Vijay: விஜய்க்கு ஊசி போட இவ்வளவு பயமா?.. தரதரவென இழுத்து வந்த எஸ்.ஏ.சி.. ஊசி போட தளபதி நடத்திய போராட்டம் தெரியுமா?
Sep 15, 2024, 03:22 PM IST
Vijay: ‘எனக்கு ஒரு முறை உடல்நிலை சரியில்லை என்று, எனது அப்பா சென்னையில் இருக்கும் விஜயா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் நான் அங்கேயும்’ - விஜய் ஊசி போட நடத்திய போராட்டம்!
நாமெல்லோருமே சிறுவயதில் உடல்நிலை சரியின்றி மருத்துவமனைக்குச் செல்லும் போது, அங்கு போடப்படும் ஊசியை அடியோடு வெறுத்திருப்போம். இன்னும் சிலர் அந்த ஊசியை போட்டுக்கொளவதற்கு தன் பெற்றோருடன் பெரும் போராட்டமே நடத்தி இருப்பார்கள். அந்தப்பட்டியலில் நடிகர் விஜயும் அடக்கம். ஆம், அது பற்றி அவரே பல வருடங்களுக்கு முன்னர் விஜய் டிவிக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
ஊசி போட விஜய் நடத்திய போராட்டம்
அதில் அவர் பேசும் போது, “ இப்போதும் சரி, எனக்கு ஊசி என்றால் அவ்வளவு பயம். அதற்கு, என்னுடைய சிறுவயதில் ஊசி போடுவதற்கு நான், என்னுடைய அப்பாவுடன் நடத்திய போராட்டமே காரணம். எனக்கு ஒரு முறை உடல்நிலை சரியில்லை என்று, எனது அப்பா சென்னையில் இருக்கும் விஜயா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது எங்களுடைய வீடு சாலிகிராமத்தில் இருந்தது. என்னுடைய அப்பா மருத்துவமனைக்கு உள்ளே சென்று கொண்டிருந்தார். நானும் அவர் பின்னே சென்று கொண்டிருந்தேன். சரியாக, மருத்துவர் அறையினுள் அவர் உள்ளே நுழையும் பொழுது, அதற்கு அருகில் இன்னொரு வழி, வெளியே செல்வதற்கு அமைக்கப்பட்டிருந்தது. அப்பா மருத்துவர் அறைக்குள் நுழைந்த உடன், நான் வெளியே செல்லும் அவசர வழியாக வீட்டிற்கு ஓடிவிட்டேன். காரணம், ஊசி.. ஆம் அந்த ஊசியைப்போட்டுக்கொள்வதற்கு எனக்கு அவ்வளவு நடுக்கம்.
ஆனால் என்னுடைய அப்பா என்னை விடவில்லை. எனக்கு ஊசி போட்டாக வேண்டுமென, அப்பா வீட்டிலிருந்து என்னை தரதரவென இழுத்து மருத்துமனைக்கு அழைத்து வந்தார். அந்த சம்பவத்தின் தாக்கம் தான் இந்நாளிலும் எப்போது ஊசி போடச் சென்றாலும், ஒரு விதமான பயம் மனதுக்குள் உண்டாகும். அந்த சம்பவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று!” என்று பேசினார்.
முன்னதாக, நடிகர் விஜயின் பள்ளி ஆசிரியர் நடிகர் விஜய் தொடர்பான அனுபவங்களை பிஹைண்ட் வுட்ஸ் youtube சேனலுக்கு பகிர்ந்திருந்தார். அந்த பேட்டி இங்கே!
அதில் அவர் பேசும் போது, "நடிகர் விஜய் ஐந்தாம் வகுப்பில் இருந்து, எங்கள் பள்ளியில்தான் படித்தார். அவர், எல்லா குழந்தைகளையும் போல சேட்டையெல்லாம் செய்ய மாட்டார். அவர் எந்த சூழ்நிலையிலும், எந்த ஒரு மாணவரையும் துன்புறுத்தியது கிடையாது.
யாரையும் துன்புறுத்தியது கிடையாது
அது வார்த்தையாலும் சரி, செயலாலும் சரி, அவர் யாரையுமே தொந்தரவு செய்ய மாட்டார். அதற்காகவே, நாங்கள் அவரை கடவுளின் குழந்தை என்று அழைப்போம். விஜய் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது அவரது தங்கையான வித்யா எல்கேஜி படித்துக் கொண்டிருந்தார். அவரை நாங்கள் பட்டாம்பூச்சி என்று அழைப்போம். அவரும் அவரது அண்ணனான விஜயும் அவ்வளவு பாசமாக இருப்பார்கள்.
அமைதியான விஜய்:
அப்போது, விஜய் மிக நன்றாக கிட்டார் வாசிப்பார், நன்றாக வரைவார். இந்தநிலையில்தான் திடீரென்று வித்யா இறந்துவிட்டார். அதன் பின்னர், விஜய் போட்டிகளில் பங்கேற்பதையே அப்படியே நிறுத்திவிட்டார். கிட்டார், ஓவியம் வரைதல் என அனைத்தையும் அப்படியே ஓரங்கட்டிவிட்டார்.
அப்போது, எஸ்.ஏ சி அவரது தொழிலில் பீக்கில் இருந்து சமயம். அதனால், அவர் முழுக்க முழுக்க தனது தொழில் சார்ந்த விஷயங்களில் மிகவும் பிஸியாக இருந்தார். ஷோபாவும் மகளை இழந்த வருத்தத்தில் முடங்கி போயிருந்தார். இதனால் விஜய்க்கு யாருமே இல்லாத ஒரு சூழ்நிலையானது உருவாகிவிட்டது. அதனை, விஜய்யால் எப்படி கையாள வேண்டும் என்பது தெரியவில்லை இதையடுத்து அவர் அப்படியே அமைதியாகிவிட்டார்.
விஜயை பொறுத்தவரை படிப்பில் பெரிய சுட்டியெல்லாம் இல்லை. ஆனால், அவர் ஏதாவது ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தி செய்ய ஆரம்பித்து விட்டால், அதில் அவர் பெஸ்டாக வந்து விடுவார், பள்ளியில் அவர் விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருந்தார். அதில் நன்றாகவும் தேர்ந்தார். விஜய், அவருக்கான விஷயங்களை அவரே தீர்மானம் செய்வார். அவரை யாருமே கை வசத்திற்குள் கொண்டு வர முடியாது." என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்