Parenting Tips : கூச்ச சுபாவம் உள்ள குழந்தையின் பெற்றோரா? அவர்களுக்கு உதவுவது எப்படி?
- Parenting Tips : கூச்ச சுபாவம் உள்ள குழந்தையின் பெற்றோரா? அவர்களுக்கு உதவுவது எப்படி?
- Parenting Tips : கூச்ச சுபாவம் உள்ள குழந்தையின் பெற்றோரா? அவர்களுக்கு உதவுவது எப்படி?
(1 / 8)
கூச்ச சுபாவம் உள்ள குழந்தையை வளர்ப்பதற்கு, மரியாதை, புரிதல் மற்றும் ஊக்கப்படுத்துவது என அனைத்தும் தேவை. இது அவர்களின் உள்ளார்ந்த உலகத்தில் மகிழ்ச்சியை கொண்டுவர உதவும். அவர்களை கம்ஃபோர்ட் சோனை விரிவுபடுத்த அது உதவும்.
(2 / 8)
அவர்கள் தனிமையை விரும்பினால் அவர்களுக்கு அதை கொடுக்க முயற்சி செய்யுங்கள். அவர்களின் உணர்வுகளை மதியுங்கள். அவர்களுக்கு பாதுகாப்பான, அமைதியான இடத்தை உருவாக்கிக் கொடுங்கள். அது அவர்களின் வளர்ச்சி, நலன் மற்றும் அவர்களை ரீசார்ஜ் செய்துகொள்ள மிகவும் அவசியம்.
(3 / 8)
சிறு குழுக்கள் அல்லது ஒருவருடன் நேரடியாக பேசும் வாய்ப்புகளை ஏற்படுத்திகொடுங்கள். இதனால் அவர்கள் சவுகர்யமாக உணர்வார்கள். அது கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகள் மற்றவர்களுடன் சேர்ந்த பழகுவதற்கு உதவும். அவர்களை பொதுவெளியில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனுமதியுங்கள்.
(4 / 8)
அவர்களின் சிந்தனைகள் மற்றும் உணர்வுகள் மீது நேர்மையான ஆர்வத்தை காட்டுங்கள். தொடர்ந்து கவனிப்பது, அவர்களின் அனுபவங்களை மதிக்கவைக்கிறது. மேலும் அவர்கள் ஒளிவுமறைவின்றி, வெளிப்படையாக பேசுவதற்கு ஊக்குவிக்கிறது.
(5 / 8)
அவர்களின் ஆர்வங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை ஊக்கப்படுத்துங்கள். அவர்கள் தனிமையில் இருந்தாலும் அவர்களை ஊக்கப்படுத்துங்கள். இது அவர்களின் திறன்கள் வளர்வதற்கு உதவும். அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் திறன்கள் வளரும்.
(6 / 8)
பொதுவெளியில் அவர்கள் உரையாட வேண்டுமெனில் அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். அவர்களை தானாக பேசுவதற்கு ஊக்கப்படுத்துங்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக புது இடங்களுக்கு பழக்கப்படுத்துங்கள். அவர்களுக்கு சமூக திறன்களை அவர்களின் வழியிலேயே வளரவிடுங்கள்.
(7 / 8)
கூச்ச சுபாவமுள்ள உங்கள் குழந்தைகளின் பலத்தை கொண்டாடுங்கள். அவர்களின் சிந்தனைகள் மற்றும் கிரியேட்விட்டி ஆகியவற்றை ஊக்கப்படுத்துங்கள். நேர்மறையான எண்ணங்கள் உங்கள் குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும். அவர்களின் கூச்ச சுபாவத்தையும் அவர்கள் மதிக்க வேண்டும் என்பதையும் முன்னிலைப்படுத்தும்.
மற்ற கேலரிக்கள்