GOAT box office: பாக்ஸ் ஆபீஸ் கிங்.. கோடிகளை கொட்டும் கோட்.. மொத்த வசூல் எவ்வளவு?
GOAT box office: உலக அளவில் முதல் வாரத்தில் 300 கோடி ரூபாயை வசூல் செய்த கோட் திரைப்படம், தற்போது வசூலில் 400 கோடியை கடந்து இருக்கிறது.
விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி திரையரங்கில் வெளியான ‘கோட்’ திரைப்படம் வசூல் தொடர்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
13 நாள் வசூல்
விஜயின் கோட் திரைப்படம் வெளியாகி இரண்டு வாரம் 2 நாட்கள் முடிந்துள்ள நிலையில், நேற்றைய தினம் 7 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன் படி பார்க்கும் போது படம் வெளியான 13 ஆம் நாளான நேற்று இந்தியாவில் மட்டும் கோட் திரைப்படம் 226.60 கோடி வசூல் செய்திருக்கிறது. நேற்றைய தினம் தமிழில் 34.15 சதவீத மக்களும், ஹிந்தியில் 14.35 சதவீத மக்களும் கோட் படத்தை பார்த்து இருக்கிறார்கள். உலக அளவில் முதல் வாரத்தில் 300 கோடி ரூபாயை வசூல் செய்த கோட் திரைப்படம், தற்போது வசூலில் 400 கோடியை கடந்து இருக்கிறது.
இந்தியாவில் கோட் திரைப்படம் வெளியான அன்றைய தினம் 44 கோடி வசூல் ஆனது. ஆனால் படத்திற்கு வந்த கலவையான விமர்சனத்தின் காரணமாக, அடுத்த நாளில் வசூல் குறைந்தது. அதன் படி, இரண்டாவது நாளில் கோட் திரைப்படம் 25.5 கோடி மட்டுமே வசூல் செய்தது.
அதன் பின்னர் வார இறுதியில் மீண்டும் பிக்கப் படம் கோட் திரைப்படம், சனிக்கிழமை 33.4 கோடியும், ஞாயிற்றுக்கிழமை 34 கோடி ரூபாயும் வசூல் செய்தது. ஆக மொத்தமாக, முதல் வாரமுடிவில் 178 கோடி வசூல் செய்தது.
முன்னதாக, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்திருக்கிறார்.
தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தி கோட் படத்தின் கதை:
கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், பயங்கவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர Special Anti terrorist squad team சார்பில் காந்தி ( விஜய்), அஜய் (அஜ்மல்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் ( பிரபு தேவா) ஆகியோர் கொண்டு செல்ல ஆயுதங்களுடன் களமிறங்க, அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மேனன் ( மோகன்) இறந்துவிடுவதாக காட்டப்படுகிறது.
இதற்கிடையே தாய்லாந்திற்கு மனைவி அனு ( சினேகா) உடன் செல்லும் காந்தி, தன்னுடைய மகனைப் பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது. ஆனால், பின்னாளில் அவனை காந்தி பிரச்சினை ஒன்றில் சந்திக்கிறார். அந்தப் பிரச்சினை என்ன? அதில் காந்திக்கு வில்லனாக மகன் மாறியது ஏன்? என்பது படத்தின் மீதிக்கதை.
தி கோட் தொழில்நுட்பக் குழுவினர் விவரம்:
இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகியிருக்கிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் என சகோதரர்கள் மூவர் இணைந்து தயாரித்துள்ளனர்.
‘’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' படத்துக்கு உண்டான ஒளிப்பதிவினை சித்தார்த்தா நுனி புரிய, வெங்கட் ராஜின் என்பவர் எடிட் செய்கிறார். இப்படத்துக்குண்டான வசனத்தை விஜி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
இப்படத்தில் கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகிய நால்வர் சேர்ந்து, படத்துக்குண்டான பாடல்களை எழுதியுள்ளனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்