தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இருவரிடமும் நடந்த ரகசிய விசாரணை..பிரிவதில் உறுதி! தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்

இருவரிடமும் நடந்த ரகசிய விசாரணை..பிரிவதில் உறுதி! தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்

Nov 27, 2024, 08:25 PM IST

google News
பிரிவதில் உறுதியாக இருந்த நிலையில், இருவரிடமும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நல நீதிமன்றம்
பிரிவதில் உறுதியாக இருந்த நிலையில், இருவரிடமும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நல நீதிமன்றம்

பிரிவதில் உறுதியாக இருந்த நிலையில், இருவரிடமும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நல நீதிமன்றம்

கோலிவுட் ஸ்டார் தம்பதிகளாக இருந்து வந்த நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ஆகியோர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து

இதையடுத்து தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து மனு மீதான தீர்ப்பு இன்று மாலை வழங்கப்பட்டது. அதன்படி, இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 21ஆம் தேதி இந்த விவகாரத்து வழக்கின் விசாரணையின்போது, தனுஷ் - ஐஸ்வர்யா ஆகிய இருவரும் ஆஜராகினர். அப்போது கதவுகள் அடைக்கப்பட்டு இருவரிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இதில் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் பிரிவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதன் பின்னர் வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது விவாகரத்து வழங்க தீர்பளிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் - ஐஸ்வர்யா திருமணம் வாழ்க்கை

கடந்த 2004ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், அப்போது முன்னணி ஹீரோவாக உருவெடுத்து வந்து தனுஷுக்கும் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதையடுத்து தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் டீன் ஏஜ்ஜில் உள்ளார்கள். 18 வருட மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் பரஸ்பரம் பிரிவதாக கடந்த 2022இல் அறிவித்தனர்.

குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு

கடந்த ஏப்ரல் மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி பரஸ்பரம் இருவரும் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், "கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற எங்களது திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்றும் கோரியிருந்தனர். இவர்கள் தாக்கல் செய்த மனு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே ஆஜராகாத காரணத்தால், இந்த வழக்கை 3 முறை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தொடர்ந்து இவர்கள் ஆஜாராகாத காரணத்தால் இருவரும் சேர்ந்து வாழ இருப்பதாகவும் தகவல்கள் உலா வந்தன. அத்துடன் தம்பதியிடம் இரு குடும்பித்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது

வழக்கின் கடைசி விசாரணை நவம்பர் 21ஆம் தேதி நடந்த நிலையில், இன்று ஏற்கனவே அறிவித்தபடி தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நட்சத்திர தம்பதிகளான தனுஷ் - ஐஸ்வர்யா தற்போது அதிகாரப்பூர்வமாக பிரிந்துள்ளனர்.

தனுஷுக்கு ஒரே நாளில் இரண்டு திருப்பங்கள்

தனுஷ் வாழ்க்கையில் இன்று ஒரே நாளில் இரண்டு திருப்பங்கள் நடந்துள்ளன. கடந்த வாரம் தன்னை திட்டியும்,  தன் மீது குற்றச்சாட்டை முன்வைத்தும் நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் "தனது டாக்குமென்டரி படத்தில் தனுஷ் தயாரித்த நானும் ரெளடிதான் படக்காட்சியை பயன்படுத்த அவர் அனுமதிக்காமல் இரண்டு ஆண்டுகள் வரை இழுத்தடித்ததாகவும், அதற்கு நஷ்ட ஈடாக ரூ. 10 கோடி கேட்டதாகவும்" குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும் நயன்தாரா அறிக்கைக்கு பின் வெளியான அவரது டாக்குமென்டரியில் நானும் ரெளடிதான் படக் காட்சிகள் இடம்பிடித்திருந்தன. இதற்கு ஆட்சோபனை தெரிவித்து தனுஷ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் நயன்தாரா மற்றும் அவரது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் பதில் அளிக்குமாறு நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டது.

இதன்பின்னர் தனுஷ் தொடர்ந்த விவாகரத்து வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி