HBD Actor Murali: இதயம் நிறைந்த நாயகன்..காதல் படங்களுக்கு தனி இலக்கணம் வகுத்த நடிகர் முரளி பிறந்தநாள் இன்று!
May 19, 2024, 09:17 AM IST
HBD Actor Murali: கன்னட படங்களின் மூலம் திரைத்துறைக்கு நடிகராக அறிமுகமான முரளி பூ விலங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி ஆனார். தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நடிகர் முரளி.
மறைந்த நடிகர் முரளி தமிழ் சினிமாவின் தனித்துவமான ஒரு நாயகன். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த இவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நடிகர் முரளி. மறைந்த நடிகர் முரளியின் 60ஆவது பிறந்தநாள் (மே 19) இன்று..!
வாழ்க்கைக் குறிப்பு
தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்த நடிகர் முரளி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 1964ஆம் ஆண்டு மே 19-ல் பிறந்தார். முரளியின் தந்தை சித்தலிங்கையா ஆவார். அவர் பல படங்களைத் தயாரித்துள்ளார். முரளியின் தாயார் தமிழகத்தைச் சேர்ந்தவர். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகாஷ் என்ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். அதர்வா தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார்.
முதல் படம்
1984-ஆம் ஆண்டு 'பிரேம பர்வா’ என்ற கன்னட திரைப்படம் மூலம் திரை உலகில் நுழைந்த முரளி தமிழில் 'பூ விலங்கு' படத்தின் மூலம் பிரபலமானார். முதல் திரைப்படத்திலேயே தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இயக்குனர் மணிரத்னத்தின் முதல் தமிழ்ப்படமான ‘பகல் நிலவு’ வின் நாயகனானார்.
காதல் படங்களுக்கு தனி இலக்கணம்
தொடர்ந்து 1990-ல் இயக்குனர் விக்ரமனின் முதல் திரைப்படமான ‘புதுவசந்தம்’ முரளிக்கு புது அடையாளத்தை பெற்று தந்தது. காதல் படங்களுக்கு தனி இலக்கணம் வகுத்த முரளியின் திரைப் பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது ‘இதயம்’. காதலை கடைசி வரை சொல்லாமலேயே கண்களில் தேக்கி வைத்து பண்பட்ட நடிப்பை வழங்கி இருப்பார் முரளி. கன்னட சினிமாவின் புகழ் பெற்ற இயக்குநர் சித்த லிங்கய்யாவின் மகனான நடிகர் முரளி தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
தமிழக அரசு விருது
பாரதி ராஜாவின் இயக்கத்தில் வெளியான 'கடல் பூக்கள்' படத்துக்காக 2000-ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருதை முரளி பெற்றுள்ளார். சிவாஜி, விஜயகாந்த், பிரபு, சரத்குமார், சத்யராஜ், வடிவேலு, பார்த்திபன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனந்தம் , சமுத்திரம், வெற்றிக்கொடிகட்டு , பொற்காலம், கனவே கலையாதே போன்ற திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பால் அசத்தி பல ரசிகர்களுக்கு பிடித்த நடிகர் ஆனார் முரளி. சுந்தரா டிராவல்ஸ் மூலம் காமடியிலும் ரசிக்க வைத்தார்.
இவர் கடைசியாக நடித்த படம் 'பாணா காத்தாடி'. அவருடைய மூத்த மகன் அதர்வா நாயகனாக அறிமுகமான திரைப்படம். தனது இயல்பான நடிப்பால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த முரளி செப்டம்பர் 8, 2010 அன்று 46வது வயதில் மாரடைப்பால் காலமானார். மறைந்த நடிகர் முரளியின் 60ஆவது பிறந்தநாள் (மே 19) இன்று..! காதல் திரைப்படங்களுக்கு தனி இலக்கணம் வகுத்த முரளி என்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயம் நிறைந்தே இருப்பார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v
டாபிக்ஸ்