Chef Venkatesh Bhat: ‘எனக்கு நன்றி கடன் முக்கியம் அதனால்தான்’ .. கடைசி நேரத்தில் காலை வாரிய தாமு! - வெங்கடேஷ் பட் பளார்
Chef Venkatesh Bhat: “எனக்கு நன்றி கடன் மிகவும் முக்கியம். இதுவரை வளர்த்து விட்டது மீடியா மேசன்ஸ்தான் . எனக்கு அவர்களுடன் வேலை செய்வது மிகவும் செளகரியமாக இருக்கிறது. அவர்கள் எந்த சேனலுக்கு செல்கிறார்களோ, அங்கே நான் சென்று கொள்கிறேன்.” - வெங்கடேஷ் பட் பளார்
Chef Venkatesh Bhat: குக்வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு தான் வெளியேறியதற்கான காரணத்தையும், சமையல் கலைஞர் தாமு முதலில் தன்னுடன் வருவதாக கூறிவிட்டு பின்னர் வர மறுத்த காரணத்தையும், சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட், சோசியல் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் பேசும் போது, “ குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பதற்கு காரணம், அங்கு கொடுக்கப்பட்ட முழு சுதந்திரம். அதை, அதன் தயாரிப்பு நிறுவனமான மீடியா மேசன் செய்து கொடுத்தது. அங்கு இரண்டாவது டேக்கிற்கு இடமே கிடையாது. இந்த மீடியா மேசன், விஜய் டிவியுடன் ஏற்பட்ட சில கருத்து மோதல் காரணமாக, சன் டிவியுடன் இணைந்து இருக்கிறார்கள்.
விஜய் டிவி என்னை இது சம்பந்தமான பிரச்சினை குறித்து பேச அழைத்து பேசினார்கள். ஆனால், நான் அவர்களிடம் தெளிவாக ஒன்றை சொல்லிவிட்டேன் நீங்கள் வாருங்கள், நாம் ஒன்றாக காஃபி குடிக்கலாம். ஆனால் மீண்டும் என்னை விஜய் டிவிக்கு கூப்பிடாதீர்கள் காரணம் என்னவென்றால், எனக்கு நன்றி கடன் மிகவும் முக்கியம். இதுவரை வளர்த்து விட்டது மீடியா மேசன்ஸ்தான் . எனக்கு அவர்களுடன் வேலை செய்வது மிகவும் செளகரியமாக இருக்கிறது.
அவர்கள் எந்த சேனலுக்கு செல்கிறார்களோ, அங்கே நான் சென்று கொள்கிறேன். எனக்கு அது எந்த சேனல் என்பதை பற்றி கவலையில்லை என்று சொன்னேன். எனக்கு மீடியா மேசன்ஸ் ஆரம்பத்தில் இருந்து, எல்லாவித சலுகைகளையும் செய்து கொடுத்து இருக்கிறார்கள் அவர்கள்தான் எனக்கு முதலாளி. அதனால்தான் நான் விஜய் டிவியை விட்டு வெளியேறி இருக்கிறேன்.” என்றார்.
சமையல் கலைஞர் தாமு குறித்து அவர் பேசும் போது, “ முதலில் சமையல் கலைஞர் தாமும் என்னுடன் வருவதாக சொன்னார். இருவரும் சேர்ந்து அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக முடிவு எடுத்து இருந்தோம். இந்த நிலையில், விஜய் டிவி என்னை அழைத்து சமரசம் பேசியது போல, தாமுவையும் அழைத்து பேசினார்கள். அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவர் விஜய் டிவியில் நான் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார். நான் சன் டிவிக்கு வந்து விட்டேன்.” என்று பேசினார்.
முன்னதாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்து வெங்கசேஷ் பட் வெளியிட்ட அறிக்கையில் “ கடந்த சில மாதங்களாக குக் வித் கோமாளி சீசன் 5 -ல் நான் நடுவராக தொடர்கிறேன் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த வாய்ப்பின் வழியாக அதனை தெளிவுபடுத்தி விடுகிறேன்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்னுடைய நிஜமான ஜாலியான பக்கத்தை காண்பித்தது.
நான் அந்த நிகழ்ச்சியில் நடுவராக தொடரவில்லை. லட்சக்கணக்கான மக்களையும், என்னையும் மகிழ்ச்சிபடுத்திய அந்த அழகான நிகழ்ச்சியில் இருந்து நான் பிரேக் எடுக்க இருக்கிறேன்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்னுடைய நிஜமான ஜாலியான பக்கத்தை காண்பித்தது. அது எனக்கு செளகரியமாகவும், நான் நானாக இருப்பதற்கும் வழிவகுத்தது.
கடந்த 24 வருடங்களுக்கு மேலாக நான் இந்த சேனலுடன் தொடர்பில் இருந்திருக்கிறேன். இந்த தருணத்தில் நான் என்னுடைய பிற வாய்ப்புகளில் கவனம் செலுத்தும் வகையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறு கிறேன். இந்த முடிவு மிகவும் கடினமான ஒன்றுதான்.
ஆனால் நான் இன்னொரு வித்தியாசமான கான்செப்ட்டில் உங்களை மகிழ்ச்சிப்படுத்த இன்னொரு மேடையில் உங்களை சந்திக்கிறேன். நன்றி.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்