Today Tamil Movies : காமெடியில் கலக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன்.. எம்.ஜி.ஆரின் கன்னித்தாய்.. இன்றைய நாளில் வெளியான படங்கள்!
Sep 10, 2024, 09:52 AM IST
Today Tamil Movies : ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன், எம்.ஜி.ஆர்.,-ஜெயலலிதா நடிப்பில் வெளியான கன்னித்தாய் என இன்றைய நாளில் வெளியான படங்கள் குறித்துப் பார்க்கலாம்.
பாஸ் என்கிற பாஸ்கரன்
2010ஆம் ஆண்டு ஆர்யா, நயன்தாரா, சந்தானம், சித்ரா லக்ஷ்மணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர்ஹிட் காமெடி திரைப்படமாக அமைந்து பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஆர்யா - சந்தானம் காம்போவில் உருவான இப்படத்தின் காமெடிக்கு என தனி ரசிகர் பட்டாளம் இன்றளவும் உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து வந்தனர்.
துரோகி
துரோகி 2010ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை சுதா கே. பிரசாத் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், விஷ்ணு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் பூர்ணா, பூனம் பஜ்வா மற்றும் பூஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
திருப்பூர்
திருப்பூர் திரைப்படம் 2010ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் ஆகும். எம். சி. துரைசாமி இயக்கிய இப்படத்தில் பிரபா, உதய், புதுமுகம் உன்னி மாயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சர்வமதி, பத்மகுமார், தண்டபாணி, மகாநதி சங்கர், திருப்பூர் செல்வராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஆர். தர்மராஜ் தயாரித்த இப்படம் சி. டி. சாஹு இசை அமைத்துள்ளார். இப்படமாது 10 செப்டம்பர் 2010 அன்று வெளியிடப்பட்டது.
செல்லமே
செல்லமே 2004-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தினை காந்தி கிருஷ்ணா இயக்கியிருந்தார். இதில் விஷால். ரீமா சென், பரத், பானுப்பிரியா, விவேக் ஆகியோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜயராஜ் இத்திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதினார்.
பேசும் படம்
சங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த திரைப்படம், பேசும் படம். அமலா, டினு ஆனந்த், சமீர் கக்கார், பிரதாப் உட்பட பலர் நடித்திருந்தனர். எல்.வைத்தியநாதன் இசை அமைத்திருந்தார். இந்தியில் புஷ்பக் என்ற பெயரில் வெளியானது. தேசிய விருது பெற்ற இந்தப் படம், 1987ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
கன்னித்தாய்
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஜோடியாக முதன் முதலில் ஒப்பந்தமான திரைப்படம் கன்னித் தாய் திரைப்படம். ஆனால், முதலில் வெளியானது ஆயிரத்தில் ஒருவன். எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, நம்பியார், அசோகன், நாகேஷ், ஆகியோர் நடிப்பில் ,தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி வெளியானது.
கே.வி.மகாதேவன் இசையில் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. பாடல்களைப் பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தார். என்றும் பதினாறு வயது பதினாறு,மானா பொறந்தா காட்டுக்கு ராணி, கேளம்மா சின்ன பொண்ணு, அம்மாடி தூக்கமா? உட்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. நாகேஷ், மனோரமா ஆடிப்பாடும் வாழ விடு வழிய விடு பாடலை தாராபுரம் சுந்தரராஜனுடன் இணைந்து மனோரமாவே பெண்குரலைப் பாடியிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்