Prakash Raj: 16 ஆண்டு திருமண வாழ்க்கை.. இரண்டு மகள்கள்.. பிரகாஷ் ராஜ் முன்னாள் மனைவி உருக்கமான பேட்டி!
Prakash Raj, Lalitha Kumari: தன் முன்னாள் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தொடர்பாக லலிதா குமாரி பேட்டி அளித்து உள்ளார்.

பிரகாஷ் ராஜின் மனைவி நடன இயக்குனர் போனி வர்மா. அவருக்கு இது இரண்டாவது திருமணம். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். முன்னதாக நடிகை லலிதா குமாரியை 1994 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக 16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இருவரும் 2009 ஆம் ஆண்டு பிரிந்து சென்றார்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
பின்னர் பிரகாஷ் ராஜ், போனியுடன் நெருங்கி பழகி திருமணம் செய்து கொண்டார். இதுவும் காதல் திருமணம் தான்.
லலிதா குமாரி சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர். லலிதா தமிழ் நடிகர் சி. எல். ஆனந்தனின் மகள் மற்றும் நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரி. பிரகாஷ் ராஜும், லலிதா குமாரியும் காதல் திருமணம் செய்து கொண்டனர். சுமார் 30 படங்களில் நடித்த லலிதா குமாரி, 1994 ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜுவை திருமணம் செய்த பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார்.
