தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Hbd Shankar Mahadevan Birthday Of 'Shankar Mahadevan, Who Entertains Us With Bouncy Songs

HBD Shankar Mahadevan: ‘துள்ளல் பாடல்களால் நம்மை குதூகலிக்க வைக்கும் சங்கர் மகாதேவன்’ பிறந்தநாள்

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 03, 2024 07:00 AM IST

ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இசையில் மணிரத்னம் அவர்கள் இயக்கிய பம்பாய் படத்தில் முதன்முதலில் இணைந்தார். அந்த பிணைப்பு இன்று வரை ரஹ்மான் அவர்களுடன் தொடர்கிறது.

சங்கர் மகாதேவன் பிறந்தநாள்
சங்கர் மகாதேவன் பிறந்தநாள் (Richard Shotwell/Invision/AP)

ட்ரெண்டிங் செய்திகள்

1967 மார்ச் 3 அன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். மும்பையில் பிறந்த போதிலும் அவருடைய பெற்றோர் கேரளாவில் உள்ள பாலக்காட்டு பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தனது சிறு வயதிலேயே கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானிய இசையை பயின்றவர். ஶ்ரீனிவாஸ்காலே மற்றும் பாலாமணி ஆகியோர் இவருக்கு இசையில் ஆசான்களாக வழிகாட்டியவர்கள். இசையில் ஒரு பக்கம் பயணம் செய்து கொண்டே கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட பொறியியல் பட்டத்தையும் ராம்ராவ் ஆதிக் இன்ஸ்டிடியூட்டில் பெற்றார்.

இவர் பொறியியல் பட்டம் முடித்துவிட்டு ட்ரிஜின் டெக்னாலஜி என்ற நிறுவனத்தில் வேலை செய்த போதிலும் அவருக்கான கலை ஆர்வம் வேறு பாதையில் அவரை இழுத்து சென்றது. சங்கர் எஹ்சான், லாய் இணைந்து இசை அகாடமியை உருவாக்கி மாணவர்கள் மத்தியில் இசையை கற்று கொடுத்தார். இசையில் ஆர்வத்தோடு இருந்தவர் நடிப்பிலும் மாடலிங் துறையிலும் இறங்கினார். 1998 ல் "ப்ரீத்லெஸ்" என்ற இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டு இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து பாலிவுட் படங்களில் பாடவும் இசையமைக்கவும் செய்தார்.  மேலும் தெலுங்கு, மளையாளம், தமிழ், மராத்தி என்று பல மொழிகளில் தனது இசையால் குரலால் ஆளுமை செலுத்தினார். ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இசையில் மணிரத்னம் அவர்கள் இயக்கிய பம்பாய் படத்தில் முதன்முதலில் இணைந்தார். அந்த பிணைப்பு இன்று வரை ரஹ்மான் அவர்களுடன் தொடர்கிறது.

தமிழ் மொழியில் இளையராஜா ரஹ்மான் யுவன் ஷங்கர் ராஜா வித்யாசாகர் ஹாரீஸ் ஜெயராஜ் விஜய் ஆன்டனி இமான் ஜி.வி.பிரகாஷ் போன்ற இசை அமைப்பாளர் களுடன் பாடி இருக்கிறார். தேசிய அளவில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கு இசை அமைப்பாளராக இருந்து வருகிறார். 2012 ல் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற சர்வதேச ஜாஸ் விழாவிலும் இசை அமைத்துள்ளார்.

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் வரும் என்ன சொல்ல போகிறாய் பாடலுக்கு தேசிய விருது பெற்றவர். 2003, 2005 ஆண்டுகளில் சிறந்த இசைக்காக கல் ஹோ நா ஹோ , பண்டி அவுர் பாப்லி படங்களுக்காக பிலிம்பேர் விருது, 2004ல் கல் ஹோ நா ஹோ படத்தில் சிறந்த இசை அமைப்புக்காக தேசிய விருது, 2008 ல் சிறந்த பின்னணி பாடகருக்கான ஆந்திரா, கேரளா அரசு விருதுகள், 2001,2005,2009 ல் சிறந்த இசையமைப்பாளருக்காக ஸ்டார் ஸ்கிரீன் விருது, 2011ல் லதா மங்கேஷ்கர் விருது, "திஸ் மொமென்ட்" என்ற இசை ஆல்பத்துக்காக சர்வதேச அளவில் 66வது கிராமி விருது , 2019ல் பத்மஶ்ரீ விருது, என்று அவரது பட்டியல் மிகவும் நீளமானது.

சங்கர் சங்கீதா என்பவரை மணந்தார். இந்த தம்பதியருக்கு சித்தார்த், சிவம் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் இசைத்துறையில் உள்ளனர். 1994ல் காதலன் படத்தின் இந்தி ரீமேக்கில் பேட்ட ராப், ஊர்வசி ஊர்வசி என்று பாடிய பாடல்கள் இரண்டும் ஹிட் அடித்தது. 1998ல் ஜாவேத் அக்தர் இசையில் வந்த "பிரீத்லெஸ்" என்ற இசை ஆல்பத்தில் இவர் பாடியது புகழின் உச்சம் அடைய உதவியது. 1997ல் விஐபி படம் மூலம் தமிழுக்கும் 1998ல் அந்தபுரம் என்ற படம் மூலம் தெலுங்கு மொழிக்கும் 1999ல் ஜானுமதாதா படம் மூலம் கன்னடத்திலும் 2000ல் ட்ரீம்ஸ் என்ற படம் மூலம் மலையாள மொழியிலுமாக தனது கால்களை அழுத்தமாக பதித்தார். இவர் குழுவினர் 75 படங்களில் இசை அமைத்துள்ளனர். அதேபோல் இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளனர்.

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் வரும் என்ன சொல்ல போகிறாய் பாடலுக்கு தேசிய விருது பெற்றவர். 2003, 2005 ஆண்டுகளில் சிறந்த இசைக்காக கல் ஹோ நா ஹோ , பண்டி அவுர் பாப்லி படங்களுக்காக பிலிம்பேர் விருது, 2004ல் கல் ஹோ நா ஹோ படத்தில் சிறந்த இசை அமைப்புக்காக தேசிய விருது, 2008 ல் சிறந்த பின்னணி பாடகருக்கான ஆந்திரா, கேரளா அரசு விருதுகள், 2001,2005,2009 ல் சிறந்த இசையமைப்பாளருக்காக ஸ்டார் ஸ்கிரீன் விருது, 2011ல் லதா மங்கேஷ்கர் விருது, "திஸ் மொமென்ட்" என்ற இசை ஆல்பத்துக்காக சர்வதேச அளவில் 66வது கிராமி விருது , 2019ல் பத்மஶ்ரீ விருது, என்று அவரது பட்டியல் மிகவும் நீளமானது.

சங்கர் சங்கீதா என்பவரை மணந்தார். இந்த தம்பதியருக்கு சித்தார்த், சிவம் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் இசைத்துறையில் உள்ளனர். 1994ல் காதலன் படத்தின் இந்தி ரீமேக்கில் பேட்ட ராப், ஊர்வசி ஊர்வசி என்று பாடிய பாடல்கள் இரண்டும் ஹிட் அடித்தது. 1998ல் ஜாவேத் அக்தர் இசையில் வந்த "பிரீத்லெஸ்" என்ற இசை ஆல்பத்தில் இவர் பாடியது புகழின் உச்சம் அடைய உதவியது. 1997ல் விஐபி படம் மூலம் தமிழுக்கும் 1998ல் அந்தபுரம் என்ற படம் மூலம் தெலுங்கு மொழிக்கும் 1999ல் ஜானுமதாதா படம் மூலம் கன்னடத்திலும் 2000ல் ட்ரீம்ஸ் என்ற படம் மூலம் மலையாள மொழியிலுமாக தனது கால்களை அழுத்தமாக பதித்தார். இவர் குழுவினர் 75 படங்களில் இசை அமைத்துள்ளனர். அதேபோல் இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்