CID Sakunthala: எம்ஜிஆருக்கு வில்லியான ஹீரோயின்..அந்த கால சன்னி லியோன் - ஆணழகன் எம்ஜிஆர்! இதயக்கனி ஷுட்டிங் சம்பவம்-vetran actress cid sakunthala died due to age releated issue shares memory about mgr in idyakkani shooting - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cid Sakunthala: எம்ஜிஆருக்கு வில்லியான ஹீரோயின்..அந்த கால சன்னி லியோன் - ஆணழகன் எம்ஜிஆர்! இதயக்கனி ஷுட்டிங் சம்பவம்

CID Sakunthala: எம்ஜிஆருக்கு வில்லியான ஹீரோயின்..அந்த கால சன்னி லியோன் - ஆணழகன் எம்ஜிஆர்! இதயக்கனி ஷுட்டிங் சம்பவம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 18, 2024 10:25 AM IST

CID Sakunthala: எம்ஜிஆருக்கு வில்லியாக நடித்த ஒரே ஹீரோயின் என்ற பெருமை பெற்றவர் பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா. ஐட்டம் டான்ஸராக பல படங்களில் தோன்றிய அந்த கால சன்னி லியோன் ஆக திகழ்ந்த இவர், இதயக்கனி ஷுட்டிங் சமயத்தில் எம்ஜிஆருடன் நடந்த சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

CID Sakunthala: எம்ஜிஆருக்கு வில்லியான ஹீரோயின்..அந்த கால சன்னி லியோன் - ஆணழகன் எம்ஜிஆர்! இதயக்கனி ஷுட்டிங் சம்பவம்
CID Sakunthala: எம்ஜிஆருக்கு வில்லியான ஹீரோயின்..அந்த கால சன்னி லியோன் - ஆணழகன் எம்ஜிஆர்! இதயக்கனி ஷுட்டிங் சம்பவம்

1960களில் இருந்து 2000ஆவது ஆண்டு வரை சுமார் 40 ஆண்டு காலம் சினிமாவில் ஹீரோயின், வில்லி, குணச்சித்திரம் போன்ற பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அதேபோல் தமிழில் பிரபலமான குடும்பம், சொந்தம், வாழ்க்கை, கஸ்தூரி போன்ற சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சிஐடி சகுந்தலா மறைவு

84 வயதாகும் சிஐடி சகுந்தலா பெங்களுருவில் வசித்து வந்துள்ளார். வயது மூப்பு காரணமாக உடல நல குறைவு ஏற்பட்ட நிலையில் தனியார் மரு்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தை சேர்ந்தவரான சிஐடி சகுந்தலா, தனது மகள் மற்றும் மருமகனுடன் பெங்களுருவில் வசித்து வந்துள்ளார். தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் இவரது தாய் மொழி தெலுங்கு ஆகும்.

இதையடுத்து சிஐடி சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

டான்ஸர் டூ நடிகை

தமிழ் சினிமாவில் பின்னணி டான்ஸராக அறிமுகமாகி பின்னர் வில்லி, ஹீரோயின், குணச்சித்திர நடிகையாக முத்திரை பதித்ததவர் சிஐடி சகுந்தலா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரங்கலில் நடித்துள்ளார்.

1970இல் வெளியான சிஐடி சங்கர் என்ற படத்தில் ஜெய்சங்கர் ஜோடியாக நடித்து சிஐடி சகுந்தலா ஹீரோயின் ஆனார். இந்த படத்தில் இருந்து சிஐடி என்ற அடைமொழி அவரது பெயருக்கு பின்னர் ஒட்டிக்கொண்டது. இந்த படத்துக்கு பிறகு தொடர்ந்து கேப் விடாமல் சினிமாக்களில் நடித்து வந்த சிஐடி சகுந்தலா கடைசியாக 1998இல் வெளியான பொன்மானை தேடி என்ற படத்தில் நடித்தார்.

ஐட்டம் டான்ஸர்

பிளாக் அண்ட் ஒயிட் படங்களில் கிளாமர் ரோலில் துணிச்சலாக நடித்த சிஐடி சகுந்தலா, பல படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி புகழ் பெற்றுள்ளார். இவரது நடனத்தை காண்பதற்கே தனியொரு ரசிகர்கள் கூட்டம் இருந்துள்ளது. சுருக்கமாக சொல்வதென்றால் தமிழ் சினிமாவின் அந்த கால சன்னி லியோன் என்றே கூறும் அளவில் கவர்ச்சி தரிசனம் காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

நடிகையாக உருவெடுத்த பின்னர் தனித்துவமான நடிப்பிலும் முத்திரை பதித்த இவர், பாடிலாங்குவேஜ், முகபாவனைகளை வெளிப்படுத்தி நடிக்கும் நடிகைகளில் முக்கியமானராக திகழ்ந்தார்.

பெண்களை மதிக்கும் ஆணழகன் எம்ஜிஆர்

பொதுநிகழ்ச்சிகளில் அவ்வளவாக தலைகாட்டாத நடிகையாக இருந்து வந்துள்ளார் சிஐடி சகுந்தலா. இதையடுத்து வேல்ஸ் பல்கலைகழகம் சார்பில் எம்ஜிஆருக்கு நடந்த பாராட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பேசிய சிஐடி சகுந்தலா, "செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்கிற மாதிரி மக்கள் திலகம் எம்ஜிஆரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.

மனிதநேயம் என்று சொன்னாலே எம்ஜிஆர் பெயர்தான் நினைவுக்கு வரும். இதயக்கனி என்ற படத்தில் அவருடன் வில்லியாக நான் நடித்துள்ளேன். ஹீரோயினகளில் அவருக்கு வில்லியாக நடித்தது நான் மட்டும்தான். இதை எல்லோரு கூறியிருக்கிறார்கள். நாடோடி மன்னன் முதல் அரசகட்டளை படம் வரை பல்வேறு படங்களில் அவருக்கு நடனம் சொல்லி கொடுத்திருக்கிறேன்.

இதயக்கனி படத்தில் நான் அவரை ஒன்சைடாக காதலிப்பேன். காஷ்மீரில் படப்பிடிப்பு முடிந்துவுடன் எம்ஜிஆரிடம் சொல்லிட்டு கிளம்ப அவரது அறைக்கு சென்றேன். அப்போது என்னுடன் மற்றொரு நடிகரும் வந்தார்.

அப்போது என்னுடன் வந்த நடிகரும் என்னை பத்திரமாக வீட்டில் கொண்டு போய் சேர்க்கும்படி சொன்னார். செல்போன் போன்ற வசதி இல்லாத அந்த காலகட்டத்தில் அவர் என் மீது காட்டிய அக்கறை நெகிழ வைத்தது.

எம்ஜிஆர் பெண்கள் மீது மரியாதை, மதிப்பு, கெளரவம் தருகிறார் என்பதை அப்போது தெரிந்து கொண்டேன். நான் வீட்டுக்கு வந்த சேர்ந்தவுடன் போன் செய்து நலம் விசாரித்ததை மறக்க விடாது. அவருக்கு எந்த காஸ்ட்யூமும் பொருத்தமாக இருக்கும். அவரது தோற்றம், உடல் அமைப்பை பார்க்கையில் அவர் ஒரு ஆணழகன் என்பது புரியும்" என்று நெகிழ்ச்சியாக பேசினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.