தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ghilli Rerelease Collection: ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட விஜய் நடித்த கில்லி - வசூலிலும் கில்லி; எவ்வளவு கலெக்‌ஷன் தெரியுமா?

Ghilli ReRelease Collection: ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட விஜய் நடித்த கில்லி - வசூலிலும் கில்லி; எவ்வளவு கலெக்‌ஷன் தெரியுமா?

Marimuthu M HT Tamil
Apr 20, 2024 05:42 PM IST

Ghilli ReRelease Collection: விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான அதிரடி திரைப்படமான கில்லி, மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

20 ஆண்டுகளை ஒட்டி ரி-ரீலீஸ் செய்யப்பட்ட கில்லி - வசூலிலும் கில்லி
20 ஆண்டுகளை ஒட்டி ரி-ரீலீஸ் செய்யப்பட்ட கில்லி - வசூலிலும் கில்லி

ட்ரெண்டிங் செய்திகள்

தரணி இயக்கத்தில் விஜய் நடித்த கில்லி திரைப்படம், 20ஆண்டுகளுக்குப் பிறகு மறு வெளியீடு ஆகியுள்ளது. அதாவது, இன்று ஏப்ரல் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சமீபத்திய தகவல்களின்படி, விஜய்யின் கில்லி அதன் தொடக்க நாளில் உலகம் முழுவதும் சுமார் 10 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இந்த செய்தி, கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

பிளாக்பஸ்டர் மீண்டும் திறப்பு: 

சினெட்ராக்கின் கூற்றுப்படி, கில்லி ஏற்கனவே தொடக்க நாளுக்கான (ஏப்ரல் 20) உலகளாவிய முன் பதிவு விற்பனையில் சுமார் 3 கோடி ரூபாய் சம்பாதித்து இருந்தது. விஜய்யின் படங்கள் அவரது சொந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்கும் என்று அறியப்பட்ட நிலையில், இந்த படத்தின் மறுவெளியீடு அவரது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

 மேலும் விஜய்யின் ரசிகர்கள், திரையரங்குகளில் சூப்பர்ஹிட் பாடலான அர்ஜூனரு வில்லு மற்றும் அப்படி போடு பாடலுக்கு நடனமாடும் வீடியோக்களால் சமூக ஊடகங்களை நிரப்பியுள்ளனர். 

ராம் முத்துராம் சினிமாஸ் வெளியிட்டுள்ள பதிவில், "உண்மையிலேயே கில்லி திரைப்படம், விஜய்யின் கேரியரில் மாற்ற முடியாத ரெக்கார்ட் ப்ரேக்கிங்", எனப் பதிவிட்டுள்ளது. மேலும், ஆஸ்கர் சினிமாஸ் என்னும் திரையங்கள் வெளியிட்ட செய்தியில், கில்லி திரைப்படம், அடுத்தடுத்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளைக் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளது.

கில்லி திரைப்படம் எத்தகையது?

கில்லி திரைப்படம், முதன்முதலில் ஏப்ரல் 17, 2004அன்று முதன்முதலாக ரிலீஸானது. உண்மையில் இந்தப் படம் ரிலீஸாகி 20 வருடங்களை நிறைவு செய்திருக்கிறது. 

விஜய் மற்றும் த்ரிஷா ஆகிய நட்சத்திரங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றாகும். மேலும் அதன் மறுவெளியீடு பாக்ஸ் ஆபிஸில் ஒரு புயலை உருவாக்கியுள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ’ஒக்கடு’ படத்தின் ரீமேக் தான், கில்லி. இந்த தமிழ் படம் திரையரங்குகளில் 200 நாட்கள் தாண்டி ஓடியது மற்றும் 2004ஆம் ஆண்டில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது.

தற்போது விஜய் அரசியலுக்கு வந்ததாக அறிவித்துள்ளார். மேலும், தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்க முடிவு செய்துள்ளார். நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அவரது அசைவுகள் ஒவ்வொன்றையும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதியான நேற்று நடந்தது. அதில் நடிகர் விஜய் வாக்களிக்க வந்தபோதுகூட, வாக்குச் சாவடியில் அவரை பார்க்க அவரது ரசிகர்கள் மொய்த்தனர். தற்போது, கில்லியின் மறு வெளியீடு, அவரது ரசிகர்களை இன்னும் உற்சாகம் அடையவைத்துள்ளது. 

மேலும், நடிகர் விஜய், தி கோட் - கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்  என்னும் படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.  

இந்நிலையில் கில்லி படத்தின் ரீரிலீஸை தியேட்டரில் பார்த்த இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், ரசிகர்களின் ரெஸ்பான்ஸை தனது சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்