தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ht Ott Spl:முசோலினியின் புதையல் கொள்ளைபோனதா! Robbing Mussolini உண்மை கதைதானா?

HT Ott Spl:முசோலினியின் புதையல் கொள்ளைபோனதா! Robbing Mussolini உண்மை கதைதானா?

Manigandan K T HT Tamil

Mar 21, 2023, 06:15 AM IST

google News
Robbing Mussolini on Netflix: இரண்டாம் உலகப் போர் முடியும் தருவாயில் முசோலினி ரகசிய புதையல் ஒன்றை பதுக்கி வைத்திருப்பதாக வதந்தி பரவியது.
Robbing Mussolini on Netflix: இரண்டாம் உலகப் போர் முடியும் தருவாயில் முசோலினி ரகசிய புதையல் ஒன்றை பதுக்கி வைத்திருப்பதாக வதந்தி பரவியது.

Robbing Mussolini on Netflix: இரண்டாம் உலகப் போர் முடியும் தருவாயில் முசோலினி ரகசிய புதையல் ஒன்றை பதுக்கி வைத்திருப்பதாக வதந்தி பரவியது.

Robbing Mussolini ஓர் இத்தாலிய வரலாற்றுத் திரைப்படம் ஆகும். இப்படத்தின் ஒரு பகுதி கதை உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது ஆகும்.

இரண்டாம் உலகப் போர் முடியும் தருவாயில் முசோலினி ரகசிய புதையல் ஒன்றை பதுக்கி வைத்திருப்பதாக வதந்தி பரவியது. அந்தப் புதையலை ஒரு கும்பல் திட்டம்போட்டு கொள்ளையடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது இந்தத் திரைப்படம்.

நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த ஆண்டு வெளியானது.

யார் இந்த முசோலினி?

1922 முதல் 1943 வரை இத்தாலிக்கு தலைமை வகித்தவர் தான் இந்த முசோலினி. இத்தாலி அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்தார். ஜெர்மனியை ஆண்டுவந்த ஹிட்லருடன் இணைந்து இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளுடன் போரிட்டு தோற்றவர் இந்த முசோலினி.

முசோலினி

இந்தத் திரைப்படத்தில் ஒரு இளைஞன், அந்த புதையலை நண்பர்கள் உதவியுடன் இணைந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார்.

எதற்காக அவர்கள் முன்னெடுக்கும் முயற்சிகளே முழு படமும். இறுதியில் அவர்களால் பலத்த பாதுகாப்பு அரணுடன் இருந்த புதையலை கொள்ளை அடிக்க முடிந்ததா? என்ன ஆனது? என்பது படத்தின் முழு நீளத் திரைக்கதை.

சீரியஸான கொள்ளையடிக்கும் கதையில் ஆங்காங்கே காமெடி செய்துள்ளனர். படம் நெடுகிலும் காமெடி காட்சிகள் வயிறு குலுங்க வைக்கின்றன. படத்தின் காட்சி அமைப்புகள் 20ம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

படத்தின் போஸ்டர்

அந்தக் காலகட்ட உடைகள், ஹேர் ஸ்டைல், மேக் அப் என பார்த்து பார்த்து படம் பிடித்திருக்கிறார்கள். படத்தின் இறுதிக்காட்சி யாரும் எதிர்பாராத ஒன்றாக இருக்கும்.

தூக்கு மேடையில் இருந்து ஒருவரை காப்பாற்றும் காட்சியும், கொள்ளையடிக்க பாதுகாப்பான அந்தப் பகுதிக்கு ஏமாற்றி செல்லும் காட்சியும் திக் திக் நிமிடங்களாக நகர்கின்றன.

David Holmes இன் இசை, gian filippo corticelli ஒளிப்பதிவு, நடிகர்களின் சிறந்த நடிப்பு படத்திற்கு பலம். Robbing Mussolini ஒரு முறை கண்டு ரசிக்கலாம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி