Sunny Leone: சன்னி லியோனுக்காகவே இத பண்ணனும்... மனதில் இருப்பதை போட்டு உடைத்த டைரக்டர்
Sep 20, 2024, 10:01 AM IST
Sunny Leone: நடிகை சன்னி லியோன் தனது அருகில் அமர்ந்திருந்தும் தன்னால் சகஜமாக அவரிடம் பேச முடியவில்லை. அவரிடம் பேசுவதற்காவது தான் இனி சிலவற்றை செய்ய வேண்டும் என இயக்குநர் பேரரசு தனது மனதிலிருந்த வருத்தத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.
2013ம் ஆண்டு "ஜிஸ்ம்2" என்ற இந்தி திரைப்படம் மூலம் இந்திய சினிமா நடிகையாக என்ட்ரி கொடுத்தவர் சன்னி லியோன். இவர், இதைத்தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளோடு சேர்த்து 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் இவர் குறித்து தமிழ் இயக்குநர் பேரரசு பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
புளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பேட்ட ராப்". இத்திரைப்படத்தில் நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என பல துறைகளில் கோலோச்சி வரும் பிரபுதேவா, நடிகை வேதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பேட்ட ராப் ப்ரமோஷன்
நடிகர் விஜய்யுடன் நடித்த "கோட்" திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், பிரபுதேவா தான் கதாநாயகனாக நடித்துள்ள பேட்ட ராப் படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் பிரபுதேவா, நடிகை வேதிகா, சன்னி லியோன், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
எனக்கு இவர்களை பார்த்தாலே பயம்
அப்போது பேசிய நடிகர் பிரபுதேவா, தான் படித்த காலத்தில் 11ம் வகுப்பில் யாரும் பெயிலாக மாட்டார்கள். ஆனால், நான் அதிலேயோ பெயில் ஆனேன். அப்போது இருந்தே படித்தவர்களை பார்த்தால் தனக்கு பிரம்மிப்பாக இருக்கும். அதனால் தான் பாடலாசிரியர்களை பார்த்தால் எனக்கு பிரம்மிப்பாக இருக்கிறது. எனக்கு மீடியா நபர்களை பார்த்தாலே பயமாக இருக்கும். ஆனால் இப்போது என் குடும்ப உறுப்பினர்களை போல உள்ளனர். தவறுகளை சுட்டிக் காட்டுவது குடும்ப உறுப்பினர்கள் தான் என்றார்.
நடிகை வேதிகா மிகவும் கடினமாக உழைத்துள்ளார். சன்னி லியோன் மிகவும் நல்ல குணம் கொண்டவர். நடன இயக்குநர்கள் நன்கு பழக்கமானவர்கள் என்பதால், ஸ்டெப்களை எளிதாக கொடுக்குமாறு கூறினேன். செப்டம்பர் 27ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் விஷுவல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
இதற்காகவே இந்தி கத்துக்கணும்
பின்னர் பேசிய இயக்குநர் பேரரசு, 2-3 ஆண்டுக்கு முன் பலரும் இந்தி தெரியாது போடா எனக் கூறியபோது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. இந்தி தெரியாது என டி-சர்ட் போட்ட போதும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் இப்போது அது எனக்கு கவலையாக இருக்கிறது. ஏனெனல், நடிகை சன்னி லியோன் இந்த பட விழாவில் என அருகிலேயே அமர்ந்துள்ளார். ஆனால், எனக்கு இந்தி தெரியாத காரணத்தால் என்னால் அவரிடம் 2 வார்த்தை கூட இந்தியில் பேச முடியவில்லை. இதை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதற்காகவே இப்போது இந்தி கற்றாக வேண்டும் என தோன்றுவதாக வேடிக்கையாக பேசியுள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.