தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  29 Years Of Murai Maman:'எங்க அக்கா மகளே இந்து’.. கவுண்டமணியின் தரமான காமெடி.. சுந்தர்.சியின் முதல் படமான ’முறைமாமன்’

29 Years of Murai Maman:'எங்க அக்கா மகளே இந்து’.. கவுண்டமணியின் தரமான காமெடி.. சுந்தர்.சியின் முதல் படமான ’முறைமாமன்’

Marimuthu M HT Tamil

May 19, 2024, 06:18 PM IST

google News
29 Years of Murai Maman: சுந்தர்.சியின் முதல் படமான ‘முறைமாமன்’ திரைப்படத்தில், கவுண்டமணியின் தரமான காமெடி ஒர்க் அவுட் ஆகி, படம் வெளியாகி 29 ஆண்டுகள் கழித்தும் பேசவைக்கிறது.
29 Years of Murai Maman: சுந்தர்.சியின் முதல் படமான ‘முறைமாமன்’ திரைப்படத்தில், கவுண்டமணியின் தரமான காமெடி ஒர்க் அவுட் ஆகி, படம் வெளியாகி 29 ஆண்டுகள் கழித்தும் பேசவைக்கிறது.

29 Years of Murai Maman: சுந்தர்.சியின் முதல் படமான ‘முறைமாமன்’ திரைப்படத்தில், கவுண்டமணியின் தரமான காமெடி ஒர்க் அவுட் ஆகி, படம் வெளியாகி 29 ஆண்டுகள் கழித்தும் பேசவைக்கிறது.

29 Years of Murai Maman: 1995ஆம் ஆண்டில், நடிகர் ஜெயராம் மற்றும் குஷ்பூ ஆகியோரை வைத்து சுந்தர். சி முதன்முறையாக இயக்கிய திரைப்படம், முறைமாமன். இந்தப் படத்தில் ஜெயராம் மற்றும் கவுண்டமணி இணைந்து செய்த காமெடி காட்சிகள் படுபிரபலம். இப்படத்திற்கு, வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

முறைமாமன் திரைப்படத்தின் கதை என்ன?:

 

பன்னெடுங்காலமாக சிறுசுவின் குடும்பத்திற்கும், அவரது உறவினரும் பரமேஸ்வரன் குடும்பத்துக்கும் இடையே பகை இருந்து வருகிறது. பரமேஸ்வரனின் சகோதரனால், சிறுசுவின் தந்தை கொலை செய்யப்பட்டதும், சிறுசுவின் அக்கா சாரதா, பரமேஸ்வரனின் உறவினரை காதல் திருமணம் செய்ததும் இரு குடும்பங்களுக்கு இடையிலான பகைக்குக் காரணமாக இருந்து வருகிறது.

பல ஆண்டுகளுக்குப் பின், சாரதா, மும்பையில் இருந்து தனது கணவர் சபாபதி மற்றும் மகள் இந்துவுடன், தனது தாயையும் சகோதரர்களையும் பார்க்க கிராமத்துக்கு வருகிறார். அக்கா மகளான இந்துவைப் பார்த்ததும், சிறுசுவுக்கு காதல் வந்துவிடுகிறது.

இதனிடையே ரத்னத்தின் தந்தை பரமேஸ்வரன், தனது மகன் ரத்னத்துக்கு, சபாபதியிடம் இந்துவை பெண் கேட்கிறார்.

மேலும் சபாபதி, இந்துவை ரத்னத்தை மணமுடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார். ஆனால், இந்து மறுத்துவிடுகிறார். ஒருநாள் இந்து, அந்த கிராமத்தை விட்டுச் செல்ல நினைக்கிறார். சிறுசு அவரைத் தடுத்து நிறுத்தி தன் காதல் பற்றி கேட்கும்போது, தான் யாரையும் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்றார். இதனை கிராமத்துவாசிகள் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். மேலும், இந்துவைத் தேடி வரும் ரத்னத்திடம், தாங்கள் இருவரும் சும்மா பேசிக்கொண்டிருந்ததாகக் கூறுகிறார். ஆனால், சிறுசு தான் இந்துவை கல்யாணம் செய்யப்போவதாக பொய் சொல்கிறார்.

பின், தன் காதலை வெளிப்படையாக இந்துவிடம் சொல்கிறார்,சிறிசு. ஆனால், இந்து அதற்கு சம்மதிக்கவில்லை. ஒரு நாள், இந்துவிற்கு உடல்நிலை சரியின்றி போகிறது. அப்போது, சிறிசு இந்துவை நன்கு பார்த்துக்கொள்கிறார். இந்துவின் உடல் நிலை சரியாக, ஊர் கோயிலில் இறைவனின் சிலையை வைக்க வேண்டும் என்று கூறுகிறார், சிறிசுவின் அம்மா. அதை படாதபாடு பட்டு நிறைவேற்றுகிறார், சிறிசு. இறுதியில் சிறிசுவின் காதலை உணர்கிறாள், இந்து.

இதனிடையே ரத்னத்தின் ஆட்கள் சிறிசுவை அடித்து விடுகின்றனர். ரத்னம், இந்துவை கடத்துகிறார். கடைசியில் சிறிசு, தன் மனைவியைக் காப்பாற்றுகிறார். தான் செய்த தவறுக்காக பரமேஸ்வரனிடமும் ரத்னத்திடம் மன்னிப்புக் கேட்கிறான். பகை மாறி இரு குடும்பங்களும் நண்பர்கள் ஆகின்றது.

முறைமாமன் திரைப்படத்தில் நடித்தவர்கள் விவரம்: 

 

இப்படத்தில் சிறிசு கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராமும், இந்து கதாபாத்திரத்தில் குஷ்பூவும் நடித்துள்ளனர். மேலும், பெருசு கதாபாத்திரத்தில் கவுண்டமணியும், சிறுசு மற்றும் பெருசுவின் தாய் கதாபாத்திரத்தில் மனோரமாவும் நடித்துள்ளனர். சாரதா கதாபாத்திரத்தில் சங்கீதாவும், சபாபதி கதாபாத்திரத்தில் ஜெய் கணேஷும் நடித்திருந்தனர். ரத்னம் கேரக்டரில் கஸான் கானும், பரமேஸ்வரன் கதாபாத்திரத்தில் வினு சக்ரவர்த்தியும் செய்துள்ளனர்.

ஸ்கோர் செய்த கவுண்டமணியின் காமெடி: 

 

இப்படத்தில் காமெடி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது.  குறிப்பாக, பெருசாக நடித்த கவுண்டமணி, தம்பி சிறிசாக நடித்த ஜெயராமுடன் சேர்ந்து செய்த அலப்பறைகள் ரகளை. இருவரும் சேர்ந்து ஆத்தங்கரையில் சேர் போட்டு உட்கார்ந்து சைட் அடிப்பது, நாயிடம் கவுண்டமணி மாட்டிக்கொள்வது, வீட்டில் சண்டையிட்டு கவுண்டமணியும் ஜெயராமும் சேர்ந்து சமைத்துவிட்டு, சாப்பிடப்போகும்போது, அது சரியில்லாமல் போக கொடுக்கும் ரியாக்‌ஷன் அனைத்தும் இப்படத்தில் ரசிக்கும்படியாக இருந்தன. குறிப்பாக, எங்க அக்கா மகளே இந்து என கவுண்டமணி செய்யும் மாடுலேஷன் படுபிரபலம்.

படம் வெளியாகி 29 ஆண்டுகள் ஆனாலும் முறைமாமன் திரைப்படத்தில் சுந்தர்.சியின் இயக்கமும், செல்வபாரதியின் வசனமும் தற்போது டிவியில் ஒளிபரப்பினாலும், நம்மை கலகலப்பாக வைத்துவிடும். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி