையும் அப்படி ஞாபகம் வைத்திருப்பார்.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்