தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Youtuber Irfan : Youtuber இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை பரிந்துரை.. காரணம் என்ன தெரியுமா? இதோ பாருங்க!

Youtuber Irfan : Youtuber இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை பரிந்துரை.. காரணம் என்ன தெரியுமா? இதோ பாருங்க!

Divya Sekar HT Tamil

May 21, 2024, 12:52 PM IST

google News
Youtuber Irfan : தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த Youtuber இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து கண்டறியவும், அதை அறிவிக்கவும், நமது நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது
Youtuber Irfan : தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த Youtuber இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து கண்டறியவும், அதை அறிவிக்கவும், நமது நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது

Youtuber Irfan : தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த Youtuber இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து கண்டறியவும், அதை அறிவிக்கவும், நமது நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது

பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு அறிமுகமே தேவையில்லை. பல்வேறு உணவகங்களுக்கு சென்று அந்த உணவகத்தில் இருக்கும் உணவுகளை ருசித்து அதனை வீடியோவாக வெளியிட்டு வந்த இவர் அண்மை காலமாக சினிமா பிரபலங்களையும், அரசியல்வாதிகளையும் பேட்டி எடுத்து வருகிறார்.இவருக்கு யூடியூப்பில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இருவருக்கு திருமணம் நடந்தது.

விபத்தில் சிக்கிய கார்

அதனைத்தொடர்ந்து மறுவீட்டிற்காக மணப்பெண் வீட்டிற்கு சென்று விட்டு சென்னை திரும்பிய போது இவரது காரானது மறைமலை நகர் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி பல்வேறு விதமான செய்திகள் முன்னதாக வெளியாகின. இந்த நிலையில் அன்றைய தினம் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

”கல்யாணம் முடிந்த பத்து நாட்களில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பதை என் குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதைப்பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் எனக்கு நடுக்கம் ஏற்படுகிறது. மீண்டும் காரில் உட்காருவதற்கு பயமாக இருக்கிறது. நாங்கள் சந்தித்த விபத்தின் அந்த பகுதியிலேயே அன்றைய தினம் நான்கு விபத்துக்கள் நடந்தது. அதைப் பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. நாங்கள் சம்பந்தப்பட்ட விபத்து பற்றி மட்டும் பல்வேறு வகையான செய்திகள் வெளியிடப்பட்டன.” என பேசி இருந்தார்.

குக் வித் கோமாளி

இந்நிலையில், சமையல் கலையை மையமாக வைத்து நகைச்சுவை மற்றும் கேளிக்கை நிறைந்த நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோ, 'குக் வித் கோமாளி'.

இந்த நிகழ்ச்சி 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது அதன் 5 ஆவது சீசனில் உள்ளது. முதல் சீசனில் இருந்தே நிகழ்ச்சியின் நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தமு இருந்தனர். ஐந்தாவது சீசனில் சில மாற்றங்களுடன், வெங்கடேஷ் பட் சன் டிவிக்கு நுழைந்தார். ஆனால் செப் தாமு தற்போது ஐந்தாவது சீசனில் நடுவராக இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இர்ஃபான்  போட்டியாளர்களாக உள்ளனர்.

இர்ஃபானின் மனைவி கர்ப்பம்

இர்ஃபானின் மனைவி ஆலியா தற்போது கர்ப்பமாக உள்ளார். அவர்களுக்கு என்ன குழந்தை உள்ளது என்பதை ஒரு பார்ட்டி வைத்து அறிவித்து இருக்கிறார் இர்ஃபான். அவர் தனக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என சொல்கிறார், அவரது மனைவி ஆலியா தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று சொல்கிறார், இருவருக்கும் இடையே பலூன் சுடும் போட்டி நடத்தப்பட்டது. அதில் இர்பான் தான் வெற்றி பெற்றார்.இறுதியாக ஸ்கேன் முடிவுகளின் படி தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க உள்ளது என்பதை அறிவித்தார் இர்ஃபான்.

Youtuber இர்ஃபான் மீது நடவடிக்கை

இந்நிலையில், தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த Youtuber இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து கண்டறியவும், அதை அறிவிக்கவும், நமது நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது வெளிநாட்டில் பரிசோதனை செய்து வந்து தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை இதுதான் என்று யூடியூபர் இர்பான் அறிவித்ததால் சர்ச்சை.

Youtuber இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உள்ள சுகாதாரத்துறை, காவல்துறையிலும் புகார் அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி