தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  திரும்பத் திரும்ப தோத்துகிட்டே இருக்கிங்களேடா.. நாமினேஷன் பாஸில் கோட்டை விட்ட ஆண்கள் அணி!

திரும்பத் திரும்ப தோத்துகிட்டே இருக்கிங்களேடா.. நாமினேஷன் பாஸில் கோட்டை விட்ட ஆண்கள் அணி!

Oct 25, 2024, 11:51 AM IST

google News
பிக்பாஸ் நாமினேஷன் ஃபிரி பாஸிற்காக நடத்தப்பட்ட 3 போட்டிகளில் பெண்கள் அணி 2ல் வெற்றி பெற்று நாமினேஷன் ஃபிரி பாஸை தன் வசமாக்கியது.
பிக்பாஸ் நாமினேஷன் ஃபிரி பாஸிற்காக நடத்தப்பட்ட 3 போட்டிகளில் பெண்கள் அணி 2ல் வெற்றி பெற்று நாமினேஷன் ஃபிரி பாஸை தன் வசமாக்கியது.

பிக்பாஸ் நாமினேஷன் ஃபிரி பாஸிற்காக நடத்தப்பட்ட 3 போட்டிகளில் பெண்கள் அணி 2ல் வெற்றி பெற்று நாமினேஷன் ஃபிரி பாஸை தன் வசமாக்கியது.

விஜய் டிவியின் முக்கிய ரியாலிட்டி ஷோவாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என தொடங்கப்பட்டு, 3வது வாரத்தை நிறைவு செய்ய உள்ளது.

எலிமினேஷன்

இந்தப் போட்டியில், முதல் வாரம் ஃபேட் மேன் ரவீந்தரும், இரண்டாம் வாரம் அர்னவ்வும் எலிமினேட் ஆகினர். இதையடுத்து, 3வது வாரம் தொடங்கிய முதல் நாளே இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலை பிக்பாஸ் வெளியிட்டது. அதில் போட்டியாளர்கள் முத்துக் குமரன், சௌந்தர்யா, அருண், சத்யா, ஜாக்குலின், அன்ஷிதா, தர்ஷா, பவித்ரா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

நாமினேஷன் ஃபிரி பாஸ்

இவர்களை எலிமினேஷனில் இருந்து வெளியில் கொண்டுவர பிக்பாஸ் அனைத்து வாரமும் நாமினேஷன் ஃபிரி பாஸ் கேமை நடத்தி வந்தது. அதன்படி, வாரத்தில் 3 நாட்கள் நடத்தப்படும் இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அவர்களுக்கு நாமினேஷன் ஃபிரி பாஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வாரத்திற்காக நடத்தப்பட்ட 3 நாமினேஷன் ஃபிரி பாஸிற்கான போட்டிகளில் 2ல் பெண்கள் அணி வெற்றி பெற்று நாமினேஷன் ஃபிரி பாஸை தன் வசமாக்கியுள்ளது,

இதனால், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் நபர் யார் என்பதை குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது.

அதிகளவில் நாமினேட் ஆன பெண்கள்

தற்போது உள்ள நாமினேஷன் பட்டியலைக் காணும் போது, ஆண்கள் அணியைக் காட்டிலும் பெண்கள் அணியினர் தான் அதிகளவில் இடம் பெற்றிருக்கின்றனர்.

மேலும், இந்த நாமினேஷன் ஃபிரி பாஸை வைத்து தங்கள் அணியிலுள்ள ஒருவரை காப்பாற்ற முடியும். அப்படி இருக்கையில் பெண்கள் அணியினர் யாரை காப்பாற்ற உள்ளனர். யாரை தங்கள் அணியிலேயே தக்க வைக்க உள்ளனர் என்பதை இந்த வார முடிவில் தான் தெரியவரும்.

நூல் விட ரெடியா

இந்த நிலையில் தான் பிக்பாஸ் அதன் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாமினேஷன் பாஸிற்கு நூல் விட ரெடியா என்ற போட்டியை நடத்தியது. அந்தப் போட்டியில், இரண்டு நூல்களுக்கு நடுவே ஒரு பந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த நூலிற்கு கீழே 1, 2, 3 என்ற வரிசையில் எண்கள் கொண்ட கண்ணாடி டம்ளர்கள் வைக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள், இரண்டு நூல்களுக்குள் உள்ள பந்தை எந்த கண்ணாடி டம்ளரில் கொண்டு வந்து சேர்க்கின்றனரோ அத்தனை புள்ளிகளை போட்டியாளர்கள் பெருவர் என அறிவிக்கப்பட்டது.

வெற்றி பெற்ற பெண்கள் அணி

இதையடுத்து, நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்த போட்டியாளர்கள் அனைவரும் பந்தை தங்களுக்கு தேவையான டம்ளரில் போட முயற்சி செய்தனர்.

இதையடுத்து, இந்த போட்டியாளர்கள் நூல் விட ரெடியா கேமில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், ஜெயித்தது யார் என பிக்பாஸ் அறிவித்தது. அதில், பெண்கள் அணி நாமினேஷன் ஃபிரி பாஸை வெற்றி பெற்றது தெரியவந்துள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி