HT Exclusive: ‘அப்பா நெஞ்ச புடுச்சிட்டு உட்கார்ந்தப்ப.. சும்மா யாரும் தூக்கி கொடுக்கல’- விக்ரமன் மகன் சிறப்பு பேட்டி!
May 25, 2024, 10:21 PM IST
HT Exclusive: “அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாம போன பின்னாடி, நானே அப்பாட்ட போய் நான் வேலைக்கு போறேன். என்னால முடிஞ்சத கொடுத்து சப்போர்ட் பண்றேன்னு சொன்னேன். ஆனா” - விக்ரமன் மகன் சிறப்பு பேட்டி!
அழகும், அமைதியும், ஆசுவாசமும் நிறைந்த இயக்குநர் விக்ரமன், தன்னுடைய படங்களையும் அவ்வாறே வடிவமைத்தார். அவர் இயக்கிய படங்களும், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களும், இன்றளவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று கொண்டிருக்கின்றன.அவரின் மகன் விஜய் கனிஷ்கா தற்போது ஹீரோவாகி இருக்கிறார். அவர் அறிமாகி இருக்கும் ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படம், வருகிற மே 31ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக அவரிடம் உரையாடினேன்.
ரஜினி, விஜய், சூர்யா அப்படின்னு பெரிய நடிகர்கள் எல்லோரும் இறங்கி வந்துருக்காங்க? இவ்வளவு பெரிய படையோட பெரிய என்ட்ரி.. பயமா இருக்கா?
அப்பாவுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்ல. கே.எஸ். ரவிக்குமார் சார்தான் பெரிய ஸ்டார்ஸோட பிளஸ்சிங்ஸ் எனக்கு கிடைக்கும்னு நினைச்சாரு. அவராதான் அவங்கள போன்ல கூப்பிட்டு, விக்ரமன் பையன் நடிகனா அறிமுகமாறாரு..நீங்க கூப்பிட்டு பிளஸ் பண்ணனும் கேட்டுக்கிட்டார். விஜய் சாரும், சூர்யா சாரும் முன்பு அப்பா கூட வேலை பார்த்ததால, உடனே ஒத்துக்கிட்டாங்க.
எனக்காக வந்த எல்லா ஸ்டார்ஸூக்கும் நான் நன்றி தெரிவிச்சிக்கிறேன்.மனசுல பெருசா பயமில்ல. ஆனா, எனக்குன்னு ஒரு பொறுப்பு இருக்கு அப்படிங்கிறத உணரமுடியுது. ரவிக்குமார் சார், அப்பா அப்படின்னு எல்லாரும் சேர்ந்து என்ன அறிமுகபடுத்துறாங்க. அவங்க பேர காப்பத்தணும். இனி வரும் காலங்கள என்னோட முடிவுகள, நான் ரொம்ப ஜாக்கிரதையா எடுக்கணும்.
அப்பாவுக்கு இன்னைக்கும் இண்டஸ்ட்ரில பெரிய மரியாதை இருக்கே?
அவர் என்னைக்குமே எல்லோருக்கும் உறுதுணையா இருந்துருக்காரு. அப்பா படம் பண்ணி 10 வருஷம் ஆச்சு. ஹிட் கொடுத்து 20 வருஷம் ஆகிருச்சு. ஆனா, இன்னைக்கு வரைக்கும் விக்ரமன்னு சொன்னா, அப்படி ஒரு மரியாதை இருக்கு. அதுக்கு காரணமா நிறைய விஷயங்கள் இருந்தாலும், சில விஷயங்கள சொல்றேன்.
அவர் படங்கள்ல வர ஹீரோக்கள் போலதான் அப்பாவும்; அவர் ரொம்ப மென்மையான மனுஷன். கோபம் இருந்தாலும், அத வெளிக்காட்டிக்கமாட்டார்; அவர் ஒரு தரவ் ஜென்டில்மேன். வேலை முடிந்தால் வீடு; வீடு விட்டால் வேலை என்றிருப்பார். நிறைய பேருக்கு நிறைய உதவிகள செஞ்சிருக்கார். அந்த பிளஸ்ஸிங்தான் எனக்கு இப்ப கிடைச்சிருக்கு.
அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனத எப்படி எதிர்கொண்டீங்க?
இன்னைக்கும் வரைக்கும் நானும், அப்பாவும் அவங்களுக்கு நம்பிக்கை கொடுத்துகிட்டுதான் இருக்கோம். சில நேரங்கள்ல அவங்க நடனம் ஆடக்கூடிய வீடியோவ பார்த்து அழுவாங்க.. நாங்க ஆறுதல் சொல்லி தேத்துவோம். ஆனா, என்னைக்குமே அவங்க நமக்கு இப்படி ஆகிடுச்சேன்னு சொல்லி புலம்புனதே இல்ல.
ஏதோ ஒரு நாள் அம்மாவுக்கு சரியாகிரும் அப்படின்னு எல்லா கடவுளையும் வேண்டிகிட்டு இருக்கோம். நானும் வெளிநாடுகள்ல இதுக்கான சிகிச்சைகள் குறித்து தொடர்ந்து தேடிகிட்டே இருக்கேன். என்னோட படம் ஹிட் லிஸ்ட், மே 31 அன்னைக்கு ரிலீஸ் ஆகுது. இந்தப்படத்துக்கு அவங்களால நடந்து வர முடியலன்னா கூட, என்னோட அடுத்தடுத்த படங்களுக்கு, நிச்சயமா அவங்க நடந்து வருவாங்க அப்படிங்கிற நம்பிக்கை இருக்கு.
அறிமுகமே சஸ்பென்ஸ் த்ரில்லர் எப்படி சரியா வரும்னு நம்புனீங்க?
சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர பொருத்தவர, ஆடியன்ஸ் திரும்ப திரும்ப வந்து படத்த பார்ப்பாங்களா அப்படிங்கிற கேள்வி இருக்கு. ஆனா, படத்துல சஸ்பென்ஸ் மட்டுமில்ல..அதைத்தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கு.. அதை மே 31 ஆடியன்ஸ் பார்த்து தெரிஞ்சிப்பாங்க.
படத்துல கெளதம் மேனன், சரத்குமார், சமுத்திரக்கனி அப்படின்னு பெரிய நடிகர்கள் நடிச்சிருக்காங்க. ஆனா, யாருமே செட்ல என்ன விக்ரமன் பையன் மாதிரி ட்ரீட் பண்ணல. சக நடிகராத்தான் பார்த்தாங்க; எங்கிட்டேயும் சீன் பத்தி டிஸ்கஸ் பண்ணாங்க. ஆலோசனை கேட்டாங்க. அப்படி டிஸ்கஸ் பண்ணிதான் படம் முழுக்க நடிச்சேன்.அவங்க எல்லோரும் இந்தப்படத்துல நடிச்சது சந்தோஷம்.
நெப்போட்டிசம் நெகட்டிவிட்டிய எப்படி பார்க்குறீங்க?
எல்லாருமே கஷ்டப்பட்டுதான் அவங்க இடத்த புடிச்சிருக்காங்க. எனக்கும் இந்த இடம் சும்மா கிடைக்கல. இது 6 வருஷ பயணம். நானும் கம்பெனி, கம்பெனியா நடிக்க வாய்ப்புக்கேட்டு போயிருக்கேன். கஷ்டப்பட்ருக்கேன். அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாம போன பின்னாடி, நானே அப்பாகிட்ட போய் நான் வேலைக்கு போறேன். என்னால முடிஞ்சத கொடுத்து சப்போர்ட் பண்றேன்னு சொன்னேன்.
ஆனா அப்பா, அம்மா இரண்டு பேரும், இத நாங்க பாத்துக்குறோம்.. உன்னோட லைஃப்ல, நீ இப்ப உனக்கு பிடிச்சத பண்ணாம, பின்னாடி வருத்தப்படகூடாதுன்னு சொல்லி, தொடர்ந்து ட்ரை பண்ண சொன்னாங்க. ஒரு நாள் ஏதேச்சையா கே.எஸ்.ரவிக்குமார் அப்பாட்ட பையன் என்ன பண்ணிகிட்டு இருக்கார்னு கேட்க, அவன் சினிமாவுல நடிக்கணும்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கான்னு சொல்லிருக்கார்.
இந்த நிலையிலதான் ரவி சார், நானே விஜய் கனிஷ்காவ அறிமுகபடுத்துறேன்னு சொல்லி, தயாரிப்பாளரா மாறினார். அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போன போது, நாங்க குடும்பத்துல எதிர்கொண்ட பிரச்சினைகள், இந்தப்படம் ஷூட்டிங் நடந்துகிட்டு இருக்கும் போதே, அப்பாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு உள்ளிட்டவை என்ன ரொம்ப பாதிச்சது.
ஆனாலும், ஷீட்டிங்கிற்கு போகம இருந்ததில்ல. எல்லோருக்குமே அவங்க அப்பா அம்மான்னா உசுருதான். எனக்கும் அப்படித்தான். நான் உழைக்கிறதே அவங்களுக்காகத்தான். என்னோட ஒரே குறிக்கோள். அவங்க பெருமைபடற மாதிரி பெரிய ஹீரோ ஆகணும்.” என்று சொல்லி விடை பெற்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்