The Goat : விஜய்யின் தி கோட் திரைப்படம் பார்க்க சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீசார் அதிரடி நடவடிக்கை!-the traffic police fined the vehicles parked in no parking by the fans who had come to watch the movie the goat - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  The Goat : விஜய்யின் தி கோட் திரைப்படம் பார்க்க சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீசார் அதிரடி நடவடிக்கை!

The Goat : விஜய்யின் தி கோட் திரைப்படம் பார்க்க சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீசார் அதிரடி நடவடிக்கை!

Divya Sekar HT Tamil
Sep 06, 2024 10:03 AM IST

The Goat : குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் ஜிஎஸ்டி சாலையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட சுமார் 50 வாகனங்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து அபராத ரசீதை வாகனத்தில் ஒட்டி விட்டு சென்றனர்.

The Goat : விஜய்யின் தி கோட் திரைப்படம் பார்க்க சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீசார் அதிரடி நடவடிக்கை!
The Goat : விஜய்யின் தி கோட் திரைப்படம் பார்க்க சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீசார் அதிரடி நடவடிக்கை!

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே 'தி கோட்'. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், யோகி பாபு, வைபவ், பிரேம்ஜி, அஜ்மல், விடிவி கணேஷ், அர்விந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

50 வாகனங்களுக்கு 500 ரூபாய் அபராதம்

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டை திரையரங்கில் நேற்று காலை 9 மணி அளவில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது அந்த தியேட்டரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்கள் படம் பார்க்க ஒரே நேரத்தில் கூடியதால் அவர்களின் இருசக்கர வாகனம் நிறுத்த இடம் இல்லாததால் வாகனங்களை ஜி.எஸ்.டி சாலை ஓரம் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு சென்றனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் ஜிஎஸ்டி சாலையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட சுமார் 50 வாகனங்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து அபராத ரசீதை வாகனத்தில் ஒட்டி விட்டு சென்றனர். 

1,100 திரையரங்குகளில் ரிலீஸ்

நேற்று வெளியான இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1,100 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இதுமட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 5,000 திரையரங்குகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என மொத்தம் ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

சுமார் ரூபாய் 45 கோடிகள் வசூல்

படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் ரூபாய் 45 கோடிகள் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் தமிழில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 38 கோடியும், மலையாளத்தில் கிட்டத்தட்ட ரூபாய் 2 கோடியும், தெலுங்கில் இரண்டு கோடியும் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

இப்படம் முதல் நாளில் அதிக பாக்ஸ் ஆபிஸ் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது. முதல் நாளில் 76.23% ஆக்கிரமிப்பைப் பெற்ற இந்தப் படம் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டது. குறிப்பாக இரவுக் காட்சிகளுக்கு அதிக தேவை இருந்தது, 85.33% பார்வையாளர்கள். 

மாலை மற்றும் பிற்பகல் நிகழ்ச்சிகளில் முறையே 78.36% மற்றும் 71.48% என குறிப்பிடத்தக்க மக்கள் கூட்டம் காணப்பட்டது. காலைக் காட்சிகள் ஒப்பீட்டளவில் குறைவான பார்வையாளர்களைக் கொண்டிருந்தன, ஆனால் இன்னும் 69.74% ஆக்கிரமிப்பை வலுவாக நிர்வகித்துள்ளன, இது பல்வேறு நேர இடைவெளிகளில் படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.