தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Trisha Confirmed To Act In Thug Life Beyond Controversies

Thug Life: 'சர்ச்சையெல்லாம் அது நேத்து, இது இன்னைக்கு' - தக் லைஃப் படத்தில் இருப்பதை உறுதிசெய்த திரிஷா

Marimuthu M HT Tamil
Feb 21, 2024 08:03 PM IST

'தக் லைஃப்’படத்தில் நடிப்பதை உறுதி செய்தார், நடிகை திரிஷா.

Thug Life: 'சர்ச்சையெல்லாம் அது நேத்து, இது இன்னைக்கு' - தக் லைஃப் படத்தில் இருப்பதை உறுதிசெய்த திரிஷா
Thug Life: 'சர்ச்சையெல்லாம் அது நேத்து, இது இன்னைக்கு' - தக் லைஃப் படத்தில் இருப்பதை உறுதிசெய்த திரிஷா

ட்ரெண்டிங் செய்திகள்

அதிமுகவில் எம்.எல்.ஏவாக இருந்த வெங்கடாஜலம், கூவத்தூரில் செய்த சேட்டைகள் பற்றி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ பரபரப்பு பேட்டி ஒன்று கொடுத்தார். 

அதில், ’‘அதிமுகவில் ஒரு சாதாரண எம்.எல்.ஏ.வாக இருந்த வெங்கடாஜலம் கூவத்தூரில் இருக்கும்போது தன்னுடன் பொழுதைக் கழிக்க நடிகை திரிஷா வேண்டும் என்று அடம்பிடித்தார். நான் கூவத்தூரில் இருக்கும் வெங்கடாஜலத்தைப் பார்க்கப்போனேன். வெங்கடாஜலம் மது குடிக்கமாட்டார். ஆனால், அதற்குப் பதிலாக கூவத்தூரில் இருக்கும்போது திரிஷா வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தார். இது நடிகர் கருணாஸுக்கு தெரியும். எந்ததெந்த எம்.எல்.ஏக்களுக்கு நடிகைகள் வேண்டுமோ, அவர்களுக்கு நடிகைகளிடம் பேசி அவர்களை கூவத்தூருக்கு அழைத்து வந்தது, கருணாஸ் தான். பெரும்பாலான நடிகைகள் அங்கு வந்தனர். அதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது. வெங்கடாஜலத்துக்காக நடிகை திரிஷாவிடம் ரூ.25 லட்சம் கொடுத்து அவரை அழைத்து வந்தனர். நாங்கள் பார்த்ததை கேட்டதைச் சொல்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.

இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. அதற்கு நடிகர் மற்றும் இயக்குநர் சேரன், எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் நடிகை திரிஷா மீது அவதூறு பரப்பும் ஏ.வி.ராஜூவை கைது செய்யவேண்டும் என்று திரைத்துறையில் முதன்முதலாகக் குரல் கொடுத்தார்.

இதுகுறித்து நடிகர் மற்றும் இயக்குநர் சேரன் தனது எக்ஸ் பதிவில், ’வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும். விஷால் மற்றும் கார்த்தியை உள்ளடக்கிய நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்’ என்றார்.

இதுதொடர்பான தகவல் திரிஷாவுக்கு சென்ற நிலையில் அவர் அதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ‘’ கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது. உறுதியாக தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இனிமேல் சொல்ல வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய அனைத்தும் எனது வழக்கறிஞர் மூலமாகத்தான் சட்டத்தின் துணைகொண்டு சந்திப்பேன்’'என்றார்.

இதைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ மன்னிப்புக்கேட்டார். 

இது ஒரு புறம் இருக்க திரிஷா, எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தக் லைஃப் படத்தில் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார்.

அதாவது ‘தக் லைஃப்’ படத்தில் தான் நடிக்கும் காட்சிகள் குறித்த சீன் பேப்பரை, திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டிருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, தயார் ஆகி வரும் படம் தான், தக் லைஃப். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், துல்கர் சல்மான், ஜெயம் ரவி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் முடிந்துள்ள நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடப்பதாக சொல்லப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்