கலந்துகட்டி அடிக்க உள்ள பிக்பாஸ் போட்டியாளர்கள்.. தயாரானது இந்த வார நாமினேஷன் லிஸ்ட்!
இந்தமுறை ஆண்கள் மற்றும் பெண்கள் அணியிலிருந்து யார் யாரை வேண்டுமானாலும் நாமினேட் செய்யலாம் எனக்கூறி பிக்பாஸ் வீட்டின் 3வது வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியுள்ளது.

கலந்துகட்டி அடிக்க உள்ள பிக்பாஸ் போட்டியாளர்கள்.. தயாரானது இந்த வார நாமினேஷன் லிஸ்ட்!
பிக்பாஸ் சீசன் 8 தொடங்கப்பட்டு நேற்றுடன் 2 வாரம் முடிவடைந்த நிலையில், இன்று 3வது வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது. கடந்த முறை பெண்கள் அணியினர் ஆண்களையும், ஆண்கள் அணியினர் பெண்களையும் நாமினேட் செய்ய வேண்டும் என்ற விதி அமலில் இருந்த நிலையில், தற்போது அது தகர்க்கப்பட்டுள்ளது. யார் யாரை வேண்டுமானாலும் நாமினேட் செய்துகொள்ளலாம் என பிக்பாஸ் அறிவித்தது.
நாமினேஷன் ப்ரோமோ
இதையடுத்து, போட்டியாளர்கள் அனைவரும் கடந்த 2 வாரத்தில் பெற்ற அனுபவங்களில் இருந்து யாரை வெளியேற்ற வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
நாமினேட் லிஸ்டில் ஜாக்குலின்
அந்தப் ப்ரோமோவின் படி, விஜே விஷால் ஜாக்குலினை நாமினேட் செய்துள்ளார். அவர் சாச்சனாவை ஓவர் ஷேடோ செய்வது போல் உள்ளதால் அவரை நாமினேட் செய்கிறேன் என காரணத்தைக் கூறியுள்லார்,