HT Ott Spl: 'கணவரின் தப்புக் கணக்கு! சிறைவாசத்துக்கு பிறகு மனைவி செய்த காரியம்'
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ht Ott Spl: 'கணவரின் தப்புக் கணக்கு! சிறைவாசத்துக்கு பிறகு மனைவி செய்த காரியம்'

HT Ott Spl: 'கணவரின் தப்புக் கணக்கு! சிறைவாசத்துக்கு பிறகு மனைவி செய்த காரியம்'

Manigandan K T HT Tamil
Mar 20, 2023 06:40 AM IST

Netflix: அவரது கணவர் சாகவில்லை என்பதும் தோழியுடன் வேறு நகரத்தில் வாழ்ந்து வருவதும் அவருக்கு தெரியவர அதிர்ச்சிக்குள்ளாகிறார்.

Double Jeopardy படத்தில் இடம்பெற்ற காட்சிகள்
Double Jeopardy படத்தில் இடம்பெற்ற காட்சிகள்

ஹாலிவுட் படமான இது, 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி வெளியானது. ஆக்ஷன் த்ரில்லர் படமான இந்தப் படம் வசூலில் சக்கைப் போடு போட்டது.

கதை என்ன?

Libby Parsons கணவருடன் படகில் சுற்றுலா செல்கிறார். மது அருந்திவிட்டு இரவில் நன்கு தூங்கி விடுகிறார். விடிந்ததும் அவருக்கு படகில் அதிர்ச்சி காத்திருக்கிறது.

படகில் அவரது கணவர் உடன் இல்லை. ஆனால், கணவரை யாரோ கொலை செய்ததற்கான அடையாளம் மட்டும் இருக்கிறது. ஆங்காங்கே இரத்தக் கறைகள் இருக்கின்றன. தெரியாமல் அங்கிருக்கும் கத்தியையும் எடுத்துவிடுகிறார் Libby. அதில் அவரது கைரேகை பதிகிறது.

தகவல் அறிந்து அங்கு வரும் போலீஸார் Libby தான் கணவரை கொலை செய்திருக்கக் கூடும் என கருதி கைது செய்கிறது.

ஆதாரங்களும் அவருக்கு எதிராக இருக்கிறது. இதனால், சிறைவாசம் அவருக்கு விதிக்கப்படுகிறது.

தனது மகனை தோழியிடம் ஒப்படைத்துவிட்டு சிறைக்குச் செல்கிறார் Libby. கணவரை பறிகொடுத்த சோகத்தில் சிறையில் இருக்கும் அவரை காண மகன் வராமல் இருப்பதால் அவரது தோழியை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்.

ஆனால், தோழியும் எங்கோ தலைமறைவாகிவிட்டார் என இவருக்கு சந்தேகம் வருகிறது. அப்போது அவரது கணவர் சாகவில்லை என்பதும் தோழியுடன் வேறு நகரத்தில் வாழ்ந்து வருவதும் அவருக்கு தெரியவர அதிர்ச்சிக்குள்ளாகிறார்.

படத்தின் போஸ்டர்
படத்தின் போஸ்டர்

சிறையில் இருக்கு சக சிறைவாசி ஒருவர், 'Double Jeopardy என்று ஒரு சட்டம் உள்ளது. அதில், ஏற்கனவே குறிப்பிட்ட ஒரு குற்றத்திற்காக ஒரு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அதே வழக்கில் மீண்டும் அதே குற்றத்திற்காக தண்டனை விதிக்க முடியாது. உன் கணவர் வெளியே இருந்தால் நீ அவரை கொன்றால் கூட உனக்கு தண்டனை கிடையாது' என்று கூறுகிறார்.

இதையடுத்து, உள்ளுக்குள்ளேயே மனதில் புழுங்கி கோபக் கணலை வெளிப்படுத்தாமல் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார். மனதையும் உடலையும் பார்த்துக் கொள்கிறார் Libby.

அவரது நன்னடத்தையை காரணம் காட்டி பரோலில் வெளியே செல்ல அனுமதிக்கிறது சிறைத் துறை.

பரோலில் வெளியே வரும் Libby கணவரை கண்டுபிடித்தாரா? அவரை பழிதீர்த்தாரா? கணவர் ஏன் அப்படி செய்தார்? என்ற காரணங்கள் தான் எஞ்சிய படம்.

பரோலில் இருப்பவர்களை கண்காணிக்கும் அதிகாரியை ஏமாற்றிவிட்டு கணவரை தேடி திரியும் காட்சியில் Libby கதாபாத்திரத்தில் Ashley Judd அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

விசாரணை அதிகாரியாக Tommy Lee Jones பிரமாதப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக படகில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காரில் இருந்து Libby தப்பிக்கும் காட்சி பரபரப்பின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கிறது.

படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி
படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி

வித்தியாசமான ஒரு சட்டம் அமலில் இருப்பதை வைத்து அருமையான கதையை உருவாக்கி அசத்தல் திரைக்கதை உதவியுடன் படமாக்கி சாதித்திருக்கிறது படக்குழு.

இந்தப் படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது. த்ரில்லர் பட விரும்பிகளாக இருந்தால் நீங்கள் இந்தப் படத்தை கட்டாயம் பார்க்கலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.