தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Aarthi Balaji HT Tamil
May 20, 2024 10:45 AM IST

Cook With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5 ஆவது சீசனில் இருந்து முதல் நபராக ஷாலின் சோயா எலிமினேட் செய்யப்பட்டார்.

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்
குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

சமையல் கலையை மையமாக வைத்து நகைச்சுவை மற்றும் கேளிக்கை நிறைந்த நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோ, 'குக் வித் கோமாளி'.

இந்த நிகழ்ச்சி 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது அதன் 5 ஆவது சீசனில் உள்ளது. முதல் சீசனில் இருந்தே நிகழ்ச்சியின் நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தமு இருந்தனர். ஐந்தாவது சீசனில் சில மாற்றங்களுடன், வெங்கடேஷ் பட் சன் டிவிக்கு நுழைந்தார். ஆனால் செப் தாமு தற்போது ஐந்தாவது சீசனில் நடுவராக இருக்கிறார்.

இந்த முறை எத்தனை போட்டியாளர்

இந்த முறை, அக்ஷய் கமல், ஷாலின் சோயா, திவ்யா துரைசாமி, இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா , சூப்பர் சிங்கர் பூஜா, VTV கணேஷ், உணவு விமர்சகர் இர்ஃபான், பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா, சீரியல் நடிகர் வசந்த் வாஷி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர் .

ராம், ஷப்னம், அன்சிதா, கேபி ஒய் வினோத் ஆகியோர் புதிய கோமாளிகளாக இணைந்துள்ளனர். முதல் வாரத்தில், சுஜிதா வாரத்தின் முதல் செப் ஆஃப் தி வீக் பெற்றார். அவருக்கு பிறகு இரண்டாவது வாரத்தில், வசந்த் வாசி மற்றும் அக்‌ஷய் கமல் இருவரும் வாரத்தின் செப் ஆஃப் தி வீக் பெற்றார்.

முதல் நபராக வெளியே சென்றது யார்

இந்த வாரம் ஷாலின் சோயா முதல் நபராக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இதனிடையே இந்த பயணம் தொடர்பாக ஷாலின் சோயா பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார். 

சமூக ஊடகங்களின் சக்தி

அதில், " அன்புக்கு நன்றி. எல்லாவற்றையும் படித்து கொண்டிருந்தேன். நேர்மறை மற்றும் எதிர்மறை இரண்டும். எனக்காக போராடியதற்கு நன்றி. என் மீது ஒரு நிலைப்பாட்டை எடுத்ததற்கு நன்றி. நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.

கடந்த 20 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வருகிறேன், ஆனால் ஒரு ரியாலிட்டி ஷோ திடீரென என்னை இந்த வைரல் ஆக்கியது. 

காதல் சற்று தனிப்பட்டது

மேலும் சமூக ஊடகங்களின் சக்தியை உண்மையாக உணர்ந்தேன். இந்த நேரத்தில் நீங்கள் எந்த திரைப்படக் கதாப்பாத்திரத்தையும் விரும்பாமல் உண்மையாக என்னையே விரும்புவதால் இந்த காதல் சற்று தனிப்பட்டதாக உணர்கிறது.

உங்கள் அன்பான வார்த்தைகள் தான் என்னை விடாமல் ஓட வைக்கிறது. இது முக்கியம். எப்பொழுதும் என்றும் இருக்கும். உங்கள் அனைவருக்கும் நன்றி “ என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்