Fathima Babu: மீடியா பேரழகி;காதலை மறுத்த உடன் மயக்கம்; மருத்துவமனையில் திறந்த மனக்கதவு! -ஃபாத்திமா காதல் கதை!
Sep 15, 2024, 09:28 AM IST
Fathima Babu: "இருவரும் பழக ஆரம்பித்தோம். ஒரு கட்டத்தில் இருவருமே தனியார் நிறுவனம் ஒன்றில் ஒன்றாக வேலை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது." என்று ஃபாத்திமா சொல்லி முடிக்கும் போதே, அவரை பின் தொடர்ந்து பேசிய கணவர் பாபு" - ஃபாத்திமா காதல் கதை!
பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான ஃபாத்திமாபாபு தன்னுடைய காதல் கதையை அண்மையில், கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.
காதல் எப்படி உதித்தது?
அந்த உரையாடலில் ஃபாத்திமா பேசும் போது, "எனக்கு டேபிள் டென்னிஸ் விளையாடும் பழக்கம் உண்டு. அங்குதான் இவர் எனக்கு அறிமுகம் ஆனார். நான் அப்போது செய்தி வாசிப்பாளராக இல்லை. இவரிடம் வியர்வை நாற்றமே வராது. துணியை மிகவும் நேர்த்தியாக அயர்ன் செய்துதான் அணிவார். இவரிடம் எதைப்பற்றியும் நாம் மனம் விட்டு, இயல்பாக பேச முடியும். நாம் பேசுவதை அமைதியாக கேட்கவும் செய்வார். இவைகளெல்லாம் இவரிடம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
இருவரும் பழக ஆரம்பித்தோம். ஒரு கட்டத்தில் இருவருமே தனியார் நிறுவனம் ஒன்றில் ஒன்றாக வேலை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது." என்று ஃபாத்திமா சொல்லி முடிக்கும் போதே, அவரை பின் தொடர்ந்து பேசிய கணவர் பாபு, " இருவரும் பழக ஆரம்பித்த காலத்திலேயே எனக்கு இவள் மீது காதல் வந்து விட்டது. ஒரு கட்டத்தில் அதனை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். " என்று பேசியவரை இடைமறித்த ஃபாத்திமா, "ஒரு நாள் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, இவர் என் கண்ணில் தெரியும்படி அவருடைய டைரியை வைத்தார்.
அதில் என்னுடன் இவர் வாழ வேண்டும் என்ற ரீதியில் சிலவற்றை எழுதி இருந்தார். அதைப் பார்த்தவுடன் நான் இவரிடம், எனக்கு இதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. நான் உன்னிடம் அந்த எண்ணத்தில் பழகவே இல்லை என்று சொல்லி, அங்கிருந்து நடக்க ஆரம்பித்து விட்டேன். அதைக் கேட்ட இவர், சடாரென்று மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார்.
மயக்கம் போட்டு விழுந்த கணவர்
இதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தாலும், அவர் நடிக்கிறாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இவர் மயக்கம் போட்டு விழுவதை பார்த்த அங்கிருந்த மற்ற டேபிள் டென்னிஸ் வீரர்கள், இவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார்கள். அப்போது நானும் அங்கு சென்று இருந்தேன். இவருடன் நான் பழக ஆரம்பித்த பொழுது, அவர்தான் என்னை எல்லா இடங்களுக்கும் கூட்டிச் செல்வார். இதற்கிடையே, செய்தி வாசிப்பாளராகவும் மாறிவிட்டதால், அங்கேயும் அழைத்து சென்று, கூட்டி வரும் நிலை உருவானது. ஆனால், எல்லாவற்றையும் இவர் எனக்காக செய்தார்.
அப்போதே இவர் டென்ஷன் ஆனால் மயங்கி விழுந்து விடுவார் என்பதும், அவருக்கு இந்த பிரச்சினை எப்படி வந்தது என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். இதனையடுத்து இந்த விஷயத்தை நான் அங்கிருந்த மருத்துவரிடம் சொல்ல, அவர் என்னை பார்த்து அப்படியானால் ஏன் அவருக்கு டென்ஷன் கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். அந்த வார்த்தை என்னை மிகவும் ஆழமாக பாதித்தது. அந்த வார்த்தை தான் என்னுடைய முடிவிலும் மாற்றத்தை கொண்டு வந்தது.
ஆனாலும் நான் காதலை உடனடியாக ஒத்துக் கொள்ளவில்லை அம்மாவிடம் பேச வேண்டும், அம்மா ஓகே சொன்னால் தான், நான் காதலுக்கு சம்மதம் தெரிவிப்பேன் என்று கூறினேன். அம்மாவிடம் இதை சொல்லும் பொழுது, அம்மா ஒத்துக் கொண்டார். ஆனால் அப்பாவிற்கு தெரியாமல் தான் எங்களுடைய கல்யாணம் நடந்தது.” என்று பேசினார்
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்