Drishyam on Hollywood: வேட்டியை மடித்துக்கட்டும் சேட்டன்ஸ்.. ஹாலிவுட் செல்லும் த்ரிஷ்யம்! - மோகன்லால் படைத்த சாதனை!-jeetu joseph mohanlal starrer drishyam to be remade in hollywood - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Drishyam On Hollywood: வேட்டியை மடித்துக்கட்டும் சேட்டன்ஸ்.. ஹாலிவுட் செல்லும் த்ரிஷ்யம்! - மோகன்லால் படைத்த சாதனை!

Drishyam on Hollywood: வேட்டியை மடித்துக்கட்டும் சேட்டன்ஸ்.. ஹாலிவுட் செல்லும் த்ரிஷ்யம்! - மோகன்லால் படைத்த சாதனை!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 29, 2024 05:54 PM IST

கமல்ஹாசன், வெங்கடேஷ், அஜய் தேவ்கன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் ரீமேக் செய்த த்ரிஷ்யம் திரைப்படம் ஹாலிவுட் செல்ல இருக்கிறது.

Mohanlal in a still from the 2013 film Drishyam
Mohanlal in a still from the 2013 film Drishyam

மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தத்திரைப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்தத்திரைப்படம் தற்போது ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

இது குறித்து பதிவிட்டு இருக்கும்  பிரபல ட்ராக்கர் ரமேஷ் பாலா, “  இந்தியா மற்றும் சீனா சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற த்ரிஷ்யம் திரைப்படம், ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. 

தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக் , அபிஷேக் பதக் ஆகியோர் கேன்ஸ் திரைப்பட விழாவில் த்ரிஷ்யம் படத்தை கொரியாவில் ரீமேக் செய்ய இருப்பதாக அறிவித்தனர். 

இதன் மூலம் இந்தியாவில் இருந்து ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் திரைப்படமாக த்ரிஷ்யம் மாறி இருக்கிறது. பனோரமா ஸ்டுடியோஸ், கல்ஃப் ஸ்ட்ரீம்ஸ், ஜோட் ஃபிலிம்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள்  இணைந்து இந்தப்படத்தை தயாரிக்க இருக்கின்றன.

த்ரிஷ்யம் திரைப்படம் 2013 இல் வெளியானபோது, மற்ற திரைப்பட தயாரிப்பாளர்கள் இந்தப்படத்தின் ரீமேக் உரிமைகளுக்காக போட்டியிட்டனர்.  

2014 -ம் ஆண்டில், இப்படம் கன்னடத்தில் த்ரிஷ்யா என்ற பெயரிலும், தெலுங்கில் த்ருஷ்யம் என்ற பெயரிலும், 2015 -ம் ஆண்டில் தமிழில் பாபநாசம் என்ற பெயரிலும், ஹிந்தியில் த்ரிஷ்யம் என்ற பெயரிலும் வெளியானது. 

கன்னடத்தில் நடிகர் ரவிச்சந்தினும், தெலுங்கில் வெங்கடேஷூம், தமிழில் கமல்ஹாசனும், ஹிந்தியில் அஜய் தேவ்கனும் இந்தப்படத்தை ரீமேக் செய்தனர். 

2017- ம் ஆண்டில் இது சிங்களத்தில் ஜாக்சன் அந்தோனியுடன் தர்மயுத்தயா என்ற பெயரிலும், 2019 ஆம் ஆண்டில் மாண்டரின் சீன மொழியில் சியாவோ யாங்குடன் ஷெப்பர்ட் இல்லாத ஷீப் என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. 2021-ம் ஆண்டு த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. அதுவும் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது!

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.