தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mohanlal: ஓரமாக ஒதுக்கி வைத்த சினிமா.. முட்டி மோதிய மோகன்லால்..கொத்தி தூக்கிய பாசில்.. - லால் என்ட்ரி கதை!

Mohanlal: ஓரமாக ஒதுக்கி வைத்த சினிமா.. முட்டி மோதிய மோகன்லால்..கொத்தி தூக்கிய பாசில்.. - லால் என்ட்ரி கதை!

May 27, 2024, 04:51 PM IST

google News
Mohanlal: “இயக்குநர் சிபி உட்பட அங்கிருந்த 3 நடுவர்கள், அந்த இளைஞனுக்கு 100க்கு 10 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்கிறார்கள். மீதமிருந்த இரண்டு பேரான பாசிலும், மை டியர் குட்டிச்சாத்தான் இயக்குனர் ஜிஜோவும் 90 மதிப்பெண்கள் அளிக்கிறார்கள். அந்த நடிகர் மோகன்லால்” - லால் என்ட்ரி கதை
Mohanlal: “இயக்குநர் சிபி உட்பட அங்கிருந்த 3 நடுவர்கள், அந்த இளைஞனுக்கு 100க்கு 10 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்கிறார்கள். மீதமிருந்த இரண்டு பேரான பாசிலும், மை டியர் குட்டிச்சாத்தான் இயக்குனர் ஜிஜோவும் 90 மதிப்பெண்கள் அளிக்கிறார்கள். அந்த நடிகர் மோகன்லால்” - லால் என்ட்ரி கதை

Mohanlal: “இயக்குநர் சிபி உட்பட அங்கிருந்த 3 நடுவர்கள், அந்த இளைஞனுக்கு 100க்கு 10 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்கிறார்கள். மீதமிருந்த இரண்டு பேரான பாசிலும், மை டியர் குட்டிச்சாத்தான் இயக்குனர் ஜிஜோவும் 90 மதிப்பெண்கள் அளிக்கிறார்கள். அந்த நடிகர் மோகன்லால்” - லால் என்ட்ரி கதை

Mohanlal: அழகான மனைவிக்கு அடித்து துன்புறுத்தும் கணவன் வாய்த்து, தினமும் அவளை சித்ரவதை செய்கிறான். இதற்கிடையே அவள் கல்யாணம் ஆனவள் என்பது தெரியாமல், அவளின் அழகில் மயங்கி, ஒருவன் காதலிக்கிறான். இப்படி ஒரு கதையை திரையில் சொல்லி, மலையாள சினிமாவின் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தவர் இயக்குநர் பாசில்.

கூச்ச சுபாவம் கொண்டவனாக இருக்க வேண்டும்

இந்தப்படத்தில் காதலனாக ''ஒரு தலை ராகம்' ஷங்கர் தேர்வு செய்யப்படுகிறார். மனைவி கதாபாத்திரத்தில் பூர்ணிமா பாக்யராஜ் கமிட் செய்யப்படுகிறார். கணவனாக யாரை நடிக்க வைப்பது என்று டிஸ்கஷன் தொடங்கும் போதே, அந்த கதாபாத்திரம் சற்றே கூச்ச சுபாவியாக, வெட்கம் நிரம்பியவனாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார் பாசில். 

இந்த நிலையில் ஆடிஷனுக்கு வந்த ஒரு இளைஞர் கூச்சமும், வெட்கமும், புன்னகையும், நிரம்பி இருப்பதை பார்க்கிறார் பாசில். அங்கு 5 பேர் கொண்ட நடுவர் குழு இருந்தது. அதில் இயக்குநர் சிபி உட்பட அங்கிருந்த 3 நடுவர்கள், அந்த இளைஞனுக்கு 100க்கு 10 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்கிறார்கள். மீதமிருந்த இரண்டு பேரான பாசிலும், மை டியர் குட்டிச்சாத்தான் இயக்குனர் ஜிஜோவும் 90 மதிப்பெண்கள் அளிக்கிறார்கள். அந்த நடிகர்தான் இன்று மலையாளத்தின் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால்.

முக்கிய முடிவு எடுத்த லால்

மாநில அளவிலான மல்யுத்த வீரராக இருந்த மோகன்லால், தேசிய அளவிலான போட்டி ஒன்றில் பங்கேற்பதற்கான நாளில்தான் மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள்’ படத்திற்கான தேர்வும் நடக்கிறது. மல்யுத்தத்தை கைவிட்டு, நடிப்பைத் தேர்வு செய்தார் மோகன்லால். பயணம் தொடர்ந்தது. 

சிவாஜியும் மோகன்லாலும் 'ஒரு யாத்ரமொழி' என்ற திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். சிவாஜி லாலை ''கடவுளின் சொந்தப் புதல்வன்' என்று குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார். 

முன்னதாக நடிகை சாந்தி மோகன் லால் குறித்து அண்மையில் கொடுத்த பேட்டி!

இது குறித்து அவர் பேசும் போது, “மோகன்லாலுக்கு நான் பலமுறை சமைத்துக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவனுக்கு நன்றியே கிடையாது. என்ன இப்படி பேசுகிறேன் என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். அதற்குப் பின்னால் சோக சம்பவம் இருக்கிறது. என்னுடைய கணவர் வில்லியம்ஸ் ஒரு மிகச் சிறந்த கேமராமேன்.

இன்றைய காலகட்டத்தில், படப்பிடிப்பில் ஒரு காட்சிக்காக அவ்வளவு தூரம் மேலே ஏறி, யாரும் கேமராவை வைத்து ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். ஆனால் வில்லியம்ஸ் அன்றே அப்படிப்பட்ட ரிஸ்கை எல்லாம் எடுத்தார். இன்று அதனையெல்லாம் கிரேன்கள் செய்து கொண்டிருக்கின்றன.

எனக்கு பிடிக்காது

என்ன வில்லியம்ஸூக்கு கொஞ்சம் முன்கோபம் அதிகம். ஆனால் அவர் தொழிலில் அவ்வளவு நேர்த்தியாக இருப்பார். எங்களுடைய இரண்டாவது திரைப்படம் ஹலோ மெட்ராஸ் கேர்ள். அந்த திரைப்படத்தில் மோகன்லால் வில்லனாக நடித்தார். அந்த படத்தில் பூர்ணிமா பாக்யராஜும், ஊர்வசியும் கதாநாயகிகளாக நடித்தார்கள்.

எங்களுடைய சொந்த வீட்டிற்கு பக்கத்தில் ஒரு மலையாளத் திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அதில் அவர் நடித்தார். அப்போதெல்லாம், எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் அவர், மிகவும் உரிமையாக சாப்பிடுவதற்கு மீன் இருக்கிறதா? என்று கேட்டு வாங்கி, ருசியாக சாப்பிடுவார்.

இறுதிச்சடங்கிற்கு கூட வரவில்லை

என்னுடைய அம்மாவும் மிகவும் அன்போடு அவருக்கு செய்து கொடுப்பார். இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன். வீட்டிற்கு வரும் போது, சாப்பாடு கேரியரையும் அவர் தூக்கிக் கொண்டு வருவார். அப்படி அன்போடும், அரவணைப்போடும் இருந்த மோகன்லால், என்னுடைய கணவர் இறந்தபோது, அவரின் இறுதிச் சடங்கிற்கு கூட வரவில்லை.

ஆகையால், எனக்கு மோகன்லால் பிடிக்கவே பிடிக்காது. உலகத்திற்கெல்லாம் அவரை மிகவும் பிடித்திருக்கலாம் ஆனால் எனக்கு பிடிக்காது. காரணம் என்னவென்றால் வில்லியம்ஸ் என்பவர், இவரை வைத்து நான்கு படங்களை செய்தார். அப்போதெல்லாம், அவருடைய வாயிலிருந்து லால் என்ற வார்த்தையை தவிர வேறு வார்த்தையே வராது.

அப்படி அரவணைப்போடு வில்லியம்ஸ் இவரை வைத்து வேலை வாங்கினார். அவருக்கு நாங்கள் அப்போது 60,000 கொடுக்க வேண்டும். அந்த சமயத்தில் நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் கூட, அவருக்கு நடந்து சென்று கஷ்டப்பட்டு அவரிடம் சென்று கொடுத்தேன்.

அதைப்பார்த்த அவர், என்னை பார்த்து சேச்சி நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு இதைக் கொண்டு வர வேண்டுமா என்று கேட்டான். ஆனால் என்னை ஒரு முறை விமான நிலையத்தில் பார்த்த பொழுது, அவன் தலை தெறிக்க ஓடினான். இவனுக்கு என்றைக்குமே என்னிடத்தில் மரியாதை என்பதே கிடையாது” என்று பேசினார்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி