நோ மிங்கிள்.. இப்போ நான் ஒன்லி சிங்கிள் தான்.. 50 வயது நடிகை பிரேக்கப் செய்த நடிகர்!
Oct 29, 2024, 10:44 PM IST
பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் தான் இப்போது யாருடனும் ரிலேஷன்ஷிப்பில் இல்லை. சிங்கிளாகத் தான் உள்ளேன் எனக் கூறியுள்ளார்.
தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர். பாலிவுட்டில் பெயர் சொல்லும் நடிகர்களில் ஒருவராக உள்ள இவர் 50 வயதைக் கடந்த நடிகை மலைக்கா அரோராவுடன் 6 வருடமாக ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் கசிந்த நிலையில், அதுகுறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் அர்ஜுன் கபூர்.
மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் ராஜ் தாக்கரேவின் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், அர்ஜுன் கபூர், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய அர்ஜுன் கபூர், "அபி சிங்கிள் ஹூன் மெயின், ரிலாக்ஸ்" எனக் கூறியுள்ளார், அதாவது அவர் இப்போது சிங்கிளாகத் தான் உள்ளார். யாருடனும் ரிலேஷன்ஷிப்பில் இல்லை. எனவே, கொஞ்சம் பொறுமையாக இருங்கள் எனக் கூறியுள்ளார்.
மலைக்கா அரோரா
பாலிவுட்டில் பேர் சொல்லும் அளவிற்கு பல படங்களில் நடித்திருந்தாலும், மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் தைய தையா பாடலுக்கு நடனமாடி இந்த அளவில் பிரபலமானவர் தான் மலைக்கா அரோரா. தற்போது 50 வயதைக் கடந்த அவர், நடிகர் அர்ஜுன் கபூருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்காக பல எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார்.
12வயது மூத்தவருடன் பழகும் அர்ஜுன்
மலைக்கா அரோரா நடிகர் அர்பாஸ் கானை திருமணம் செய்து குடும்பம் நடத்திவந்த நிலையில், அவரை 2017ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் உள்ளார். இதையடுத்து, தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழத் தொடங்கினார். இதுவே, இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலரும் விமர்சிக்க காரணமாக அமைந்தது.
மலைக்கா அரோரா அர்ஜுன் கபூரை விட 12 வயது பெரியவர். நடிகை என்பதால், தன் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொண்டு, சிறுவயது நபரின் வாழ்க்கையில் விளையாடுகிறார் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
விமர்சனங்களைக் கண்டுகொள்ளாத ஜோடி
அத்துடன் நில்லாமல், இருவர் குறித்த ஏராளமான வதந்திகளை கூறி வந்தனர். இதனை அர்ஜுன் கபூரும், மலைக்கா அரோராவும் கண்டுகொள்ளாமலே இருந்த நிலையில், திடீரென இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க விரும்பாத இருவரும் சோசியல் மீடியாவில் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இதனால், மலைக்கா அரோரா குறித்து மீண்டும் சர்ச்சைகள் சுற்றத் தொடங்கின.
இந்நிலையில், தீபாவளி நிகழ்ச்சி ஒன்றில், தனது ரிலேஷன்ஷிப் முறிந்து விட்டதாக பொதுவெளியில் முதன்முதலாக கருத்து தெரிவித்துள்ளார் அர்ஜுன் கபூர். இதனால், இவர்கள் இருவர் குறித்தும் இத்தனை நாள் வெளியான அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
அடுத்த படத்திற்காக காத்திருக்கும் அர்ஜுன் கபூர்
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அர்ஜூன் கபூர் சிங்கம் அகைன் எனும் பெரிய பட்ஜெட் படத்தில் நடித்துள்ளார். வெளியீட்டிற்கு தயாராகி வரும் இந்தப் படத்தில் அஜய் தேவ்கன், தீபிகா படுகோனே, கரீனா கபூர், டைகர் ஷெராஃப், ஜாக்கி ஷெராஃப், ரன்வீர் சிங் மற்றும் அக்ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
டாபிக்ஸ்