Director Vikraman: முதுகை பிளந்த மருத்துவர்கள்;கட் ஆன நரம்பு; படுத்த படுக்கையான வாழ்க்கை; கண்ணீரில் விக்ரமன் மனைவி!
Oct 27, 2023, 01:32 PM IST
இயக்குநர் விக்ரமன் மனைவி கிட்டத்தட்ட 5 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கிறார்
இது குறித்து தினமலர் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், “ எனக்கு எல்லாமே நடனம்தான். நடனம் மூலம் நான் நிறைய சம்பாதித்து இருக்கிறேன். நிறைய உதவியும் செய்திருக்கிறேன்.
ஒரு நாள் முதுகு வலி என்று ஒரு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அங்கு நிறைய சோதனைகள் செய்ய வேண்டி இருந்தது. அனைத்தையும் செய்தோம். சோதனைகளில் கேன்சர் இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் சோதனைகளின் முடிவில் உள்ளே வீக்கம் மட்டுமே இருப்பதாக தெரிந்தது
ஒரு மருத்துவர் சொன்னார் நாம் நிறைய ஸ்டிராய்டு மருந்து கொடுத்து விடலாம் என்று சொன்னார். இன்னொரு மருத்துவர் ஆபரேஷன் செய்தாக வேண்டும் என்று சொன்னார். எனக்கு ஆபரேஷன் செய்து கொள்வதில் உடன்பாடு இல்லை. காரணம் நடனம் மேல் உள்ள அதீத பிரியம். இன்னொன்று எனக்கு திருப்பதில் நிகழ்ச்சி வேறு இருந்தது. அதனால் ஆபரேஷன் வேண்டாம் என்றேன். ஆனால் விக்ரமன் பயமாக இருக்கிறது, செய்து கொள் என்றார்.
மருத்துவர்களும் ஆப்ரேஷன் செய்த 15 நாட்களில் இயல்பான வாழ்க்கை முறைக்கு திரும்பி விடலாம் என்று உறுதிப்பட சொன்னார்கள்.அதனைத்தொடர்ந்துதான் நான் ஆபரேஷன் செய்து கொண்டேன். ஆபரேஷன் முடிந்த ஒரு நாள் கழித்து, மருத்துவர்கள் என்னிடம் வந்து, உங்களது உடலை தைக்கவே முடியவில்லை என்று சொன்னார்கள். அப்போதே எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. இன்னொன்று அரைமணி நேரத்தில் முடிய வேண்டிய ஆபரேஷன் 3 ½ மணி நேரம் நடந்தது.
கிட்டத்தட்ட பத்து நாட்கள் நான் படுத்த படுக்கையிலேயே இருந்தேன். இதனையடுத்து என்னை பார்க்க வந்த மருத்துவர்கள், என்னுடைய கால் விரலை அசைக்க சொன்னார்கள். ஆனால், என்னால் அசைக்க முடியவில்லை. இதனையடுத்து பிசியோதெரபி செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி, என்னை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.
அவர்கள் என்னுடைய முழு முதுகையும் அப்படியே கிழித்து ஆபரேஷன் செய்தார்கள். ஆனால் நான் சிறு துளையிட்டுதான் ஆபரேஷன் நடக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர்கள் இப்படி செய்து விட்டார்கள். அதில் முக்கியமான நரம்பு கட் ஆகிவிட்டது. அதனால் என்னுடைய இடுப்பு கீழ் பாகம் செயழலிந்து போய் விட்டது.
என்னை டிஸ்சார்ச் செய்யும் பொழுது நான் உடல்நல குறைவோடு மருத்துவமனையில் சேர்ந்ததாக அவர்களது எழுதியிருக்கிறார்கள் ஆனால் உண்மை அப்படி இல்லை. நான் மருத்துவமனைக்குச் செல்லும்போது கூட நன்றாக, திடமாகத்தான் சென்றேன். மருத்துவமனைலிருந்து எனக்கு இப்போது வரை ஒரு சிறு உதவி கூட இல்லை. என்னுடைய மொபைல் நம்பரை கூட, அவர்கள் பிளாக் செய்து விட்டார்கள். என்னுடைய உடலை குணப்படுத்த என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவை அனைத்தையும் செய்து பார்த்து விட்டேன். ஆனால் இந்த ஐந்து வருடமும் என்னுடைய உடல் இன்னும் கெட்டு தான் போயிருக்கிறது. ” என்று பேசினார்.
டாபிக்ஸ்