தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dungeons And Dragons: கிராஃபிக்ஸ் விருந்து; கலகல காமெடி.. அதகள ஆக்ஷன்; Dungeons And Dragons விமர்சனம் இங்கே!

Dungeons And Dragons: கிராஃபிக்ஸ் விருந்து; கலகல காமெடி.. அதகள ஆக்ஷன்; Dungeons And Dragons விமர்சனம் இங்கே!

Mar 22, 2023, 07:00 AM IST

டன்ஜியன்ஸ் அண்ட் டிராகன்ஸ் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்
டன்ஜியன்ஸ் அண்ட் டிராகன்ஸ் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்

டன்ஜியன்ஸ் அண்ட் டிராகன்ஸ் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்

ஹாலிவுட் உலகம் படைக்கும் கிராஃபிக்ஸ் விருந்தின் மற்றொரு படைப்பாக களம் இறக்கப்பட்டிருக்கிறது டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ் திரைப்படம்.

ஹாலிவுட் ரசிகர்களுக்காக வருகிற மார்ச் ( 31 -03 -2023) ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் பிரேத்யக காட்சி அண்மையில் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. ஆக படத்தின் கதை என்ன? படம் என்ன ஜானர்? திரையரங்கம் சென்று பார்க்கும் அளவுக்கு படம் ஒர்த்தா உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இங்கு பார்க்கலாம்.

கதையின் கருவிற்கு செல்லும் முன்னர் படத்தில் இடம் பெறும் ஒரு கேமை பற்றி சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.

டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ் என்பது வீட்டிற்குள் விளையாடப்படும் ஓர் விளையாட்டு. மேசையைச் சுற்றி வீரர்கள் அமர்ந்து இருப்பர். அதில் இருக்கும் ஒருவர் விளையாட்டின் மாஸ்டராக இருப்பார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை முன்னிறுத்தி விளையாடுவார்கள்.

படத்தின் போஸ்டர்!

விளையாடும் ஒவ்வொரு நபரும் தங்களது கதாபாத்திரங்களுக்கான செயல்களை செய்வதோடு, மற்ற கதாபாத்திரங்களுடன் அதற்கு தக்கவாறு தொடர்புகளையும் கொண்டிருப்பர். இதுவே இந்த விளையாட்டின் சாராம்சம்.

கதைச்சுருக்கம்

புத்திசாலி திருடனாக வலம் வரும் கதாநாயகன் கிறிஸ் -ன் மனைவி சம்பவம் ஒன்றில் இறந்து விட,ஒற்றை மகளே உயிர் என வாழ்ந்து வருகிறார் கிறிஸ்.

கிறிஸ்

இந்த நிலையில்தான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மாயாஜால நினைவுச் சின்னத்தை திருடும் அசைமெண்டில், மந்திரவாதி டெய்சி ஹெட் மற்றும் ஹக் கிராண்ட் ஆகியோருடன் கைகோர்க்கும் நிலை கிறிஸ்க்கு ஏற்படுகிறது.

அங்கு எதிர்பாராமல் நடைபெறும் சூழ்ச்சி அவரை சிறை வரை கொண்டு செல்கிறது. ஒருகட்டத்தில் அங்கிருந்து மிச்சேலுடன் உடன் தப்பிக்கும் கிறிஸ் அடுத்ததாக எடுத்த ரிவென்ச் என்ன? அவர் மகளின் நிலை என்னவானது? கடைசியாக அந்த நினைவுச்சின்னம் யாருடைய உயிரை காப்பாற்றியது?உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே படத்தின் மீதிக்கதை.

படத்தின் ஆகப்பெரும் பலம். கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம்.

மிச்சேல்!

ஆம், கதாநாயகன் தொடங்கி படத்தில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதற்கே உரித்தான தனி பாணியில் எழுத பட்டிருக்கிறது. அதன் பலன் படம் முடிந்து வெளியே வந்த பின்னரும் அவை நம் மனதில் நிற்கின்றன.

கதாநாயகனை காமெடியிலும் பெர்ஃபார்மன்ஸ் கவனம் செலுத்த விட்ட இயக்குனர்கள் ஆக்ஷனை மிச்சேலிடம் கொடுத்து விட்டார்கள். ஆக்ஷனில் அம்மணி கொடுத்த ஒவ்வொரு அடியும் இடியாய் விழுந்தன. அந்த அளவுக்கு அதகளபடுத்தி இருக்கிறார் மிச்சேல்.

ஹக் கிராண்டி

ஹக் கிராண்டின் நடிப்பு காமெடிக்கும், டெய்சி கொடூரம் வில்லத்தனத்திற்கும் கேரண்டி. இவர்களை தவிர்த்து சோபியா நிகழ்த்தும் மாயாஜால வித்தைகள் கண்களுக்கு விருந்து.

மாயாஜால உலகம் என்பதால் படம் முழுக்க கிராஃபிக்ஸ் டீமுக்குத்தான் அதிக வேலை. அனைத்தையுமே கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் செய்திருக்கிறது.

முதல் பாதியில் கதாநாயகனின் பிளாஷ்பேக், கதையை பிட்ச் செய்ய இடம் பெற்ற காட்சிகள் சோர்வை தருகின்றன. இதற்கிடையே ஒரே ஆறுதல் கிராஃபிக்ஸ். ஆனால் இரண்டாம் பாதி அப்படியில்லை. ஆக்ஷனும், மாயாஜாலமும் இணைந்து நகரும் திரைக்கதை நம்மை அப்படியே ஆட்கொள்கிறது.

குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் விறுவிறுப்பின் உச்சம். கடைசியாக இடம்பெறும் மிச்சேலின் எமோஷன் ரியலி டச்சிங். கிராபிக்ஸ் காட்சிகளில் இருந்த என்கேஜ்மென்ட் திரைக்கதையிலும் இருந்திரு ந்தால் டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ் மிரட்டி இருக்கும்!

 

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.