தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Tamil: விசித்ரா முதுகில் குத்திய அர்ச்சனா.. ஆதங்கத்தில் குமுறும் அம்மா - குளு குளு மோடில் புல்லி கேங்!

Bigg Boss Tamil: விசித்ரா முதுகில் குத்திய அர்ச்சனா.. ஆதங்கத்தில் குமுறும் அம்மா - குளு குளு மோடில் புல்லி கேங்!

Nov 26, 2023, 08:41 AM IST

google News
விசித்ராவும் அர்ச்சனாவும் சண்டையிட்டுக்கொண்டனர்.
விசித்ராவும் அர்ச்சனாவும் சண்டையிட்டுக்கொண்டனர்.

விசித்ராவும் அர்ச்சனாவும் சண்டையிட்டுக்கொண்டனர்.

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவும், விசித்ராவும் பிரிக்க முடியாத உறவுகளாக மாறி போயினர். கடந்த வாரம் அவர்கள் இருக்கும் வீடுகள் மாற்றப்பட்டன. இதில், இருவருக்குள் ஒரு வித விரிசல் விழுந்து இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து கமலிடம், சக போட்டியாளரான நிக்சன் கூறினார்

அப்போது, “விசித்ராவையும், அர்ச்சனாவையும் பிரித்ததில் ஒன்று நடந்தது. விசித்ராவை அம்மா என்று அழைத்துக்கொண்டு அர்ச்சனா ஒரு சோனில் இருந்தார். அப்படி இருக்கையில், விசித்ராவை பற்றி, அர்ச்சனா என்னவெல்லாம் சொன்னார்கள் என்பதை கேட்க சொல்லுங்கள்.

நேற்று முன் தினம் காலையில் வெளியே சென்றாலே, விசித்ரா மேடம் என்னுடைய மண்டையை கழுவுகிறார் என்று தினேஷிடம் அவர் சொன்னார்.” என்றார்

இதனையடுத்து பேசிய அர்ச்சனா, “நான் அவரிடம் சென்று பேசினாலே நீ தினேஷின் நண்பர் என்று பேசுகிறார். அதனால்தான் என்னால் அவருடன் பேச முடியவில்லை என்றார். மேலும் பேசிய அர்ச்சனா, விசித்ரா மாயா எனும் மாயவலையில் மாட்டிக்கொண்டார் என்று நன்றாகவே தெரிகிறது. நீங்கள் மாறிக்கொண்டே வருகிறீர்கள் என்று அவரிடம் நான் சொன்னேன். அதற்கு அவர், என் மீது நம்பிக்கையில்லையா என்று கேட்டார். முதல் 2 வாரத்தில் பார்த்த விசித்ராவை இந்த வாரம் பார்க்க முடியவில்லை” என்றார்.

 

இதனையடுத்து அர்ச்சனாவிடம் பேசிய விசித்ரா, “மாயா ஒரு பக்கம் நல்லவள்தான். எப்படி உன்னை எனக்கு பிடிக்குமோ, அதே போல அவளுடைய சில விஷயங்களும் எனக்கு பிடிக்கும். நீ என்னை கட்டுப்படுத்தக்கூடாது.

என்னை கட்டுப்படுத்தினால் நான் எகிறி விடுவேன் என்று உனக்குத் தெரியாதா? எல்லாரிடமும் ஒரு நல்ல குவாலிட்டி இருக்கிறது. அதனை மதிக்க வேண்டும். அதில் என்ன தவறு இருக்கிறது.

உனக்கு உள்ளே தோன்றும் ஃபீலானது தவறாக சென்று கொண்டிருக்கிறது. வீடு மாறினால், சில விஷயங்கள் நடக்கும். என் மீது நம்பிக்கை இருந்தால், அதனை அப்படியே கொண்டு செல். ஆனால், நீ அதனை மறந்து விட்டாய்.

நீ பின்னாடி சென்று என்னவெல்லாமோ பேச ஆரம்பித்து விட்டாய். எனக்கு நிக்சன் சொன்ன பிறகுதான், நீ இப்படி பேசியிருக்கிறாய் என்பது தெரிந்தது. உன்னில் மாற்றம் தெரிந்த பிறகு, உன்னை வந்து முத்தம் கொடுக்க வேண்டும், கொஞ்ச வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க கூடாது.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி