தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  டி போடாத.. வீட்டை தாண்டி வந்த சண்டை.. இறங்கி அடித்த பவித்ரா.. வார்த்தைய விடாத.. பிக்பாஸ் இனிதே ஆரம்பம்

டி போடாத.. வீட்டை தாண்டி வந்த சண்டை.. இறங்கி அடித்த பவித்ரா.. வார்த்தைய விடாத.. பிக்பாஸ் இனிதே ஆரம்பம்

Oct 09, 2024, 11:44 AM IST

google News
பிக்பாஸ் வீட்டில் பெண்கள் அவர் அவர் அணியில் அடித்துக் கொண்ட நிலையில், முதல் முறையாக ஆணுக்கும் பெண்ணுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் பெண்கள் அவர் அவர் அணியில் அடித்துக் கொண்ட நிலையில், முதல் முறையாக ஆணுக்கும் பெண்ணுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் பெண்கள் அவர் அவர் அணியில் அடித்துக் கொண்ட நிலையில், முதல் முறையாக ஆணுக்கும் பெண்ணுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் பாய்ஸ் vs கேர்ள்ஸ் டாஸ்க் முடிந்து பெண்கள் அணியிலிருந்த பவித்ரா ஜனனி ஆண்கள் அணிக்கு சென்றார்.

அவர் அங்கு சென்றபோது, பாய்ஸ் அணி சமைக்க உப்பு எடுக்காமல் இருந்தபோது, அதை பெண்கள் அணியிடமிருந்து எப்படி வாங்க வேண்டும் என ஐடியா கொடுத்து அவர்களோடு சகஜமாக இருந்தார்.

ஆனால், அடுத்த நாளே, விஜே விஷாலுடன் சண்டையிட்டு கத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

'டி' சண்டை

அந்தப் ப்ரமோவின் படி, விஜே விஷால், பவித்ரா ஜனனியை டி சொல்லி பேசியுள்ளார். அது பிடிக்காததால், பவித்ரா தன்னை அப்படி கூப்பிட வேண்டாம் என விஜே விஷாலிடம் கூறியுள்ளார், இருந்தும் அவர், நான் எல்லா பெண்களையும் அப்படி தான் அழைப்பேன் எனக் கூறி மீண்டும் டி சொல்லியுள்ளார்.

இதனால் கோபமடைந்த பவித்ரா, விஜே விஷாலிடம் சண்டையிட்டுள்ளார். இதனை வீடே திரும்பிப் பார்க்க சண்டை பெரிதாகிறது. நீ யாரை வேண்டுமானாலும் டி போட்டுக்கொள் ஆனால் என்னை அப்படி நீ கூப்பிடக் கூடாது அது எனக்கு பிடிக்கவில்லை என அவர் கோபமாக கூறினார். உடனே விஜே விஷால் அப்படி என்றால் நான் யாரை எப்படி கூப்பிட வேண்டும் எனவும் நீ சொல்லாதே என கத்தினார்.

மன்னிப்பு கேட்க முடியாது

இதனால், சிலர் பவித்ராவையும் சிலர் விஜே விஷாலையும் சமாதானப்படுத்துகின்றனர். இதனை, விஜே விஷால் பவித்ராவிடம் மன்னிப்பு கேட்க சொன்னதாக நினைத்துக் கொள்கிறார்.

தன்னால் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது எனக் கூறி விஜே விஷால் சத்தம் போட்டார். பின் ஆண்கள் அணியினர் அவரை தொடர்ந்து சமாதானப்படுத்தினர்.

இதனை கூர்ந்து கவனித்த அருண், இந்த விவகாரத்தை வைத்து பெண்கள் அணி ஏதேனும் பிரச்சனை செய்யக்கூடும் என நினைத்து, விஜே விஷாலை சமாதனம் படுத்தியதுடன் அவரை பொறுமையாகவும் வார்த்தைகளை சரியாக கையாளுமாறும் கூறினார்.

இந்த ப்ரமோ வெளியானதை அடுத்து, மக்களிடம் ஆஹா சண்டை ஆரம்பித்து விட்டது. இனி பிக்பாஸ் வீடு ரணகளமாக இருக்கும் என குஷியாக உள்ளனர்.

கிசுகிசுக்கப்பட்ட அடுத்த நாளேவா?

முன்னதாக, விஜே விஷால் சேப் ஆக கேம் ஆடுகிறார். அவர் யாரிடமும் சரியாக பேசுவதில்லை. பிக்பாஸ் வீட்டில் எந்த டாஸ்கிலும் அவர் ஆர்வமாக ஈடுபடுவதில்லை. தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களிடம் கூட அவர் சரியாக பேசுவதில்லை என ஜாக்குலினும் தர்ஷாவும் குற்றம் சாட்டிய நிலையில் இன்று பேச ஆரம்பித்ததுமே சண்டையில் முடிந்திருக்கிறது.

ஏற்கனவே பவித்ரா பெண்கள் அணியில் இருப்பவரிடமே எல்லை மீறி கத்தியுள்ளார், நேற்று பெண்கள் அணி சார்பாக தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர் தாமாக இருக்கவேண்டும் என்பதற்காக பவித்ரா, தர்ஷா குப்தாவிடமும், ஜாக்குலினிடமும் பயங்கரமாக சண்டையிட்டார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை