தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ghilli Director Dharani Openup: ‘செமி ஃபைனல்ஸில் தோத்துட்டு எப்படி ஃபைனல்ஸ்?’ - ரகசியத்தை உடைத்த கில்லி இயக்குநர் தரணி

Ghilli Director Dharani Openup: ‘செமி ஃபைனல்ஸில் தோத்துட்டு எப்படி ஃபைனல்ஸ்?’ - ரகசியத்தை உடைத்த கில்லி இயக்குநர் தரணி

Marimuthu M HT Tamil

Apr 24, 2024, 10:30 AM IST

Ghilli Director Dharani Openup: கில்லி திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து இயக்குநர் தரணி மனம் திறந்து பேசியுள்ளார்.
Ghilli Director Dharani Openup: கில்லி திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து இயக்குநர் தரணி மனம் திறந்து பேசியுள்ளார்.

Ghilli Director Dharani Openup: கில்லி திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து இயக்குநர் தரணி மனம் திறந்து பேசியுள்ளார்.

Ghilli Director Dharani Openup: லோக் சபா தேர்தல் காரணமாக தமிழ் சினிமாவில் ஏப்ரல் மாதம் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் பழைய பிளாக்பஸ்டர் படங்களை ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

HBD Actor Murali: இதயம் நிறைந்த நாயகன்..காதல் படங்களுக்கு தனி இலக்கணம் வகுத்த நடிகர் முரளி பிறந்தநாள் இன்று!

29 Years of Murai Maman:'எங்க அக்கா மகளே இந்து’.. கவுண்டமணியின் தரமான காமெடி.. சுந்தர்.சியின் முதல் படமான ’முறைமாமன்’

Paandi Nattu Thangam: வனத்தை காக்கும் கார்த்திக்..நாட்டை காக்கும் நம்பியார்..பட்டையை கிளப்பிய 'பாண்டி நாட்டு தங்கம்'

முழு நீள காமெடி.. காசுதான் எந்த காலத்துக்கும் கடவுள்.. என்றும் புதிய படம் காசேதான் கடவுளடா

அந்த வகையில் 2004ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் தேதி, தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா,பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம், கில்லி. இப்படம் இருபது ஆண்டுகளுக்குப்பின், மறு வெளியீடு ஆகியுள்ளது. அதாவது, ஏப்ரல் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, சமீபத்திய தகவல்களின்படி, உலகம் முழுவதும் சுமார் 10 கோடி ரூபாய் தாண்டி வசூல் செய்யப்படுகிறது. 

இந்நிலையில் அப்படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து கலாட்டா தமிழ் யூட்யூப் சேனலுக்கு, கில்லி படத்தின் இயக்குநர் தரணி பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டியில் இயக்குநர் தரணி கூறியிருப்பதாவது, ‘ ஒருநாள் மட்டும் தான் பார்க்கப்போறாங்கன்னு நினைச்சேன். இவ்வளவு பெரிய ரெஸ்பான்ஸை முதல்நாள் கூட, நான் எதிர்பார்க்கல. ஜெனரசேன் தாண்டி ஜெனரேசன் கொண்டாடுறாங்க. எல்லாத்திலேயும் ஒரு எக்ஸ்டிரீம் போவோம் இல்லையா? அதுமாதிரி விஜய் சாரை ஜீப்பை தூக்க சொன்னோம். அது அப்படி பண்ணுனது. செமி ஃபைனல்ஸில் தோத்துட்டாலும் ஃபைனல்ஸில் பார்த்துக்கலாம்னா, அதாவது, இதைவிட நன்றாக விளையாடணும்ங்கிற மீனிங்குல சொன்னது. அது மட்டும் இல்லாம, வேலுவோட தங்கச்சி, செமி ஃபைனல்ஸில் ஜெயிச்சு வாங்குனதுன்னு, அவங்க அப்பாகிட்ட, அவருடைய பரிசுகளை எடுத்துக்காட்டுவார்ல. அதுக்குண்டான பதில், படத்திலேயே இருக்கு.

கபடி கிளைமேக்ஸ் வரை, விஜய்சார் கிட்ட சொல்லவே இல்லை. அடுத்து, கிளைமேக்ஸில் தான் பிரகாஷ் ராஜை அடிக்கும்போது, இந்த கை விரல்களை வர்ம ஸ்டைலில் அடிக்கணும்னு சொன்னோம். ஏன்னா, கதைப்படி, பிரகாஷ்ராஜ் அப்படி அடிக்கிற ஆளு தான். அவர்ட்டேயே, அவருடைய பாணியில் ஒருவர் அடிக்கிறார்னா சட்டுனு மிரளுவாங்கல்ல. அதுக்காக அப்படி செஞ்சது.

நான் படத்துக்காக கபடி பிளேயர்ஸை கூட்டிட்டு வந்து ஒரிஜினலாக, இரண்டு நாள் பிராக்டீஸ் பண்ணவைச்சோம். படத்தில் நடித்து நடுவர்கள் எல்லாருமே ஒரிஜனலானவங்க தான். கபடியும் படத்தில் ஒரிஜனல் விதிகளோட தான் இருக்கும்.

கில்லி படத்தில் ஜெர்ஸியோட நம்பர் 10ன்னு கொடுக்க காரணம், சச்சினோட ஜெர்சி நம்பர் 10. இப்போது எடுத்திருந்தால், தோனியோட நம்பரான 7-யை கொடுத்திருப்பேன்.

விஜய் சார், அந்தப் படத்தில் அதிக காமெடியோட நடிச்சிருப்பார். அதை நாம் நடிச்சுக்காட்டும்போது, அப்படியே உள்வாங்கி,அவருடைய மேனரிஸத்துல சூப்பரா நடிச்சிருவார்.

மருதமலைன்னு அவர் பாடுற மாடுலேஷன்ல நாம் நடிச்சுக்காட்டுனது தான்.

முதலில் ஒக்கடு படத்தோட படத்தினை பார்க்கும்போது, என்னுடைய மூன்று கதைகள் அதில் இருக்கிறதுமாதிரி இருக்கு. பிறகு, அதனோட ரைட்ஸை வாங்கினோம். ‘ஒக்கடு’ படங்கிறது தெலுங்கு மொழியில் கிளாஸ். ஆனால், நான் தான் அதை அங்கங்க மாத்தி ‘மாஸ்’ ஆக்குனேன். பாட்டு, சீன் எல்லாத்தையும் மாத்தினேன்.

முதலில் தியாகராஜன் சாரையும், ஊர்வசி மேடத்தையும் நடிக்க வைக்க முயற்சி செய்தோம். அது கடைசியில் முடியாமல் போச்சு. அதன்பின், மொத்த டீமோட எனர்ஜி தான், படத்தை வேறலெவலுக்கு கொண்டு போச்சு.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை, அடிப்படையில் வேலு ஒரு நல்ல கபடி பிளேயர். அதனால் தான், அவருக்கு பிராக்டீஸ் தேவையில்லைன்னு தோணுச்சு. அதுமாதிரி மாண்டேஜ் சீன்ஸ் எடுக்கவேணாம்னு தோணுச்சு. அது ஒர்க் அவுட்டும் ஆச்சு’’ என்றார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி