‘கண்ணுங்களா உங்க எழில் வந்துருக்கேன்.. சென்னை பையன்.. பாக்கியலட்சுமி கொடுத்த பாசம்! - தொகுப்பாளர் விஷால் யாரு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘கண்ணுங்களா உங்க எழில் வந்துருக்கேன்.. சென்னை பையன்.. பாக்கியலட்சுமி கொடுத்த பாசம்! - தொகுப்பாளர் விஷால் யாரு தெரியுமா?

‘கண்ணுங்களா உங்க எழில் வந்துருக்கேன்.. சென்னை பையன்.. பாக்கியலட்சுமி கொடுத்த பாசம்! - தொகுப்பாளர் விஷால் யாரு தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Oct 07, 2024 12:18 AM IST

பிக்பாஸ் வீட்டிற்குள் தொகுப்பாளர் விஷால் நுழைந்திருக்கிறார். அவர் யார், அவரின் பின்புலம் என்ன என்பதை பார்க்கலாம்.

‘கண்ணுங்களா உங்க எழில் வந்துருக்கேன்.. சென்னை பையன்.. பாக்கியலட்சுமி கொடுத்த பாசம்! - தொகுப்பாளர் விஷால் யாரு தெரியுமா?
‘கண்ணுங்களா உங்க எழில் வந்துருக்கேன்.. சென்னை பையன்.. பாக்கியலட்சுமி கொடுத்த பாசம்! - தொகுப்பாளர் விஷால் யாரு தெரியுமா?

பிக்பாஸ் 8

பிக் பாஸ் 8 ஆவது சீசன் தொடங்க போகிறது என சொன்னதில் இருந்து மக்கள் எப்போது தொடங்கும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். முந்தைய சீசன்களைப் போல் இல்லாமல், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.

பிக் பாஸ் சீசன் 8-ல் பிரபல தொகுப்பாளர் விஷால் நுழைந்திருக்கிறார்.  பாக்கியலட்சுமி சீரியலில் படித்ததன் மூலம் பிரபலமான இவர் அதன் பின்னர் கூப்பிட்டு கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானார். பாக்கியலட்சுமி சீரியலில் இவர் நடித்த எழிலன் கதாபாத்திரம் இவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது. ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கி இருக்கிறார் அதேபோல கலக்கல் சாம்பியன்ஸ் அது இது போன்ற நிகழ்ச்சிகளில் துணை இயக்குனர் ஆகவும் வேலை பார்த்திருக்கிறார்

யார் இந்த வி ஜே விஷால்? 

1996 ஆம் ஆண்டு 13ஆம் தேதி சென்னையில் பிறந்த விஷால் ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிச்சம் டிவியில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர், வேந்தர் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன் பின்னர் விஜய் டிவிக்குள் நுழைந்த விஷால்,  ‘கலக்கல் சாம்பியன்ஸ்’  ‘அது இது எது’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு  ‘கல்யாணமாம் கல்யாணம்’ சீரியலில் நடித்து தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கிய விஷால்  ‘அரண்மனைக்கிளி’  ‘பாக்கியலட்சுமி’  ‘தென்றல் வந்து என்னை தொடும்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இவர் ஏற்று நடித்த எழில் கதாபாத்திரம் இவருக்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. கூடவே, பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி சீசனிலும் பங்கேற்றார். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.