Bigg boss Archana: சீனியர்னா என்ன வேணாலும் பேசலாமா..? சுயமரியாதை ரொம்ப முக்கியம்’ - பிக்பாஸ் அர்ச்சனா பளார்
Sep 18, 2024, 02:32 PM IST
Bigg boss Archana: சீனியர் என்பதால் நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று சொல்வது மிகவும் தவறானது. பெண்களாகிய நமக்கு எல்லா இடத்திலும், உடல் ரீதியாகவும் மனரீதியாக ரீதியாகவும் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள சரியான வாய்ப்பு கிடைக்காது. - பிக்பாஸ் அர்ச்சனா!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை - பிரியங்காவுக்கு இடையேயான மோதல் பூதாகரமாக வெடித்து இருக்கும் நிலையில், இது குறித்து கடந்த பிக்பாஸ் சீசன் வின்னரான அர்ச்சனா ரவிச்சந்திரன் டேக் 1 யூடியூப் சேனலு க்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
சீனியர்ன்னு சொல்றது தப்பு
இது குறித்து அவர் பேசும் போது," எனக்கு அவர்கள் இருவருமே பெரிய பரிட்சயம் கிடையாது. அதனால் இதை பற்றி நான் பெரிதாக பேச முடியாது. ஆனால், பொதுவாக என்னுடைய அனுபவத்தில் இருந்து நான் சொல்கிறேன். சீனியர் என்பதால் நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று சொல்வது மிகவும் தவறானது. பெண்களாகிய நமக்கு எல்லா இடத்திலும், உடல் ரீதியாகவும் மனரீதியாக ரீதியாகவும் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள சரியான வாய்ப்பு கிடைக்காது.
நம்மை பாதுகாக்க, எப்போதும் நம்முடன் ஒருவர் இருந்து கொண்டே இருக்க முடியாது. ஆகையால், ஒரு கட்டத்தில் எல்லோருமே தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் நம்மை விட நமக்கு மிகப்பெரியது என்ற ஒன்று கிடையவே கிடையாது.
விட்டுக் கொடுக்கவே கூடாது.
நம்மை நாம் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கவே கூடாது. இதில் சுயமரியாதை என்பது மிக முக்கியம். பெண்கள் தனக்குத்தானே உறுதுணையாக நின்று, திடமாக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த காலத்தில் நாம் வாழ முடியும். நான் இவ்வளவு போல்டாக இருப்பதற்கு என்னுடைய பெற்றோர்தான் காரணம். நான் சுயமாக சிந்தித்து எனக்கான வேலைகளை செய்து கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தது அவர்கள் தான். அதனால் தான் என்னால் இப்படி இருக்க முடிகிறது." என்று பேசினார்.
முன்னதாக, பிரியங்கா மணிமேகலை விவகாரம் குறித்து பாடகி சுசித்ரா ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசி இருந்தார். அந்த பேட்டியையும் பார்க்கலாம்.
இது குறித்து அவர் பேசும் போது," பிரியங்கா மணிமேகலை விவகாரத்தை பார்க்கும் போது, வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ திரைப்படம்தான் எனக்கு ஞாபகம் வருகிறது.
பிரியாதான் உதாரணம்
‘ஆடுகளம்’ திரைப்படத்தில் குரு சிஷ்யனுக்கு இடையிலான தொழில் போட்டியும், அதனால் ஏற்படும் வன்மமும் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். குருவானவர் தன்னுடைய சிஷ்யன் தன்னை விட அதிகமாக வளர்கிறான் என்றால் ஒன்று, அவரை வெட்டி விட்டு, தான் வளர வேண்டும் என்று நினைப்பார். இல்லை, அவரை தன்னுடைய வாரிசு என்று நினைத்து, அவனை வளர்த்து விட நினைப்பார். அதற்கு உதாரணம் தொகுப்பாளர் பிரியா. அவர் சக தொகுப்பாளர்களுக்கு போதுமான ஸ்பேசை கொடுத்து, அவர்கள் வளர பல வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.
விஜய் டிவியில் எப்போது பிரதீப் என்பவரின் ஆதிக்கம் அதிகமானதோ அப்போதிலிருந்து தான் இது போன்ற பிரச்சினைகள் வர ஆரம்பித்தன. அவர் அவருக்கென்று ஒரு குரூப்பை சேனலுக்குள் செட் செய்ய முயற்சிகளை எடுத்தார். அவர்தான் டிடி உட்பட தேவையில்லாத நபர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்து வளர்த்து விட்டார்.
அதிகார மோதல்
அவர்கள் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி, தாங்களும் இந்த சேனலில் மிகப்பெரிய ஆள் என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டனர். அதுதான் அங்கு பிரச்சினையே. ஆனால், இது நிறுவனம் சார்ந்த இந்த நெப்போட்டிசம் கிடையாது. இது எப்படியான நெப்போட்டிசம் என்றால், ஒன்றாக சேர்ந்து சரக்கு அடிப்பது, முத்தம் கொடுத்துக் கொள்வது... ஏன்… அதை தாண்டி கூட நடந்து இருக்கலாம். சேனலுக்குள் என்ன பிரச்சினை என்றாலும், பிரதீப்பை ஒரு கடவுள் போல பாவித்து, அவரிடம் எல்லாவற்றையும் கொண்டு செல்வது உள்ளிட்டவை செய்யப்படும். இதில் கடுமையாக பாதிக்கப்பட்டவர் தொகுப்பாளர் பாவனா. அதன் பின்னர் அவர் விஜய் டிவியில் இருந்து வெளியேறினார். இப்போது மணிமேகலை வெளியேறி இருக்கிறார்." என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்