அஜித் தமிழ் நாட்டுல நடக்க முடியுமா.. அவர் பார்க்காத விஷயமே இல்லை.. இதுதான் ஃபர்ஸ்ட் டைம்!
Nov 06, 2024, 10:56 PM IST
அஜித்தை பொறுத்த மட்டில் உலகம் முழுவதும் அதிகமாக பைக் மற்றும் காரில் சாகச டிராவல் பண்ற மனிதர்.. விதவிதமான மக்கள் கலாச்சாரம் என்று அவர் பார்க்காத விஷயமே இல்லை என்ற அளவிற்கு டிராவல் பண்றவர். அதனால் இங்க ஜாதி விஷயம் மனிதர்களை வாழவே வைக்காது. சாதின்றது வேண்டவே வேண்டாம். அதை தான் அவர் சொல்கிறார்
நடிகர் அஜித் புதிதாக நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடந்து வருகிறது. படிப்பிடிப்புக்கு குடும்பத்துடன் சென்ற அஜித் தனது மனைவி ஷாலினி உடன் ரிலாக்ஸாக நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
அஜித்தின் அரசியல்
இந்நிலையில் அஜித் டிராவல் வீடியோ குறித்து மூத்த பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் CinePep சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, " நாம் ஏற்கனவே சொல்லியது போல் அஜித் நேரடி அரசியலில் இல்லை. ஆனால் அவர் மறைமுக அரசியலை தொடர்ச்சியாக செய்து கொண்டே இருக்கிறார். மஞ்சுவாரியர் அஜித் எல்லாம் ஹிமாச்சல் சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது. நெட்பிளிக்ஸ்க்கு அஜித்தின் ரிஸ்க்கான டிராவல் பயணத்தை மையப் படுத்தி ஒரு புராஜெக்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். அது மாதிரிதான் இந்த வீடியோ வந்திருக்கிறது.
அஜித்தை பொறுத்த மட்டில் உலகம் முழுவதும் அதிகமாக பைக் மற்றும் காரில் சாகச டிராவல் பண்ற மனிதர்.. விதவிதமான மக்கள் கலாச்சாரம் என்று அவர் பார்க்காத விஷயமே இல்லை என்ற அளவிற்கு டிராவல் பண்றவர். அதனால் இங்க ஜாதி விஷயம் மனிதர்களை வாழவே வைக்காது. சாதின்றது வேண்டவே வேண்டாம். அதை தான் அவர் சொல்கிறார். ஜாதி என்பது உங்களுக்கு பிடிச்சவகளையும் பிடிக்காதவங்களாக மாற்றி விடும். அதை நாம நேராகவே பார்த்திருக்கிறோம். ஆனா ஆன்மீகமா இருந்தாலும் அது ஒரு அளவோடதான் இருக்கணும். முடிஞ்சவரைக்கும் ஜாதி இல்லாத ஒரு உலகத்தை படைக்க முடிந்தால் நல்லது. அதைத்தான் அஜித் வாயிலாக நான் சொல்கிறேன். அவர் சொன்னதை நான் வழி மொழிகிறேன்.
அஜித் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே தன் படத்தின் மூலமாகவோ, இல்லை நேரடியாகவோ ஒரு கருத்தை தொடர்ச்சியாக பதிவு பண்ணி இருக்கார். அந்த கால கட்டத்தில் பெரிதாக தெரியவில்லை. இப்ப இருக்க ஜெனரேஷன்க்கு அது தெரில. இப்ப டிஜிட்டல் மீடியா இருக்கதால தெரியுது. எப்போதும் ஒரு நெருக்கடி வரும் போதுதான் ஒரு போராட்டம் புரட்சி நடக்கும்.. அந்த மாதிரி இப்ப இருக்க கால கட்டதில் ஜாதியால வரக் கூடிய பிரச்சனையை நினைத்துதான் இப்ப சொல்லி இருக்கிறார்.
இதுதான் ஃபர்ஸ்ட் டைம்
அஜித்தும் ஷாலினியும் ஜாலியா வாக்கிங் போறது போன்ற வீடியோ குறித்த கேள்விக்கு பதில் அளித்த சுந்தர், 'தமிழ் நாட்டில் எங்கயாவது ஒரு இடத்தில் இந்த மாதிரி இரண்டு பேரும் சேர்ந்து நடந்து போக முடியுமா.. அப்படி ஒரு வாய்ப்பே இருக்காது. எனக்கு தெரிந்து அவங்க இரண்டு பேருக்கும் திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இதுதான் ஃபர்ஸ்ட் டைம். நீங்க வெளிநாடு போகும் போது இந்த மாதிரி சுதந்திரம் இருக்கு.. துபாயில் அஜர்பைஜானில் தானே நடந்து போய் ஷாப்பிங் பண்ணேன் என்று சொல்லி இருக்கார். ட்ரெயல் ரூம்க்கு போய் நானே டிரஸ் போட்டு பாத்து வாங்குனேன் என்று சொன்னார். அந்த மாதிரிதான் ஸ்பெயினில் சூட்டிங் ஆரம்பித்து விட்டது. பேமிலியோட போயிருக்காங்க. அங்க அவர் பையனை அங்க நடக்குற புட் பால் மேச்சுக்கு கூப்பிட்டு போயிருக்காங்க.. ஷாலினியும் அவரோட பையன் ஆத்விக்கும் போயிருக்காங்க. அதுகுறித்த வீடியோவும் வந்துருக்கு. அதில் அவர் அவ்வளவு ப்ளெசெண்டா இருக்கார்' என்று தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்